எய்ம்சுக்கு துட்டுதராத பட்டுஜெட்டு

 ராஜராஜன்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் அவ்வப்போது ஏதாவது ஒரு மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை மக்களிடம் பெறும் வரவேற்பைப் பெறுகின்றன. 

அந்த வரிசையில் சமீபத்தில் ChatGPT என்கிற சாட் பாட் டிரெண்டானது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தி எழுதவும், வரையவும் முடியும்.

சுரன்
சந்திரகுப்த மௌரியர் முதல் அலாவுதீன் கில்ஜி வரை அந்தக் காலத்து மன்னர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவம் கொடுத்திருக்கிறார். 
பள்ளிக்கூட வகுப்பில் இந்த மன்னர்களைப் பற்றிப் படித்திருப்போம். 


அவர்களைப் பற்றிக் கிடைக்கப்பெற்ற தகவல்களைக் குறிப்புகளைக் கொண்டு இந்தத் தொழில்நுட்பம் மூலம் தத்ரூபமாக வரைந்திருக்கிறார் மாதவ் கோலி.
செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி வரையப்பட்ட மன்னர்களின் படங்கள்:
 அசோகர், அக்பர், ஷாஜகான், பாபர், முதல் ராஜ ராஜ சோழன், ஜெஹாங்கிர் வரை மொத்தம் 21 மன்னர்களின் படங்களை வரைந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அவர். 
ட்விட்டரில் வெளியான சில மணி நேரங்களில் வைரலான இந்தப் பதிவை சமூக வலைதள பயனர்கள் பலரும் கருத்துகள் பதிவிட்டுப் பகிர்ந்து வருகின்றனர்.

பெரும்பாலான ஓவியங்கள் வரலாற்றுப் புத்தகங்களில் இருப்பது போன்று இருந்தாலும் சில படங்கள் வித்தியாசமானதாகவும் இருந்தன.
 பலரது லைக்ஸ்களை அள்ளிய இந்த பதிவுக்குப் பாராட்டுகளைத் தாண்டி சில எதிர்மறை கருத்துகளும் பதிவாகியிருந்தன. வரலாற்றில் குறிப்பிட்டது போல மன்னர்களின் படங்கள் இல்லை என்றும், ஒரே மாதிரியான முகத்தோற்றம் பயன்படுத்தியிருப்பதால் இந்து, முகலாய மன்னர்களிடத்தில் அதிக வேறுபாடு இல்லை என்றும் கருத்துகள் பதிவாகியுள்ளன.

மனித மொழியை இன்னும் நுட்பமாகப் புரிந்து கொள்ளும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் 2023ஐ ஆக்கிரமிக்கும் என்பது தொழில்நுட்ப வல்லுநர்களின் கணிப்பாக இருக்கிறது. 
கடந்த சில ஆண்டுகளாக அதிகம் கவனிக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் 2023ஆம் ஆண்டிலும் முக்கியத்துவம் பெறும் என்பதில் சந்தேகமில்லை.



பட்டுஜெட்டு.
இந்தியபட்ஜெட் 2023-24ல் இதுவரையிலான அறிவிப்புகளில் முக்கிய 10  பின்வருமாறு:

வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் தொடங்க இளைஞர்களை ஊக்குவிக்க சிறப்பு வேளாண்மை நிதி உருவாக்கப்படும்.
வேளாண் கடன் வழங்குவதற்கான இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிப்பு
சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு;
 மாநில அரசுகள், தனியாருடன் இணைந்து புதிய திட்டம் - இளைஞர்கள் தொழில் தொடங்க புதிய வாய்ப்புகளும், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும்
,
2014-க்கு பிறகு தொடங்கப்பட்ட 157 மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்து 157 செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் உருவாக்கப்படும்.
குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக நாடு முழுவதும் தேசிய டிஜிட்டல் நூலகம் உருவாக்கப்படும். அனைத்து தரப்பினர், மொழிகள், துறைகள், தொழில்நுட்ப சாதனங்களுக்கும் ஏற்ற வகையில் அது இருக்கும்.

நாடு முழுவதும் 740 ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிட பள்ளிகளில் அடுத்த 3 ஆண்டுகளில் 38,800 ஆசிரியர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கான நிதி 66 சதவீதம் அதிகரித்து ரூ.79,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் மூலதன முதலீடு 33 சதவீதம் உயர்ந்து, 10 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது நாட்டின் ஜி.டி.பி.யில் 3.3. சதவீதமாகும்.

மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும்.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நகரங்கள், பேரூராட்சிகளில் கழிவறைத் தொட்டி, சாக்கடைகளை இயந்திரங்கள் கொண்டு சுத்தம் செய்யும் நிலை உருவாக்கப்படும்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியானது. அதைத் தொடா்ந்து மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமா் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான நிதிகளை ஒதுக்குவதில் தாமதம் நீட்டித்து வருகின்றது.

இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட நிகழ்வாண்டிற்கான பட்ஜெட்டிலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கான நிதி ஒதுக்கவில்லை.

மொபைல் போன், கேமரா, டிவி உதிரிபாகங்களுக்கான அடிப்படை இறக்குமதி வரி 2.5 சதவீதமாக குறைப்பு
கேமரா உதிரிபாகங்கள், லென்ஸ்கள் மற்றும் லித்தியம் பேட்டரிகளுக்கான வரி விலக்கு மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிப்பு
தங்கம், வெள்ளி, வைரம், பித்தளை, சிகரெட் உள்ளிட்டவற்றின் இறக்குமதி வரி அதிகரிப்பு.

மின்சார வாகன பேட்டரிகளுக்கான வரி குறைப்பு
ரப்பர் மற்றும் ஆடைகளுக்கான இறக்குமதி வரியும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
விலை உயரும் பொருட்கள்
மின்சார சமையலறை புகைபோக்கி
தங்கம், பிளாட்டினத்தால் செய்யப்பட்ட பொருட்கள்
செம்பு ஸ்கிராப்
கலவை ரப்பர்
சிகரெட்டுகள்.

பொம்மைகள், மிதிவண்டி, கார் மற்றும் பைக் உள்ளிட்ட பொருட்களின் விலை குறையும்
இந்த நிதியாண்டில் பல அத்தியாவசியமற்ற பொருட்கள் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 தனியார் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், நகைகள், உயர்தர எலக்ட்ரானிக் பொருட்கள், உயர் பளபளப்பான காகிதம் மற்றும் வைட்டமின்கள் உள்ளிட்ட 35 பொருட்களுக்கு விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியல் பல அமைச்சகங்களின் பரிந்துரைகளின் பேரில் உருவாக்கப்பட்டது.
விலை குறையும் பொருட்கள்
கேமரா, மொபைல் போன்களின் லென்ஸ்
டிவி பேனல்களின் திறந்த கலங்களின் பாகங்கள்
நீக்கப்பட்ட எத்தில் ஆல்கஹால்
அமில தர பிளோர்ஸ்பார்
இறால் உள்நாட்டு உற்பத்தி.

புதிய வருமான வரி வரம்பு இந்த பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது வருமான வரி தள்ளுபடி வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தியது.
 தற்போது, 5 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்துவதில்லை, மேலும் புதிய வரி ஆட்சியில் தள்ளுபடி வரம்பை 7 லட்சமாக உயர்த்தியது ஒன்றிய அரசு.

அதானியின் திரும்பல்

ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபர்(FPO) மூலமாக 20,000 கோடி ரூபாய் திரட்டும் வேலையில் இறங்கியிருந்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம்,

ஜனவரி 27ம் தேதி  எஃப்.பி.ஓ. பங்கு விற்பனையை  தொடங்கியது. 
இதற்காக  ஒரு பங்கின் விலையாக 3,112 ரூபாய்க்கு எஃப்.பி.ஓ-வில்  அந்தக் குழுமம் அறிவித்தது.

இதற்கான விற்பனை ஆரம்பிக்கும் நேரமும்,அதானி  நிறுவனங்கள் முறைகேடுகள் பற்றிய ஹின்ட்ட்பர்க் ஆய்வு அறிக்கை வெளியான நேரமும்  ஒன்றாக இருந்தது.

இதைத்தான் இந்துத்துவாவினர் சனி ஆரம்பம் ,கெட்ட நேரம் ஆரம்பம் என்பார்கள்.

அதனால் உலகப் பணக்கார்ர்களில் 3 ம் இடத்தில் இருந்த கவுதம் அதானி 4,7,9 எனப் படிப்படியாக இறங்கி அந்த பத்துகள் பட்டியலில் இருந்தே வெளியேறி விட்டார்.
தற்போது அவர் இடம் 16. அதுதான் இன்றைய நிலவரம்.
முகேஷ் அம்பானியைவிட பின்னோக்கி பயணப்படுகிறார்.


அதானி நிறுவன  பங்கின் விலை நேற்று  2,348 ரூபாய்க்கு கிடைத்தது. 

இன்று காலை 2,348 ரூபாயுடன் தொடங்கிய அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மாலை பங்குச்சந்தை முடிந்த போது 1,565 ரூபாயாக இருக்கிறது.

இந்த விலை தொடர்ந்து குறைந்து கொண்டே போகும் நிலையில், புதிய பங்குகளை  3,112க்கு விண்ணப்பித்தவர்கள் பின் வாங்க ஆரம்பித்து அதானிக்கு குடைச்சல் தர ஆரம்பித்துவிட்டார்கள்.
பங்கு விலையை 1500க்கும் குறைவாக தங்களுக்கு விற்க முறையிட ஆரம்பித்து விட்டனர்.

 இதனால் திடீரென நேற்று இரவு எஃப்மிஒ முடிவில் இருந்து அதானி நிறுவனம் பின் வாங்கியது.

 தனது. பங்கு விற்பனையை திரும்பப் பெறுவதாக,நிறுத்திவிட்டதாக அறிவித்தது.

அதானி குழுமம் எஃப்.பி.ஓ-வில் வெளியிட்ட பங்குகள் முழுவதும் விற்பனை ஆகிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடிப்படை சரியில்லாமல் முறைகேடாக விரைவாக முன்னேறியவர்கள் கீழே விழுந்தால் அடி பலமாகத்தான் இருக்கும்.

அவர்கள் வீழ்ந்ததற்காக யாரும் வருந்தவும் மாட்டார்கள்.
அவர்களை வைத்து  பலனடைந்து பத்திரங்களைப் பெற்று முறைகேடாக வளர்ந்வர்களும் கூட. 
-----_---------------------_------------------_-------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?