நெட் ஆண்டர்சன்
நெட் ஆண்டர்சன்
ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் நேதன் எனப்படும் நெட் ஆண்டர்சன் ஆவார்.ஆண்டர்சன் இந்த நிறுவனத்தை 2017 இல் நிறுவினார்.
அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
ஆண்டர்சன் சர்வதேச வணிகம் பயின்று, ஃபேக்ட்-செட் ரிசர்ச் சிஸ்டம்ஸ் என்ற தரவு நிறுவனத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
2020 ஆம் ஆண்டில் வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த பேட்டியில், ஆண்டர்சன், "இவர்கள் மேலோட்டமான பகுப்பாய்வு செய்கிறார்கள் என்பதை நான் உணர்ந்தேன்." என்றார்.
ஆண்டர்சன் இஸ்ரேலில் சிறிது காலம் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருந்ததாக, செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.
ஆண்டர்சனின் லிங்க்ட்இன் சுயவிவரத்தில், "ஆம்புலன்ஸ் டிரைவராகப் பணிபுரியும் போது, மிகுந்த அழுத்தத்தில் எப்படி வேலை செய்வது என்று கற்றுக்கொண்டேன்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே சுயவிவரத்தில் அவருக்கு 400 மணிநேர மருத்துவ அனுபவம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல நேர்காணல்களில், ஆண்டர்சன் அமெரிக்க கணக்காளர் ஹாரி மோர்கோபௌலோஸை தனது முன்மாதிரியாகக் குறிப்பிடுகிறார்.
ஆண்டர்சனின் முன்மாதிரியான ஹாரி 2008 பெர்னார்ட் மடோஃப் போன்சி திட்டத்தின் ஊழலைப் பற்றி மக்களிடம் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
சமீபத்தில், நெட்ஃபிளிக்ஸில் த மான்ஸ்டர் ஆஃப் வால் ஸ்ட்ரீட் என்ற தொடர் வெளியானது. இது இவரைப் பற்றிய கதை தான்.
ஆனால் தற்சமயம் இவரது சீடர் நெட் ஆண்டர்சனால், பங்குச் சந்தையில் சலசலப்பு ஏற்பட்டு, அது நேரடியாக கௌதம் அதானியை பாதிக்கிறது.

இந்த நிறுவனத்தில், ஆண்டர்சன் முதலீட்டு மேலாண்மை நிறுவனங்களுடன் பணிபுரிந்தார்.

ஹிண்டன்பர்க்
1937 ஆம் ஆண்டு - ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி செய்து கொண்டிருந்தார்.
அந்தக் காலத்தில் ஹிண்டன்பர்க் என்ற ஒரு விண்கலம் இருந்தது.
விண்கலத்தின் பின்புறம் நாஜி சகாப்தத்தை குறிக்கும் ஒரு ஸ்வஸ்திகா சின்னம் பொறிக்கப்பட்டது.
அமெரிக்காவின் நியூஜெர்சியில், பூமியிலிருந்து இந்த விண்கலத்தை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அப்போதுதான் அசாதாரணமான காட்சி ஒன்றைக் கண்டனர்.
ஒரு பெரும் வெடி சத்தத்துடன் வானத்தில் ஹிண்டன்பர்க் விண்கலம் தீப்பிடித்தது.
மக்களின் அலறல் சத்தம் கேட்டது. விண்கலம் தரையில் விழுந்தது. 30 வினாடிகளுக்குள் பெரும் அழிவு.
உள்ளூர் மக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சிலர் காப்பாற்றப்பட்டனர். சிலர் உயிரிழந்தனர்.
எரியும் விண்கலத்தின் புகை வானத்தை சூழ்ந்து, பகலில் இரவை உருவாக்கியது. இப்போது எஞ்சியிருப்பது விண்கலத்தின் எச்சங்கள் மட்டுமே.
இந்த விண்கலத்தில் 16 ஹைட்ரஜன் வாயு பலூன்கள் இருந்தன. விண்கலத்தில் ஏறக்குறைய 100 பேர் கட்டாயமாக உட்கார வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு முன்பும் ஹைட்ரஜன் பலூன்களால் விபத்துகள் நடந்துள்ளன என்றும், அவற்றிலிருந்து பாடம் கற்றிருந்தால், இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.