பொறுப்பற்ற நிதியமைச்சர்

 அதானி விவ­கா­ரம் பொரு­ளா­தா­ரத்­தைப் பாதிக்­காது’ என்று நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் சொல்லி இருக்­கி­றார். எதை வைத்து இப்­ப­டிச் சொன்­னார்? 

எதை வைத்­தும் இப்­ப­டிச் சொல்­ல­வில்லை. ‘பாதிக்­காது’ என்று மட்­டும் சொல்லி இருக்­கி­றார். 

அவ­ரால் அதற்கு மேல் எது­வும் சொல்­லத் தெரி­ய­வில்லை.

நாட்­டின் பொரு­ளா­தா­ரக் கொள்­கை­க­ளும், பொரு­ளா­தா­ரச் சூழ­லும் வலு­வாக உள்­ளன என்று சொல்லி இருக்கிறார் நிர்­மலா சீதா­ரா­மன். 

அதானி விவ­கா­ரத்­தால் எவ்­வித பாதிப்­பும் ஏற்­ப­ட­வில்­லை­யாம். இந்­தி­யப் பங்­குப் பரி­வர்த்­தனை மைய­மான செபி­யும், இந்­திய ரிசர்வ் வங்­கி­யும் இதனை ஆராய்ச்சி செய்து வருகிறதாம். பங்­குச் சந்­தை­யில் ஏற்ற இறக்­கம் வரு­வது வழக்­கம் தானாம். 

அதானி விவ­கா­ரம் கிளம்­பிய இரண்டு நாட்­களில் கூட 800 கோடி அமெ­ரிக்க டாலர் மதிப்­பி­லான அந்­நி­யச் செலா­வணி இந்­தி­யா­வுக்­குக் கிடைத்­து­விட்­ட­தாம். 

இத­னால் இந்­தி­யப் பொரு­ளா­தா­ரம் வலி­மை­யாக உள்­ள­தாம். இது­தான் நிதி அமைச்சரின் கண்­டு­பி­டிப்­பு­கள்.

இந்­தி­யப் பொரு­ளா­தா­ரம் பா.ஜ.க.வின் கொள்­கை­க­ளால் நிலை­கு­லை­யத் தொடங்கி இருக்­கி­றது என்­ப­தன் அடை­யா­ளம்­தான் அதானி விவ­கா­ரம். 

இதனை பா.ஜ.க. இப்­போது கூட புரிந்து கொள்­ள­வில்­லை­யா­னால் இதன் மோச­மான விளை­வு­களை பொரு­ளா­தார ரீதி­யாக மட்­டு­மல்ல, அர­சி­யல் ரீதி­யா­க­வும் அக்­கட்சி சந்­திக்க வேண்டி வரும்.

ஏதோ ஒரு தனி­யார் ஆய்வு நிறு­வ­னம், ஏதோ ஒரு தனி­யார் தொழில் நிறு­வ­னம் குறித்து எழுப்­பும் சந்­தே­க­மாக இத­னைக் கடந்­து­விட முடி­யாது. அதானி குழு­மத்­தின் நிலை­யான தன்­மையை மட்­டு­மல்ல, இந்­தி­யப் பொருளா­தா­ரத்­தின் அடிக்­கட்­டு­மா­னத்தை அசைத்­துப் பார்க்­கும் தக­வல்­கள்­தான் இப்­போது வெளி­யாகி இருக்கி­றது. 

எந்த வகை­யில் அதானி நிறு­வ­னம் செயல்­பட்­டுள்­ளது, அதற்கு ஒன்­றிய அரசு எந்த வகை­யில் எல்லாம் உடந்­தை­யாக இருந்­துள்­ளது, அது இந்­தி­யப் பொரு­ளா­தா­ரத்தை எப்­படி எல்­லாம் நிலை­குலைய வைத்துள்ளது, வைக்­கும் என்­பதை மக்­கள் உணர்ந்­தாக வேண்­டும். மக்­க­ளுக்கு உணர்த்­தி­யாக வேண்­டும்.

கொரோ­னா­வுக்­குப் பிந்­தைய இரண்டு ஆண்­டு­க­ளில் அதானி குழு­மங்­களின் சொத்து மதிப்பு 819 விழுக்­காடு அதி­கம் ஆகி இருக்­கி­றது. இந்த வளர்ச்சி உண்­மை­யான வளர்ச்சி அல்ல என்­பதே ஹிண்­டன்­பர்க் அறிக்கை ஆகும். தங்­கள் நிறு­வ­னத்­தின் பங்கு மதிப்பை அதி­க­மா­கக் காட்டி மிக அதி­க­மான அள­வில் கடன் பெற்­றுள்ளது இந்த நிறு­வ­னம். ஒரே நேரத்­தில் பங்கு சந்­தை­யில் முறை­கே­டு­கள் நடந்­துள்­ளன. 

இதன் மூல­மாக முதலீட்டாளர்­களும் ஏமாற்­றப்­பட்­டுள்­ள­னர். 

அதானி குடும்ப உறுப்­பி­னர்­கள் வெளி­நா­டு­க­ளில் போலி­யான நிறு­வ­னங்­க­ளைத் தொடங்கி வரி ஏய்ப்­பி­லும், பண மோச­டி­யி­லும் ஈடு­பட்­டுள்­ளார்­கள். பா.ஜ.க. சொல்லி வந்ததற்கு முர­ணான செயல்­கள் இவை.

இந்­தி­யா­வில் கருப்­புப்­ப­ணத்­தை­யும், கள்­ளப்­ப­ணத்­தை­யும் ஒழிப்­ப­தற்­காக 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை செல்­லா­த­தாக ஒரு­நாள் இரவில் அறி­வித்­தது பா.ஜ.க. அரசு. 

இதனை இந்­தி­யா­வின் இரண்­டா­வது விடு­தலை நாள் என்­றெல்­லாம் சில ஞான சூனி­யங்­கள் சொல்­லித் திரிந்­தார்­கள். பா.ஜ.க. ஆட்­சிக்கு வந்­தால் கருப்­புப்­ப­ணம் மீட்­கப்­ப­டும், வெளி­நா­டு­க­ளில் பதுக்கி வைக்­கப்­பட்­டுள்ள பணங்­கள் மீட்­கப்­பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்­ப­டும் என்று சொன்­னார்­கள். ‘இந்­தி­யர்­கள் ஒவ்­வொ­ரு­வர் தலைக்­கும் 15 லட்­சம் தரப்­ப­டும்’ என்­றெல்­லாம் மிள­காய் அரைத்­தார்­கள்.

 இவை அனைத்­துக்­கும் விரோ­த­மா­கத்­தான் அதானி விவ­கா­ரத்­தில் நடந்து கொண்டுள்­ளார்­கள்.

2016- ஆம் ஆண்டு, ஏப்­ரல் 4-ஆம் தேதி பனாமா ஆவ­ணங்­கள் விவ­கா­ரம் அம்­ப­ல­மா­னது. ‘கடல் கடந்த வரி புகலி­டங்­க­ளி­லி­ருந்து வரும் பண வர­வு­களை கண்­கா­ணிக்க பல நிறு­வன விசா­ரணை குழுவை ஒன்­றிய அரசு முடுக்­கி­விட்­டுள்­ளது’ என்று அப்­போது நிதி அமைச்­ச­கம் அறி­வித்­தது.

சீனா­வின் ஹாங்­சோ­வில் நடந்த ஜி20 உச்­சி­மா­நாட்­டில் பேசிய பிர­த­மர் மோடி, ‘பொரு­ளா­தார குற்­ற­வா­ளி­களுக்­கான பாது­காப்பு புக­லி­டங்­களை அகற்­ற­வும், பண மோசடி செய்­ப­வர்­க­ளைக் கண்­டு­பி­டித்து நிபந்­த­னை­யின்றி நாடு கடத்­த­வும், சிக்­க­லான சர்­வ­தேச வலையை உடைக்­க­வும் நாம் செயல்­பட வேண்­டும்’ என்று கூறினார்­கள். 

ஆனால் நடந்­தது என்ன?

காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த ஜெய­ராம் ரமேஷ் சொல்­கிறார்: “கவு­தம் அதா­னி­யின் சகோ­த­ர­ரான வினோத் அதா­னி­யின் பெயர், பனாமா ஆவண கசி­வில் இடம்­பெற்­றது. அதில் அவர் ஹாமாஸ் மற்­றும் பிரிட்­டிஷ் விர்­ஜின் தீவு­க­ளில் கடல் கடந்த நிறு­வ­னங்­களை இயக்­கு­ப­வர் என கூறப்­பட்­டி­ருந்­தது. 

அவர் கடல் கடந்த ஷெல் நிறு­வ­னங்­க­ளின் (பெய­ர­ள­வில் செயல்­ப­டும் நிறு­வனங்­கள்) ஒரு பரந்த தளம் மூலம் கட்­டுப்­படுத்­தப்­பட்ட பங்கு கையா­ளு­தல், கணக்கு மோசடி ஆகி­ய­வற்றில் ஈடு­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.

ஊழலை எதிர்த்து போராடுவ­தில் உங்­கள் நேர்மை மற்­றும் நோக்­கம் பற்றி நீங்­கள் அடிக்கடி பேசி­னீர்­கள். பண மதிப்­பி­ழப்பு நட­வ­டிக்­கை­யும் எடுத்­தீர்­கள். 

உங்­க­ளுக்கு நன்கு அறி­மு­க­மான ஒரு தொழில் நிறு­வ­னம் கடு­மை­யான குற்­றச்­சாட்­டு­களை எதிர்­கொள்­கி­றது என்­கி­ற­போது, உங்­கள் விசா­ர­ணை­க­ளின் தரம் மற்­றும் நேர்மை­யைப் பற்றி எங்­க­ளி­டம் கூறு­வது என்ன?” - என்று கேள்வி எழுப்பி இருக்­கி­றார் அவர். நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் பதில் சொல்ல வேண்­டிய கேள்வி இது­தான்.

வினோத் அதா­னிக்­கும் கவு­தம் அதா­னிக்­கு­மான தொடர்­பு­கள் குறித்­துத்­தான் அதி­க­மான கேள்­வி­கள் கேட்­கப்ப­டு­கின்­றன.

 வினோத் அதானி இயக்­கு­ந­ராக இருக்­கும் நிறு­வ­னத்­தில் இருந்து கவு­தம் அதா­னிக்கு வந்த கடன்­கள் குறித்த கேள்­வி­க­ளுக்கு இது­வரை பதில் சொல்­லப்­ப­ட­வில்லை. வினோத் அதா­னிக்கு இவ்­வ­ளவு பணம் எங்­கி­ருந்து வந்­தது என்­பது குறித்த கேள்­விக்கு இது­வரை பதில் இல்லை. ‘இது குறித்து பதில் அளிக்­கும் நிலை­யில் நாங்­கள் இல்லை’ என்று கவு­தம் அதானி தனது பதி­லா­கக் கூறி இருக்­கி­றார்.

 வினோத் அதானி, அதானி நிறு­வ­னங்­க­ளில் 2010, 2011 ஆகிய ஆண்­டு­களில் பத­வி­கள் வகித்­த­வர். 

அதன்­பி­ற­கு­தான் விலகி இருக்­கி­றார். இந்­திய கார்ப்­ப­ரேட் விவ­கார அமைச்­ச­கத்­தின் விதி­மு­றை­க­ளுக்கு மாறாக வினோத்தை வெளி­யில் இருந்து செயல்­பட வைத்­தி­ருக்­கி­றார்­கள்.

இத­னால் இந்­தி­யப் பொரு­ளா­தார நிதிக் கொள்கை மோசடி செய்­யப்­பட்­ட­தா­கத் தானே பொருள்? 

இது இந்­திய மதிப்பை குறைக்­க­வில்­லையா? அதானி நிறு­வ­னத்­தின் பங்­குச் சந்தை மதிப்பு சரிவு என்­பது இந்­திய பொரு­ளா­தார நிதிச் செயல்­பாட்­டின் சரி­வைக் காட்­ட­வில்­லையா?

சேத்தன் பரேக்,ஹர்­ஷத் மேத்­தா­வைப் போல எத்­தனை ஆண்­டு­க­ளுக்கு இது மாறாத களங்­க­மாக இருக்­கப் போகி­றது?!





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?