ஆளுநர் "ஆர்.என்.ரவியா?ஆன்லைன் ரவியா"?

 ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைப்பது என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

சென்னை, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பலர் தங்களது இன்னுயிரை மாய்த்து வருகிறார்கள். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.


திருப்பி அனுப்பிய ஆளுனர் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது.

 பின்னர் இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக கடந்த ஆண்டு அக்டோபர் 28-ந்தேதி அனுப்பி வைக்கப்பட்டது. பல நாட்களாக கிடப்பில் போடப்பட்ட அந்த மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் திடீரென தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். 

கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சரவை கூட்டம் தமிழக சட்டசபை வருகிற 20-ந்தேதி கூடுகிறது. 

இதனையொட்டி தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் துரைமுருகன், நேரு, பொன்முடி உள்ளிட்ட அனைத்து அமைச் சர்களும் பங்கேற்றனர்.


ந்த கூட்டத்தில், தமிழக அரசின் பட்ஜெட் மற்றும் புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படும் தொழில்கள், விரிவாக்கம் செய்யப்படும் தொழில்கள் ஆகியவற்றுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
 தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியால் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா திருப்பி அனுப்பியது குறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாவை, சட்டசபை கூடும் போது மீண்டும் நிறைவேற்றி மீண்டும் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. 
இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அளித்த பேட்யில்
 
 இணையவழி சூதாட்டங்களை தடை செய்தல், இணையவழி விளையாட்டுகளை முறைப்படுத்துதல் தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட  ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதிலுள்ள சந்தேகங்களை ஆளுநர் கேட்டபோது அதற்கான விளக்கத்தை அளித்திருந்தோம்.

ஆனால் அந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று கூறி சட்ட மசோதாவை 
ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். 
ஆனால் சட்டத்தை இயற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது.
 அதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தவரும் அவர்தான். ஏற்க முடியாது கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இயற்றப்பட்ட அதுபோன்ற சட்டத்தை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தபோது, சட்டத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அவற்றை நிவர்த்தி செய்யுங்கள், அதன் பிறகு புதிய சட்டம் இயற்றுங்கள், அதற்கு தடையில்லை என்றுதான் நீதிபதிகள் உத்தரவிட்டார்கள். 
அதன்படி, சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று ஐகோர்ட்டு கூறியிருக்கிறது. ஆனால் அரசுக்கு அதிகாரம் இல்லை என்றுஆளுந ர் கூறுகிறார். 
அரசியல் சாசனத்தின் 34-வது பிரிவின்படி, மாநில பட்டியலில் உள்ள பொது அமைதி, பொது சுகாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு, 'பெட்டிங்' மற்றும் சூதாட்டம் ஆகியவற்றை மையமாக வைத்துத்தான் சட்டம் இயற்றினோம்.

ஆனால் கவர்னர் அதன் 31-வது பிரிவின்படி, 'திறமைகளுக்கான விளையாட்டு' என்று எடுத்துக்கொண்டு, அதில் சட்டம் இயற்ற முடியாது, அதிகாரம் இல்லை என்று கூறி அரசின் விளக்கத்தை நிராகரித்திருக்கிறார். அது ஏற்கக்கூடியது அல்ல. 

மோசடிக்கு வாய்ப்பு ஆன்லைன் (இணையவழி) விளையாட்டு, ஆப்லைன் (நேரடி) விளையாட்டு என்பதன் வித்தியாசத்தை ஏற்கனவே தெளிவுபடுத்தி இருக்கிறோம். அந்த மசோதா, 'திறமைகளுக்கான விளையாட்டு' என்பதற்கான சட்டம் இல்லை. திறமைகளுக்கான விளையாட்டு என்பது ஆட்கள் நேரடியாக அமர்ந்து விளையாடும் விளையாட்டு. நேரடியாக இருக்கும்போது யாரையும் யாரும் மோசடி செய்ய முடியாது. 
ஆன்லைன் விளையாட்டுக்காகத்தான் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டு என்பது ஒரு சார்பான முன்தயாரிப்போடு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படும் விளையாட்டு. 
ஆன்லைனில் எந்த சீட்டையும் மாற்றி மோசடி செய்ய முடியும். அதனால்தான் அதை தடை செய்ய அரசு முன் வந்தது. 
அதற்கான சட்ட மசோதாவை ரவி திருப்பி அனுப்பிவிட்டார். 
மீண்டும் மசோதா எனவே, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி, ஒப்புதலுக்காக மீண்டும் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறி அதை திருப்பி அனுப்புவோம். 
இதுபற்றி சட்டசபையில் மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும்போது, புதிய கருத்துகள் தெரிவிக்கப்பட்டால் அதை சேர்க்க வாய்ப்புள்ளது. 
ஆன்லைன், ஆப்லைன் சட்டத்தில் உள்ள விஷயங்களை எடுத்து திருப்பி திருப்பி அதையேஆர்.என். ரவி கேட்டிருக்கிறார். இதில் அரசு கோர்ட்டுக்கு போக வேண்டிய அவசியம் எழவில்லை. 
ஏனென்றால், இதில் சட்டம் இயற்றும் அதிகாரத்தை கோர்ட்டு ஏற்கனவே தந்துவிட்டது. 
அந்த சட்டத்தை இயற்றுவதற்கு முன்பு பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்தையும் அரசு கேட்டு பெற்றது. 95 சதவீத மக்களின் ஆதரவோடுதான் அந்த சட்டம் இயற்றப்பட்டது. 
 2-வது முறையாக சட்டம் இயற்றி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும் போது அதை ஆளுநர் நிராகரிக்க எந்த வாய்ப்பும் கிடையாது. 
இந்த மசோதா தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை எங்களிடம் விளக்கம் கேட்டனர். அதில் எங்கள் ஆட்சேபனைகளை தெளிவாக கூறி விட்டோம்.
 மக்களை காப்பாற்றுவதற்காக கொண்டு வந்த சட்டம் அது. கண்துடைப்புக்காக கொண்டு வரவில்லை.
 நடைபெறவுள்ள சட்டசபை கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா மீண்டும் கொண்டு வரப்படும். 2-ம் முறையும் அதை ரவிக்கு அனுப்பி வைப்போம். அதையும் கிடப்பில் போட்டால் அப்போது பார்க்கலாம். 

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநருக்கு முறையான விளக்கத்தை அரசு அளிக்கவில்லை என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறுவது பற்றி கேட்டால், அதற்கு எனது கேள்வி, இன்று ஆளுநர் ரவியா? அண்ணாமலையா? எங்களிடம் அவர் கேட்ட விளக்கமும், நாங்கள்

கொடுத்த விளக்கமும் அண்ணாமலைக்கு என்ன தெரியும்?எப்படித் தெரியும்? 
'நான் இந்த விளக்கம் கேட்டேன், அதை அரசு தரவில்லை' என்று அண்ணாமலையிடம் ஆளுநர் கூறினாரா?
 இந்த ரகசியங்களை பற்றி அண்ணாமலையிடம் கவர்னர் ஆலோசித்து வருகிறாரா? 
கவர்னர் கேட்கும் விளக்கங்களை கொடுக்க நான் தயார். 
 சட்ட மசோதாவை நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த பிறகு இதுவரை 12 பேர் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக தற்கொலை செய்துவிட்டனர். 
இதற்கு யார் பொறுப்பு என்பதை நீங்கள் சொல்லுங்கள். இதுபற்றியும் சட்டசபையில் விவாதிப்போம். 
ஆன்லைன் சூதாட்டத்தினால் தமிழக அரசுக்கு எந்த வருமானமும் வரவில்லை. 

ஆனால் ஒன்றிய அரசுக்கு ஜி.எஸ்.டி. வருகிறது, அதனால் அந்த விளையாட்டை நிறுத்த மாட்டார்கள் என்று நீங்கள் கூறினால், அதுபற்றி நான் பேசக்கூடாது.
 அரசியல் சாசனம் 34-ம் பிரிவின்படி இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. அதை நாங்கள் செய்து காட்டுவோம். 
ஒருவர் மீது புகார் கொடுத்தால், புகாருக்கு ஆளானவரை யாரும் அழைத்துப் பேசுவார்களா?. 
ஆனால் ஆன்லைன் விளையாட்டை நடத்துகிறவர்களைஆளுநர் ரகசியமாக சந்தித்ததாக ஒரு தகவல் உள்ளது. ஏன் இந்த ரகசியம்?இவர் மக்களுக்கானவரா,
தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே அதை தடை செய்ய வேண்டும். ஆனால் தமிழகத்தில் அதை முன்மாதிரியாக செய்ய விரும்புகிறோம்.
 மற்ற மாநிலங்களும்
அதை தடை செய்யும்படி கேட்கிறோம்.
 தெலுங்கானாவிலும் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டு உள்ளது.
என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
-------------------------------------------------------
ஆன்லைன் ரவி பார்வைக்கு.

”எனது கணவர் இப்படியொரு விளையாட்டை விளையாடி வந்திருக்கிறார் என்பதே அவர் இறப்புக்கு பிறகுதான் எங்களுக்கு தெரிய வந்தது. குடும்பங்களை நேசிக்கும் ஒரு பொறுப்பான குடும்ப தலைவராக அவர் இருந்தார். இந்த சூதாட்டம் இப்போது எங்கள் குடும்பத்தையே சிதைத்துவிட்டது” என்று கலங்குகிறார் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்ட வினோத் குமாரின் மனைவி லதா.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இந்த விளையாட்டை விளையாடி வருபவர்கள் படிக்காதவர்களோ அல்லது ஒன்றும் தெரியாத முட்டாள்களோ அல்ல. அனைவரும் தெரிந்தேதான் இதற்குள் செல்கிறார்கள். ஆனால் விளையாட்டு, விளையாட்டாக மட்டுமல்லாமல், எப்படி இவர்களை கடனாளியாக ஆக்குகிறது? இன்று ஆன்லைனில் கொட்டி கிடக்கும் லோன் வழங்கும் ஆப்கள்தான் இவர்களின் மரணத்திற்கு காரணம். ஒரே ஒரு ஆதார் கார்டு எண் இருந்தால் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் இந்த ஆப்களில் கடன் பெற்று கொள்ளலாம். எனது கணவரும் இப்படியான ஒரு மோசடியில் சிக்கிதான் இன்று தன் உயிரை விட்டிருக்கிறார்” என்று ஆதங்கத்துடன் கூறுகிறார் லதா.

”நாங்கள் வசிப்பது வாடகை வீட்டில்தான். எங்களுக்கென எந்தவொரு சொத்தோ, பின்புலமோ கிடையாது. எனது கணவர் மெடிக்கல் பிரதிநிதியாக இருந்தார். நானும் ஒரு மருந்தகத்தில் பணியாற்றி வருகிறேன். எங்களை போன்ற குடும்பங்களில் இருப்பவர்களுக்கு இந்த ஆன்லைன் லோன் ஆப்கள் எப்படி இவ்வளவு கடனளிக்கிறது என்பதை என்னால் கொஞ்சம் கூட புரிந்துகொள்ள முடியவில்லை” என்று ஆன்லைனில் நடக்கும் மோசடிகளை சுட்டிகாட்டுகிறார் அவர்.

தான் ஆன்லைனில் சூதாட்டம் விளையாடியது குறித்தும், அதனால் ஏற்பட்ட இருபது லட்சம் ரூபாய் கடன் குறித்தும் ஆறு மாதத்திற்கு முன் தனது மனைவி லதாவிடம் முதன்முதலாக தெரிவித்திருக்கிறார் வினோத் குமார் . அப்போது லதா அவருக்கு கொடுத்த அறிவுரையின் பேரில், சூதாட்ட ஆப்களை மொபைலில் இருந்து நீக்கம் செய்திருக்கிறார்.

அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு செப்டம்பர் 26ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அக்டோபர் 1ஆம் தேதி ஒப்புதல் அளித்தார். இதனை தொடர்ந்து இடைப்பட்ட சிறுதுகாலம் இந்த விளையாட்டுகள் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த அவசர சட்டம் கடந்த நவம்பர் 27ஆம் தேதி காலாவதியானது. இதனை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட ஆப்கள் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தன.

இதற்கு பின்னர்தான் வினோத் குமார் மீண்டும் சூதாட்டத்தில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.

”தடைக்கு பின் மீண்டும் அமலுக்கு வந்த ஆன்லைன் சூதாட்ட ஆப்கள், மிக அதிகளவில் Upgrade ஆகியிருந்தன” என்கிறார் லதா.

இதுகுறித்து அவர் பேசுகையில் “சூதாட்ட ஆப்களை தடை செய்திருந்த காலத்தில் எனது கணவர் மிகவும் இயல்பாகத்தான் இருந்தார். எங்கள் வாழ்க்கை மிகவும் நிம்மதியாக சென்றுக் கொண்டிருந்தது. ஆனால் தடை நீங்கி மீண்டும் அந்த ஆப்கள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு , எனது கணவர் மறுபடியும் விளையாடத் துவங்கினார் என்பது எனக்கு தெரியாது.

நாங்கள் இல்லாத நேரங்களிலும், அலுவலக வேலைகளின்போதும் அவர் இந்த விளையாட்டில் ஈடுபட்டு வந்திருக்கிறார். முன்பு இருபது லட்சமாக இருந்த கடன், தற்போது எண்ணிலடங்கா லட்சங்களில் இருக்கிறது. அவரது மொபைலில் எண்ணற்ற லோன் வழங்கும் ஆப்கள் இருந்தன. இது அனைத்துமே அவர் இறந்த பிறகு அவர் எங்களுக்காக எழுதி வைத்திருந்த கடிதங்கள் மூலமாகவும், அவரது மொபைலை ஆய்வு செய்ததன் மூலமாகவும்தான் தெரிய வந்தது” என்று தெரிவிக்கிறார்.

“இப்போது எனது குடும்பம் நிர்கதியாக நிற்கிறது. முழு ஆண்டு தேர்வு எழுதவிருந்த எனது இரண்டு குழந்தைகள், அதனை எழுத முடியவில்லை. இறப்பதற்கு முன்பு எனது கணவர் எவ்வளவு மன அழுத்தத்தில் இருந்தார் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இப்படியான ஆப்களை மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிப்பதால் எங்களை போன்ற எத்தனையோ குடும்பங்களை அனாதை ஆகின்றன. இந்த சமூகத்தில் கொரோனா போல சூதாட்டமும் ஒரு தொற்று நோயாக பரவி வருவது ஆர்.என்.ரவி ,நீதிமன்ற்ங்கள்  கண்களுக்குத் தெரியவில்லையா?” என்று கேள்வியெழுப்புகிறார் லதா..



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?