செ(யற்கை)றிவூட்டப்பட்ட அரிசி

 சில ஆண்டுகளுக்கு முன் சீனாவில் ஒரு பன்னாட்டு கம்பெனி அரிசியை மாவாக்கி அதில் சில ரசாயனங்களை கலந்து மீண்டும் இயந்திரத்தின் மூலம் அதை அரிசியாக்கியது.

 இந்த அரிசியை சாப்பிட்டால் ரத்த சோகை குணமாகும் என்று விளம்பரப்படுத்தி சாதாரண அரிசியை விட 2 மடங்கு விலைக்கு விற்றது.

அன்றைய தினம் அந்த அரிசியைத்தான் சீன பிளாஸ்டிக் அரிசி என்று அது பேசப்பட்டது அந்த அரிசியை சாப்பிட்ட மக்களுக்கு ரத்த சோகை குறைந்தாலும் ரத்த கொதிப்பு சர்க்கரை நோய் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

 பின்னர் சீன அரசு அந்த அரிசிக்கு தடை விதித்தது .

ஆனால் அந்த அரிசியை இந்தியாவில் ஒரு

கார்ப்பரேட் நிறுவனம் தயாரித்து ஒன்றிய அரசுக்கு வழங்கியது இந்திய உணவு பாதுகாப்பு வாரியத்தின் கட்டுப்பாடு காரணமாக பொது மக்களுக்கு வழங்கும் ரேஷன் அரிசியில் நூற்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் அது கலக்கப்பட்டது.

அதைத்தான் செறிவூட்டப்பட்ட அரிசி என்ற பெயரில் இந்தியா முழுக்கநூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒன்றிய அரசால்அது விநியோகிக்கப்பட்டது.

 அவற்றில் நம் விருதுநகர் மாவட்டமும் அடங்கும்..

அந்த செறியூட்டப்பட்ட அரிசி கலந்த ரேஷன் அரிசியை தமிழ்நாடு அரசு அடுத்த மாதம் முதல் தரப்போவதாய் அறிவித்திருக்கிறது 

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்இதில் அவசரம் காட்டாமல் ஒன்றிய அரசு அந்த அரிசியை விஞ்ஞானிகள் மூலம் ஆராய்ச்சி செய்த முடிவுகளை முதலில் வெளியிடுமாறு கேட்க வேண்டும் அதன் பிறகு இதை விநியோகிப்பதா வேண்டாமா என முடிவு செய்ய வேண்டும் .

குறிப்பு:- நாம் வாங்கும் ரேஷன் அரிசியில் அந்த செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க எளிமையான வழி ஒன்று உள்ளது 

தண்ணீரில் அரிசியை ஊற வைக்கும் போது அந்த அரிசி மட்டும் மேலே மிதக்கும்.

இதன் மூலம் பிளாஸ்டிக் அரிசியை எளிதாக கண்டுணரலாம்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?