ஏமாறாதே...,ஏமாறாதே...
வாங்கிய பொருளுக்கு கூகுள் பேயில் பணம் அனுப்பவதாக கூறி 65 ஆயிரத்திய லபக்கிய சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கோவில்பட்டி மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் கார்த்திகேயனிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் இருந்து சாயில் குமார் என்ற பெயரில் வாட்ஸ் அப்பில் ராணுவ வீரர் உடையுடன் இருந்த நபர் தனக்கு பர்னிச்சர் சாமான்கள் வேண்டும் எனவும், சாத்தூரில் உள்ள ஒரு நபருக்கு அன்பளிப்பு அளிக்க வேண்டும், உங்களது கடையை ஆன்லைன் மூலம் பார்த்து தெரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்
இதைத் தொடர்ந்து கார்த்திகேயன், ராணுவ வீரரான சாகுல் குமாருக்கு வாட்ஸ் அப் மூலம் சோபா, மேஜை, கட்டில் உள்ளிட்ட பல்வேறு மாடல் படங்களை அனுப்பி உள்ளார்.
அதையடுத்து கார்த்திகேயனிடம் மீண்டும் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட சாயில் குமார், தனக்கு வேண்டிய சோபா மற்றும் கட்டில் படங்களை காட்டி, இதற்கான விலை எவ்வளவு என்று கேட்டுள்ளார். 80 ஆயிரம் என்ற உடன் முதலில் 65 ஆயிரம் ரூபாயை கூகுள் பே மூலம் அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து தங்களது நிறுவனத்தின் கூகுள் ஸ்கேனரை சாயில் குமாருக்கு வாட்ஸ் அப் மூலம் கார்த்திகேயன் அனுப்பி உள்ளார். அதைத்தொடர்ந்து மீண்டும் வாட்ஸ் அப் மூலம் கார்த்திகேயனை தொடர்பு கொண்ட சாயில்குமார், நான் ராணுவத்தில் இருப்பதால் தங்களுக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்ப முடியாது.
எனவே தங்களது வங்கி கணக்கு விவரங்களை தாருங்கள், அதன் மூலம் பணம் அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து கார்த்திகேயன் தனது மகன் வங்கி கணக்கு எண்ணை சாயில் குமாருக்கு அனுப்பி உள்ளார். இதில் இரண்டு தடவை ஒரு ரூபாய், ஒரு ரூபாய் என போட்ட சாயில் குமார், அடுத்த கட்டமாக தான் ரூபாய் 65 ஆயிரம் அனுப்புவதாக கூறியுள்ளார்.
பின்னர் கூகுள் பே மூலம் 65 ஆயிரம் ருபாய்க்கான லிங்க் அனுப்பி கார்த்திகேயன் மகன் வங்கி கணக்கில் இருந்து உடனே 65 ஆயிரம் எடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் மற்றும் அவரது குடும்பத்தினரும் சாயில் குமாரை தொடர்பு கொண்டு, எங்களது அக்கவுண்டில் இருந்து பணத்தை எடுத்து உள்ளீர்கள் என கேட்டதற்கு எனக்கு கூகுள் பே மூலம் ரூ.500 போடுங்கள் உங்களுக்கு உங்கள் பணத்தை திருப்பித் தருகிறேன் எனக் கூறியுள்ளார்.
பின்னர் அதனைத் தொடர்ந்து 35 ஆயிரம் மற்றும் 18 ஆயிரம் அனுப்புகிறேன் என மீண்டும் அதே போல் ரெக்வஸ்ட் கொடுத்துள்ளார். பின்னர் சுதாரித்துக் கொண்ட கார்த்திகேயன், தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட கார்த்திகேயன், தூத்துக்குடி மாவட்ட சைபர் க்ரைம் குற்றப்பிரிவு காவல் துறையில் மோசடி நபர் சாயில் குமார் குறித்து ஆன்லைனில் புகார் அளித்துள்ளார்.
ஏற்கன்வே காவல்த்துறை ஜி பேயில் பணம் அனுப்புவது தொடர்பாக கவனமுடன் செயல்பட்க்கூறியும் மக்கள் தொடர்ந்து ஏமாறுவது கவலை தருகிறது.
திரைப்பட் ஆபாசக் காட்சிகளைத் தடுக்க நீதிபதிகளால் இயலாது.
தற்போது, அந்தரங்க காட்சிகள் வெளிப்படையாக காண்பிக்கப்படுகிறது. இதனை வரைமுறைப்படுத்த சட்டம் அவசியம்" என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்னா காண்டாவின் கருத்துதான் தற்போது சமூக வலைதளங்களில் , பேசுபொருள் .
நீதிபதி ஸ்வர்னாவின் கருத்து குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தனது எண்ணத்தைக் கூறும்போது:-,
"இந்தியாவில் சென்சார் போர்டு வந்த பிறகு திரைப்படங்களுக்கென்று சில வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டுவந்தார்கள். இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 294-ன்படி ஆபாசக் காட்சிகள் தடை செய்யப்பட்ட ஒன்றாக உள்ளது.
அதனால், படங்களில் ஆபாசக் காட்சிகளைக் காட்ட குறியீடு தேவைப்பட்டது. காதல் காட்சி என்றால் திரைமறைக் காயாக பூக்களையும் முத்தக் காட்சிகளுக்கு வானத்தையும் காட்டினார்கள். பின்பு, ஹாலிவுட் படங்களில் ஆபாசக் காட்சிகள் இடம்பெற்றபோது, நம் படங்களில் ஏன் இல்லை என்ற கேள்வி எழுந்ததால், விதிகளைக் கொஞ்சம் தளத்தினார்கள். அதனைத்தொடர்ந்து, பாலிவுட் படங்களில் ஆபாசக் காட்சிகள் இடம்பெற்றன.
ஆனால், பிராந்திய மொழிப்படங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. அதற்கும், கேள்வி எழுந்ததால்தான், யு, யு/ஏ, அடல்ட் என்று மூன்று விதமான சான்றிதழ்களை கொண்டு வந்தார்கள்.
இதில், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் அடல்ட் சான்றிதழ் பெற்றப் படங்களுக்கு பெண்கள் வரமாட்டார்கள் என்பதால் யு/ஏ சான்றிதழ் வாங்கவேண்டும் என்று சில காட்சிகளை திரைமறைவுக் காயாகவும் காட்டினார்கள்.
ஆனால், அதெல்லாம் அந்தக் காலம். இன்றைய சூழல் அப்படியல்ல. ஊடகங்கள் பெருகிவிட்டன. சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.
பெட்ரூமில் இருந்தபடியே சிறுவர்கள்கூட எதையும் பார்க்கலாம் என்ற அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. எல்லோரிடமும் ஆன்ட்ராய்டு போன் இருக்கிறது. உலகமே கைகளில் சுருங்கிவிட்டது.
அதனால், இந்த நீதிபதி ஸ்வர்னா காண்டா சொல்வதெல்லாம் பழங்காலத்துக் கதை. அவர் செயல்படுத்தச் சொல்லும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முடியாது.
இன்றைய இளைஞர்களிடம் பழைய படங்களைக் காட்டினால் திரும்பி வேறு வழியில் சென்றுவிடுவார்கள்.
ஆழ்ந்த அர்த்தம் கொண்ட சினிமா பாடல்கள், காட்சிகள் யாருக்கும் புரியப்போவதில்லை. அதற்கு, நேரடியாகவே சொல்லிவிட்டுப் போகலாம்.மு
ம்பை பார்களில் பெண்கள் சர்வீஸ் செய்யலாம் என்ற நடைமுறை வந்தபோது, மராட்டிய அரசு தடை செய்தது. அதேபோல, பார்களில் பெண்கள் நடனமாடுவதற்கும் தடை விதித்தது.
இப்படி, பெண்களின் உரிமைகள் நசுக்கப்பட்டபோது, சம உரிமை கொடுக்கவேண்டும் என்றுசொல்லி உச்சநீதிமன்றம்தான் இத்தடைகளை உடைத்தது.
காலம் மாறிவிட்டது.
இன்று தன்பாலின உண்ரவாளர்களையும் புரிந்துகொண்டு சமூகம் அரவணைக்கத் தொடங்கியிருக்கும் சூழலில், நீதிபதி ஸ்வர்னா உயர் நீதிமன்றத்தில் அமர்ந்துகொண்டு இப்படி பேசுவதில் அர்த்தமே கிடையாது.
அனைத்தும் உலகமயமாகிவிட்டபோது, இதைமட்டும் எப்படி லோக்கலாக மாற்ற முடியும்? ஒவ்வொருவரின் கையிலும் ஆண்ட்ராய்டு போன் வந்துவிட்டது.
வேண்டா வெறுப்பாக லிங்க்குகள் தானாகவே குவிகின்றன. அதையெல்லாம் யார் தடுக்கிறார்கள்?
இந்த உலகம் போகின்ற போக்கை நீதிபதிகளால் எல்லாம் மாற்றமுடியாது" என்றார்.
------------------------------------------------------------------------------------------------------------------------