புல்வாமா தாக்குதல் மர்மம்

 பிப்ரவரி 2019, ஜம்முவில் பனிப்பொழிவு காரணமாக CRPF ராணுவ வீரர்கள் 2500 பேர் ஆங்காங்கே மாட்டிக்கொள்கின்றனர்.

 அவர்களை சாலைவழியாக கூட்டி வருவது சிரமமாகிறது. சாலைகள் பனிக்கட்டியால் நிரம்பிவழிகின்றன. 

ஆதலால் CRPF Officers தங்களின் தலைமையகத்திற்கு 2500 வீரர்களை பாதுகாப்பாக  மீட்டு அழைத்துவர 5 விமானம் கேட்டு கடிதம் எழுதுகிறது.

 CRPF தலைமையகம் உள்துறை அமைச்சகத்திற்கு இதுகுறித்து கடிதம் அனுப்புகிறது. 

இதற்கு உள்துறை அமைச்சகம் பதில் அனுப்பவில்லை. 

அதனால் CRPF Officers வேறுவழியின்றி தங்கள் வீரர்களை மீட்க 78 வாகனம்( பேருந்து போன்றது) தயார் செய்து அனுப்புகிறது. அதில் வீரர்கள் அனைவரும் ஏறி வருகின்றனர். 

அவர்கள் பயணித்து வரும் பாதை 8-9 குறுக்கு சாலைகளை கொண்டது. அந்த சாலைகள் பாதுகாப்பான சாலைகள் அல்ல. 

அவற்றில் ரோந்துப்பணி காவலர்கள் பணியமர்த்தப்படவில்லை. யார்வேண்டுமானாலும் வந்து செல்லும் பொதுவான குறுக்குவழி சாலைகள். ஆனால் CRPF வீரர்கள் அந்த வழியில் பயணிக்கும்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்திருக்கவேண்டும். 

ஆனால் அதை உள்துறை அமைச்சகமோ ஜம்மு காஷ்மீர் காவல்துறையோ அதை செய்யவில்லை. அந்த குறுக்குவழி சாலைகளில் இருந்து ஒரு கார் வருகிறது. அதில் சுமார் 300 கிலோ RDX நிரம்பியுள்ளது. அந்த கார் CRPF வீரர்களை தாங்கிவரும் வாகனத்தோடு மோதுகிறது. 

வாகனம் வெடித்து சிதறி 40 வீரர்கள் உயிர் இழக்கின்றனர். 

இது நிகழும்போது பிரதமர் மோதி  Jim Corbett விலங்குகள் சரணாலயத்தில் சூட்டிங் நடத்திக்கொண்டிருந்தார். 

சூட்டிங் முடிந்து வெளிவந்த பிரதமர் மோதிக்கு இந்த விசயம் குறித்து ஆளுநர் சத்யபால் மாலிக் போன்மூலமாக தெரிவிக்கிறார்.

ஆளுநர் கூறும்போது 'இது முழுக்க முழுக்க உள்துறை அமைச்சகத்தின் நிர்வாக திறமையின்மை மற்றும் Intelligence Failure' என்று சொல்கிறார். 

அதற்கு பிரதமர் இதுகுறித்து நீ அமைதியாக இரு. வெளியில் ஒன்றும் பேசாதே என்கிறார். ஏன் அப்படி சொன்னார் பிரதமர்? 

அப்போதைய நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர்  அஜித் டோவல் அவர்களும் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறார். 

ஏன் அவர் அப்படி சொன்னார்?

2019 பிப்ரவரியில் இந்த சம்பவம் நடக்கிறது. மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. பாகிஸ்தானை குற்றவாளி ஆக்கி தேர்தலில் அமோக வெற்றி பெறுகிறார். 

ஒரு சாமானியனாக எனக்கு சில கேள்விகள் உண்டு.

1. வீரர்களை மீட்க விமானங்கள் ஏன் அனுப்பபடவில்லை?

2. CRPF தலைமையகம் விமானம் கேட்டு அனுப்பிய கடிதத்திற்கு ஏன் உள்துறை அமைச்சகம் பதில் அனுப்பவில்லை?

3. அப்போதைய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஏன் இந்த கடிதத்திற்கு பதில் அளிக்கவில்லை?

4. ஜம்முவின் கிராம சாலைகளில் 10-12 நாட்களாக 300 கிலோ RDX வைத்துக்கொண்டு எப்படி சோதனைகள் இன்றி ஒரு கார் சுற்றிக்கொண்டு திரிந்தது?

5. ஜம்மு காவல்துறை ஏன் சாலையில் பரிசோதனை செய்யவில்லை?


6. ராணுவ வீரர்கள் பனிப்பொழிவில் சிக்கி தவித்துகொண்டிருக்கும்போது அவர்களை மீட்கும் வழியில் இறங்காமல் பிரதமர் மோதி Jim Corbett ல் ஏன் சூட்டிங் நடத்திக்கொண்டிருந்தார்?

7. இதுதான் பிரதமரின் நிர்வாக திறமையா? இதற்கு காரணமாக இருந்த ராஜ்நாத்சிங்கை ஏன் பதவிநீக்கம் செய்யவில்லை?

8. Intelligence எப்படி இந்த தாக்குதலை அறியாமல் இருந்திருக்கமுடியும்? தாக்குதல் நடக்கபோவது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதா? தெரிந்தது எனில் ஏன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை?

9.தேர்தலில் வெல்ல எல்லோரும் சேர்ந்து கூட்டுசதியில் ஈடுபட்டார்களா?

மக்களே சிந்தியுங்கள்.பகுத்தறிவுடன் உணருங்கள்.


புல்வாமா மீது தாக்குதல் நடந்தவுடன், நான் இந்திய உள்துறை அமைச்சகத்தின் செயலற்றதனம்தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்றேன், 

கார்பட் தேசிய பூங்காவிற்கு வெளியே வந்த பிரதமர், “இது குறித்து பேச வேண்டாம், வாய் மூடி இருக்கச் சொன்னார், தோவலும் அதையே சொன்னார்”, அப்போது எனக்கு புரிந்தது,

தாக்குதலுக்கான பழியை பாக்கிஸ்தான் மீது சுமத்தி தேர்தல் வெற்றியை பெற நினைக்கிறார்கள்” என்று. 

300கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து 10-15 நாட்களாக காரில் கஷ்மீரின் வீதிகளில் சுற்றிவந்துள்ளதே, எந்தளவிற்கு நம்முடைய உளவுத்துறை செயலாற்றியுள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம்”. “மோடிக்கு லஞ்சம்எல்லாம் பிரச்சனையில்லை.

 அவரை சுற்றி உள்ளவர்கள் எல்லாம் அவருடைய பெயரை பயன்படுத்தி அதிகமாக சொத்து சேர்க்கிறார்கள். கஷ்மீர் பற்றிய துளி அறிவு கூட மோடிக்குகிடையாது,

 மாநில அந்தஸ்த்தை எடுத்ததைவிட முட்டாள்தனம் இல்லை”. இப்படி எல்லாம் சொல்லியுள்ளது யாரோ ஒரு சமூக செயல்பாட்டாளர் அல்ல,

புல்வாமா தாக்குதல் நடந்தபோது அம்மாநிலத்தின் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக். 

அவருடைய முழு நேர்காணலும் அதிர்ச்சிரகம். அறிவில்லாத, ஊழலில் திளைக்கும் , அயோக்கியர்கள், சொந்தநாட்டை அழித்தும் அதிகாரத்தை ருசிக்க நினைக்கும் பஞ்சமாபாதகர்களிடம் இந்த நாடு சிக்கியுள்ளது. என்ன செய்யப்போகிறோம்?

அனைத்து கட்சிகளும் இந்த தேசத்தை காப்பாற்ற ஒன்றிணைவதுதான் இந்த நாட்டை காக்கும் செயலாகும்.

--------------------------_--------------------------

அண்ணாமல,அண்ணாமல....

அண்ணாமலை வெளியிட்ட பட்டியல் குறித்து, அவரது பெயரை குறிப்பிடாமல், பா.ஜ.,வில் இருக்கும் நடிகர் எஸ்.வி.சேகர் கேலியும், கிண்டலுமாக விமர்சித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள 'டுவிட்டர்' பதிவில், 'என்னங்க, அந்தபையன் பாஸ் பண்ண வாய்ப்பே இல்லையா? 

ஏங்க, இன்னிக்கு கேள்வி பேப்பர் கொடுத்தா, அடுத்த வாரம் தான் பதில் சொல்வேங்கிறான்' என்று கிண்டலடித்துள்ளார்.

 மற்றொரு பதிவில், '

'என்ன பரீட்சை எழுதி என்ன பிரயோஜனம் 

புத்தகத்தை பார்த்து எழுதினதா சொன்னாங்க. கடைசியில், 10 வருஷ பழைய வார இதழ்களை பார்த்து எழுதின மாதிரி இருக்கு' 

என கேலி செய்துள்ளார்....

-------------------------_-------------------+-----------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?