மிரட்டல் கர்நாடகா

 கர்நாடக மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். 

கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. 

இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.

மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பாஜக சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். 

அதிலும் சில நாட்களில் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகளில் ஆளும் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தோடு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 மேலும், பாஜகவின் முக்கிய தலைவர்கள் சர்ச்சையில் சிக்கிக்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இது தவிர முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கொடுக்காத நிலையில் அவர்கள் அங்கிருந்து விலகுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

முக்கிய எம்.எல்.ஏக்கள் பாஜகவிலிருந்து விலகியுள்ள நிலையில் தற்போது அது பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை அளித்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது வடகர்நாடகாவில் பாஜகவின் முதல் எம்.எல்.ஏவும், முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவிலிருந்து விலகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர், சபாநாயகர், முதல்வர் உட்பட பல்வேறு உயர் பதவிகளை வகித்த ஜெகதீஷ் ஷெட்டர் இந்த தேர்தலிலும் போட்டியிடுவதில் உறுதியாக இருந்தார்.

ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்க மறுத்ததோடு பாஜகவின் முக்கிய தலைவர்கள் அவரை சந்தித்து மத்தியில் உயர்ந்த பதவி வழங்குவதாக உறுதி அளித்ததாக கூறப்பட்டது.

ஆனால், அதனை ஏற்க மறுத்துள்ள ஜெகதீஷ் ஷெட்டர் “நாளை சபாநாயகரை சந்தித்து எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா கடிதத்தை கொடுத்து பாஜகவிலிருந்து விலகுவேன். இதன் பின், ஒவ்வொரு நாளும், பல முக்கிய விஷயங்களை அவிழ்த்து விடுவேன்” என அதிரடியாக அறிவித்துள்ளார். 

அவரின் இந்த அறிவிப்பு பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

---_----------_-----------------_-----------------------------_-

மூவர் படுகொலை.

ஆதிக் அகமது உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1962ஆம் ஆண்டு பிறந்தவர். 

ரவுடியாக இருந்த அவர், திடீரென அரசியலிலும் குதித்தார். முன்னாள் எம்பியாகவும், ஐந்து முறை எம்எல்ஏவாகவும் இருந்த ஆதிக், தனது அரசியல் வாழ்க்கையை 1989ஆம் ஆண்டு தொடங்கினார். 

அப்போது இவர் உ.பி.யின் அலகாபாத் மேற்கு தொகுதியில் இருந்து சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார்.

அவர் அடுத்த இரண்டு முறை நடந்த தேர்தல்களிலும் அவர் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.. இதையடுத்து சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்த அவர், 1996இல் தொடர்ந்து நான்காவது முறையாக அங்கே வென்றார். 

அதைத் தொடர்ந்து 1999இல், அப்னா தளம் (AD) கட்சியில் சேர்ந்த அவர் பிரதாப்கர் தொகுதியில் போட்டியிட்டார். 

இருப்பினும், அங்கே அவரால் வெல்ல முடியவில்லை. 2002இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அலகாபாத் மேற்கு தொகுதியில் அப்னா தளம் சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.

இதையடுத்து 2003இல் அவர் மீண்டும் சமாஜ்வாதி கட்சிக்குத் திரும்பினார். 2004இல், அவர் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் தொகுதியான புல்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இதற்குப் பிறகு, 2005இல் ராஜு பால் என்பவர் கொலை செய்த வழக்கில் ஆதிக் அகமது குற்றஞ்சாட்டப்பட்டார்.

2005ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி தனது கூட்டாளிகள் சந்தீப் யாதவ் மற்றும் தேவி லால் ஆகியோருடன் மருத்துவமனையில் இருந்து திரும்பும் போது ராஜு பால் வீட்டிற்கு வெளியே வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார்.

கைவிட்ட அரசியல் கட்சிகள்: அதன் பிறகு 2012 சட்டசபைத் தேர்தலில், ஆதிக் மீண்டும் புல்பூர் தொகுதியில் இருந்து அப்னா தளம் சார்பில் போட்டியிட்டார். 

இருப்பினும், அவர் பிஎஸ்பியின் புஜா பாலிடம் 8,885 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதைத் தொடர்ந்து 2014 மக்களவைத் தேர்தலில் ஷ்ரவஸ்தி தொகுதியில் சாமாஜ்வாடி கட்சி சார்பில் அவர் போட்டியிட்டார். இருப்பினும், அப்போதும் அவரால் வெல்ல முடியவில்லை.

அரசியல் மற்றும் போலீஸ் அழுத்தம் காரணமாக 2008இல் ஆதிக் சரணடைந்தார். 4 ஆண்டுகள் சிறையில் இருந்த அவர் 2012இல் வெளியே வந்தார். 

பின்னர் அவர் 2014இல் சாமாஜ்வாடி சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட போதிலும், அவரால் வெல்ல முடியவில்லை. 

அப்போது தான் சமாஜ்வாடி கட்சி உடனான அவரது உறவு மோசமடைந்தது.. ஆதிக்கின் குற்றி பின்னணி காரணமாக அகிலேஷ் யாதவ் ஆதிக்கிடம் இருந்து விலகத் தொடங்கினார்.

இதனிடையே பிரயாக்ராஜில் உள்ள சாம் ஹிக்கின்பாட்டம் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஊழியர்களைத் தாக்கியதற்காகப் பிப்ரவரி 2017இல் அவர் கைது செய்யப்பட்டார். 

2019இல் அவர் சிறையில் இருந்தபோதே, ​​பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் ஆதிக் போட்டியிட்டார். 

இருப்பினும், அவரால் அந்த தேர்தலி்ல வெறும் 855 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

ராஜு பால் கொலை வழக்கில் முக்கிய சாட்சியமாக இருந்த உமேஷ் பால் என்பவர் கடத்தி கொலை செய்யப்பட்டார்.

 இதில் ஆதிக் அகமது அவரது சகோதரர் அஷ்ரப் உட்பட ஏழு பேர் கடத்தல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

ஆதிக் அகமதின் மகன்களில் ஒருவரான ஆசாத், உமேஷ் பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தார். 

அவரை ஜான்சியில் உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படையினர் சில நாட்களுக்கு முன்பு என்கவுன்டர் செய்தனர். 

அவரது மற்ற 4 மகன்களில் இருவர் வெவ்வேறு வழக்குகளில் உபி-இல் சிறையில் உள்ளனர்.

 அதேபோல மற்ற இருவர் சிறார் இல்லத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது அவர் ,தம்பி,மகன் என மூவர் ஒரே குடும்பத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.


--------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?