நினைவுகளில் ஊஞ்சலாடுகிறது.

 2016 -ல், இதே பங்குனி, சித்திரை(ஏப்ரல்,மே) மாதங்களில், ஜெயல்லிதா செய்த தேர்தல் பரப்புரை நினைவிலிருக்கிறதா ?

1.) நண்பகல் 12 முதல் 2 மணிக்குள்தான் கூட்டம் நடைபெறும்.

2.) பிரம்மாண்ட மேடை.  இரண்டு அடுக்கு கொண்டதாய் இருக்கும்.  மேலடுக்கில் ஜெயலலிதா மட்டும் தனியாக அமர்ந்திருப்பார்.

அவரைச் சுற்றி 20 டன் அளவிற்கு ஏசி மெஷின்கள் பொருத்தப்பட்டிருக்கும்.  கீழடுக்கில் கிட்டத்தட்ட 20 முதல் 25 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் கொத்தாக வணங்கியபடி நின்று கொண்டிருப்பார்கள் !

3.) வெட்டவெளியில் நூற்றுக் கணக்கில் கட்சியின் தொண்டர்களும், தலைக்கு 200 ரூபாய் கூலிபேசப்பட்டு கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த பொதுமக்கள் பல்லாயிரம் பேரும் கூடி நிற்பார்கள். (பிரியாணி,நீர் பாக்கெட்,)

மதியம் நடைபெறப்போகும் கூட்டத்திற்கு காலை எட்டு மணி முதலே அந்த அரங்கம் நிரப்பப்படும்.  பாதுகாப்பு சோதனைகளை காரணமாகச் சொல்லி அந்த ஃபார்முலா அரங்கேறும்.

4) எழுதி வைத்திருக்கும் சார்ட் பேப்பர் ஒட்டிய ஏழெட்டு அட்டைகளை எடுத்து, அதில் பிரம்மாண்ட சைஸ் ஃபாண்டில் இருப்பவைகளை அப்படி அப்படியே அனைத்துக் கூட்டங்களிலும் படித்து விட்டுச் செல்வார் ஜெயலலிதா.  

அவ்வளவுதான் பரப்புரை.  அதிகபட்சம் 9 அல்லது பத்து கூட்டங்கள். ஹெலிகாப்டரில் வருவார்.

சூரியன் மங்குவதற்குள் அதே ஹெலிகாப்டரில் போய்விடுவார் 

5.) பாவம், 200 பணத்துக்காகவோ, ஜெயலலிதா மீதான அபிமானத்தினாலோ, 8 மணி முதல் 2 வரை அந்த கொடூர வெய்யிலில் காத்திருக்கும் பலருக்கும் டீஹைட்ரேசன் ஏற்பட்டு மயங்கி விழுவர்.  ஒவ்வொரு கூட்டத்திலும் 2, 3 நான்கு பேர் வரை மரணித்தனர்.

(சில மரணங்கள் வெளியே தெரிந்தாலும் ஆட்சி,அதிகாரம் கையில் இருந்த்தால் பல மரணங்கள் பொதுவெளியில் மறைக்கப்பட்டன.ஊடகங்களீல் மறைக்கப்பட்டன.)

ஜெயலலிதாவின் முதல் கூட்டத்தின் போதே இத்தகையச் சாவுகள் நிகழ்ந்தாலும், ஜெயலலிதா தன் பரப்புரை முறைகளையோ, நேரத்தையோ மாற்றி அமைத்துக் கொள்ளவே இல்லை. 

அவருக்கு அந்த நரபலிகளின் மீது ஈர்ப்பு வந்தது.  

அந்த நரபலிகள் கூடினால், தன் தவத்துக்கான பலன்கள்அதிகரிக்கலாம் என அந்த மஹாபிற்போக்குவாதி கணித்திருக்கலாம்.  கணிப்பு பலித்ததுதான்.  ஆனால் சாபம் ?

இன்னுயிர்களை இழந்தக் குடும்பத்தினர் விட்ட கருஞ்சாபங்கள் அந்தம்மாவை சில மாதங்கள் கூட ஆள விடவில்லை.  

அந்தச் சாவு எப்படி நிகழ்ந்தது, ஏன் நிகழ்ந்தது, எதற்காக நிகழ்ந்தது என்று சிலருக்கு மட்டுமே தெரியும்.  

75 நாட்கள் சிறைக்கைதியைப் போல அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டு, முடக்கப்பட்டு, நொடிக்கொரு நாடகம், ஸ்க்ரிப்ட், டயலாக்குகள் அரங்கேறி, கேலிக்கூத்தாகி மரணித்தார்.  

என்று இறந்தார் என அரசுக்கும், அதிமுகவுக்கும் வாய்க்கா தகராறு உண்டு.

பிஜேபியின் இந்த 10 ஆண்டு ஆட்சி ஜெயாவின் ஆட்சிக்கு சற்றும் குறைந்தது இல்லை

எம்ஜிஆர் 86 ல் இருந்த நிலை தான் 2017ல ஜெயா இருந்தார்

பொம்மைகள் போல் பொதுவெளியில் காட்டப்பட்டு பின்னிருந்து இயக்கினர் 

தற்போதைய ஒன்றிய அரசும்

ரிமோட் பிரதமர் கொண்டே இயங்குது.

நேற்று மும்பை அருகே நவிமும்மையில் லட்சக்கணக்கீனவர்கள் கொண்டுவரப்பட்ட கூட்டம் அமித்ஷா கலந்து கொண்ட உச்சி வெயில் கூட்டம்.

கூட்டம் நடக்க,நடக்க கூட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் வெயில் தாக்கத்தால் சுருண்டு விழுந்தனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டவர்களில் இதுவரை பதினாறு பேர்கள் இறந்துவிட்டனர்.

நூற்றுக்கணக்கானவர்கள்  மருத்துவமனையில் மருத்துவத்தில் உள்ளனர்.பலி உயரும் அபாயம்.

முடிவு ?

வரலாறு பல முறை நமக்கு காண்பித்துள்ளது

சர்வதிகாரிகள் இட்லர்,முசோலினி,இடிஅமின்,டிட்டோ இறப்பின் மர்மத்தை.

 நினைவுகளில் ஊஞ்சலாடுகிறது.

-----------------------------*---------------------------

மூட்டைப் பூச்சிகளால் இறந்த கைதி



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?