மனநலமற்றவர்கள்

 தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தொடர்ந்து பரப்பப்படும் வதந்தியால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் வட மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. 

அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஐஏஎஸ் குழுவினர் திருப்பூர் கோவை சென்னை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.

மேலும் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் போலியான வீடியோக்கள் குறித்து திருப்பூர் சைபர் கிரைம் போலிஸார் கண்காணித்து இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருசெய்துள்ளார்.


இதனிடையே பீகார் மாநிலத்தை சேர்ந்த மணிஷ் காஷ்யப் செய்த போலி வீடியோ ஒன்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


யூடியூப் சேனலில் போலி செய்திகளை பதிவேற்றம் செய்து வரும் இவர் அதன்மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வந்துள்ளார். 

தனது வருமானத்தை மேலும் கூட்டிகொள்ள தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் தாக்கப்படுவதாக வெளியான செய்தியை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளார்.

இதற்காக பாட்னாவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் இருவரை படுகாயம் அடைந்தது போல் வேடமிட வைத்து தமிழ்நாட்டில் தாங்கள் தாக்கப்பட்டது போல் பேசி நடிக்க வைத்துள்ளார்.

 மேலும் இந்த காட்சிகளை மார்ச் 8-ம் தேதி ஹோலி பண்டிகை அன்று சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த சம்பவம் வெளிவந்ததும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பீகார் போலிஸார், ராகேஷ் திவாரி என்பவரை கைது செய்தனர். 

மேலும், மணிஷ் காஷ்யப் உள்ளிட்ட 4 பேர் மீது பதிவு செய்யப்பட்டு அதில் இருவரை கைது செய்தனர், ஆனால் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிஷ் காஷ்யப் தலைமறைவானார்.

இதனால் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது பெட்டியாவின் ஜகதீஷ்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். 

இந்த நிலையில், போலி வீடியோக்களை பகிர்ந்த மணிஷ் காஷ்யப் ர் மீது ஜெகதீசன் என்பவர் மதுரை மாவட்ட சைபர்கிரைம் பிரிவு பொலிஸாரிடம் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்த போலிஸார் பீகாரில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மணிஷ் காஷ்யப்பை தமிழகம் அழைத்அறிவித்துள்ளார்.


பின்னர் நீதிமன்ற அனுமதியோடு அவரிடம் விசாரணை நடத்திய போலிஸார் தொடர்ந்து மதுரை மாவட்ட முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 நீதிமன்றத்தில் காஷ்யப்பிற்கு வரும் 19ஆம் தேதிவரை 15நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து மணிஷ் காஷ்யப் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். மணிஷ் காஷ்யப் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் அறிவித்துள்ளார்.

மணிஷ் காஷ்யப் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்று பீகாரின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி குற்றம் சாட்டிய நிலையில், மணிஷின் முன்னாள் நண்பரான நாகேஷ் சாம்ராட் மணிஷ் காஷ்யப் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் உடன் தொடர்புடையவர்தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். 

மணிஷ் காஷ்யப் 2020 இல் பீகாரில் உள்ள சன்பாடியா சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-----------------------------_----------------------------_-------------


இவர் தமிழ்நாடு ஆளுநர் என அனுப்பப்பட்டாரா.
இல்லை தமிழ்நாட்டை அழிக்க வந்துள்ளாரா?
எது எல்லாம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என மக்களால் நிராகரிக்கப் பட்டுள்ளதோ அதை எல்லாம் கொண்டு வர துடியாக இருக்கிறார்.
சாதி,மதவெறி எல்லாவற்றையும் மீளப்புகுத்துகிறார்.அதற்காக சனாதன பார்ப்பணிய தர்மத்தை வரவேற்று மேடைதோறும் புலம்புகிறார்.
தற்போது 14 உயிர்களை பலி கொடுத்து விட்டப்பட்ட நாசகார ஸ்டெர்லைட் மீண்டும் வேண்டும் என உளறுகிறார்.
இவர்தான் பார்க்க வந்த ஆளுநர் வேலையை மட்டும் பார்க்க மறுக்கிறார்.
 பல உயிர்களைப் பலி வாங்கிக் பொண்டிருக்கும் ஆன்லைன் ரம்மி தடுப்பு சட்டத்தை மட்டும் கையெழுத்திடாமல் வைத்து
சூதாட்டக் கொலைகார்ர்களுக்கு ஆதரவாக செயல் படுகிறார்.
ஒன்றிய அமைச்சரே நாடாளுமன்றத்தில் மாநில அரசுக்குத்தான் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் கொண்டுவர உரிமை உள்ளது என கூறிய பின்னரும் மசோதாவில் கொலைகாரர்களுக்கு ஆதரவாக கையெழுத்திடாமல் இருக்கும் ரவி தற்போது மற்றொரு கொலைகார ஸ்டெர்லைட் ஆதரவாகவும் பேசுவது 
இவர் தமிழ்நாடு மக்களை அழிக்கவே பிறப்பெடுத்து வந்துள்ளதாகவே தோன்றுகிறது.
இதுவரை பதவியை வைத்து இவருக்கு கொடுத்துவந்த மரியாதைக்கு சற்றும் பொருந்தாத ஒரு மனிதனாகவே இவரைப்பற்றி எண்ணத்தோன்றுகிறது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?