2000 சில்லறை

 தூத்துக்குடி மாவட்டாட்சியராக செந்தில்ராஜ் நீடிப்பார்.முன்னதாக வெளியான மாறுதல் ஆணை திருப்பப் பெறப்பட்டதாக தலைமைச் செயலர் இறையன்பு அறிவித்துள்ளார்.

10, 11ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

மக்கள் தங்கள் கைவசம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வங்கிகளில் செலுத்தலாம் அல்லது சில்லறையாக மாற்றிக் கொள்ளலாம்.

நிதித்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரனுக்கு கூடுதலாக தொல்லியல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடிக்கு சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2341 மில்லியன் கன அடியாக உள்ளது; நீர்வரத்து இல்லை

1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 725 மில்லியன் கன அடியாக உள்ளது; நீர்வரத்து இல்லை.

500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 463 மில்லியன் கன அடியாக உள்ளது; நீர்வரத்து இல்லை.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 18 ஆண்டுகளாக தக்காராக இருந்த கரு.முத்து கண்ணன்  உடல் நலக்குறைவவால் காலமானார்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள். தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் நீண்ட நேரமாக இயக்கப்படவில்லை என குற்றச்சாட்டு. காவல்துறை பேச்சு வார்த்தைக்குப்பின்.போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

----------------------------------------------------------------

திணறும் ஜொமொட்டோ.

பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் தங்கள் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம். 

இதனிடையே அரசுப் பேருந்துகளில் பயணிகளிடம் இன்று முதல் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று போக்குவரத்து கழகம் அறிவுறுத்தி இருக்கிறது. 

ஆனால் ஆம்னி பேருந்துகளை பொருத்தவரை 2,000 ரூபாய் நோட்டுகள் தடையின்றி வாங்கப்படும் என்று தமிழ்நாடு ஆம்னி பெருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஜொமோட்டோ ஆர்டரில் 72 சதவீத ரூ.2000 நோட்டுகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஜொமோட்டோ (Zomoto) நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆர்பிஐ அறிவிப்புக்கு பின்னர் ஜொமோட்டோவில் உணவு ஆர்டர் செய்வோர், ஆன்லைன் வாயிலாக பணத்தை செலுத்தாமல் கேஷ் ஆன் டெலிவரியில் உணவு வாங்குகின்றனர்.

 அதாவது ஜொமோட்டோ ஆர்டரில் பணமாக செலுத்தும் (Cash on Delivery) வழியில் 72 சதவீதத்தினர் ரூ.2000 நோட்டுகளை மாற்றியுள்ளதாக ஜொமோட்டோ (Zomoto) நிறுவனம் தெரிவித்துள்ளது. ரூ.100, ரூ.200-க்கு உணவு வாங்குவோர் கூட ரூ.2,000 நோட்டுகளை தருவதாக கூறப்படுகிறது.

-------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?