வெற்றிகரமான 3ம் ஆண்டு.

 இந்தியாவில் உள்ள மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை 543 லில் இருந்து 846 ஆக மாற்றப் போகிறார்கள்!!

மக்கள் தொகை அடிப்படையில் இந்த MP சீட்டுகள் நிர்ணயம் செய்யப் படுவதால்! மொத்தம் 846 சீட்டில் தென் இந்தியாவிற்கு வெறும் 166 சீட் மட்டுமே கிடைக்கும். 

வடக்கே மக்கள் தொகை பெருத்து வருவதால் மீதி 640இடங்களும் வடஇந்தியர்களுக்கே!தென்இந்தியா வரியை மட்டும் அள்ளி, அள்ளி கொடுத்து விட்டு, வடஇந்தியர்களின் அடிமையாக வேண்டும்!


தென் இந்திய அரசியல் கட்சிகள்,ஒன்றாக இணைந்து இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க வேண்டும்!

இதனால் தென் இந்தியா மாநில நிதி ஆதாரத்தையும், அனைத்து உரிமைகளையும் பறி கொடுக்கும்

1967 தேர்தலில் கும்பகோணம் நாடாளுமன்ற தொகுதி இருந்தது.

 இரா.செழியன் திமுக வேட்பாளர்.

 தமிழ்நாட்டில் 41 நாடாளுமன்ற தொகுதிகள் இருந்தன.

 இப்போது 39. மக்கள் தொகை கட்டுப்பாடு காரணமாக 2 தொகுதிகள் இழப்பு. இந்திராகாந்தியிடம் முறையிட்டதால், இனி 1981 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி நிர்ணயம்.

.-----------------------------------------------------------------

மூன்றாம் ஆண்டு.

2021சட்டமன்றத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

 ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளே, கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், ஆவின் பால் லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பு உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முதலமைச்சர்.

பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 210க்கும் மேற்பட்ட திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி உள்ளது. 

அதில், அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் உயர்கல்வியை தொடர்வதற்காக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம்.

அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் மற்றும் இன்னுயிர் காக்கும் 48 மணி நேரத் திட்டம் ஆகியவை பிரதானமானதாகும்.

மேலும், 4 ஆயிரத்து 805 கோடி ரூபாய் மதிப்பில் நகைக் கடன் தள்ளுபடி ஆகியவை அடங்கும். 

முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் துபாய் பயணம் மேற்கொண்டது, முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு, தூத்துக்குடி மற்றும் கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 இதேபோல் தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை, தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை உள்ளிட்ட தொழில் வளர்ச்சியை பெருக்குவதற்கான பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேபோல், வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ன.

 இதேபோல் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் அங்கக வேளாண்மை கொள்கை வெளியிடப்பட்டது. இல்லம் தேடி கல்வித்திட்டம், நான் முதல்வன், எண்ணும் எழுத்தும் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

மகளிர் சுய உதவிக்குழுக்களில் 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள கடன்கள் ரத்து செய்யப்பட்டு 25 ஆயிரத்து 219 கோடி ரூபாய் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன

இதேபோல், பெண் ஓதுவார்களை பணியில் அமர்த்தியதும் இந்த ஆட்சியின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். 

திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் 75 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த திமுக அரசு, பல தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றது .

கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனை ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது,அதேபோல் மதுரையில் கலைஞர் நினைவு நூலகமும் திறக்கப்பட இருக்கிறது. 

அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. 

12 மணி நேர வேலை மசோதாவை ஒன்றிய அரசின் அழுத்தத்தால் நிறைவேற்றி பின்னர் திரும்பப்பெற்றது 

உள்ளிட்ட சர்ச்சைகளிலும் சிக்கிய திமுக அரசு, இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

-----------------------------------------------------

ஆர்.யன் ரவிக்கு சேகர்பாபு பதில்


ஆளுநரை கேட்பது ஒன்றே ஒன்றுதான்; சட்டமீறல் விதிமீறல் நடந்தால் சிதம்பரம் தீட்சிதர்கள் என்றால் சட்டம் அவர்கள் மீது பாயக்கூடாதா?. சிதம்பரம் தீட்சிதர்களுக்காக ஆளுநர் தனியாக வகுத்துதந்துள்ளாரா?. சட்டம் அனைவருக்கும் பொதுவானது.

சிதம்பரம் கோயிலை பொறுத்தளவில் புகார்களின் மீதும் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆளுநரே இப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்களை வைக்கும்போது அது ஏற்கக்கூடிய ஒன்றாகத்தானே பார்க்கப்படும்?

ஆளுநர் என்ன ஆண்டவரா? தமிழ்நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஆளும் ஆட்சி, ஒட்டுமொத்த ஒன்றியத்திற்கே ஆளுநர் தேவையில்லை என்பதுதான் திமுகவின் கொள்கை.

ஆளுநரின் குற்றச்சாட்டுக்களுக்கு அரசின் சார்பில் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். எங்களுக்கு பணிகள் அதிகம் உள்ளது. நாள் ஒன்றுக்கு 19 மணிநேரம் உழைக்க கூடிய முதல்வரை கூட ஆளுநர் பாராட்டத்தான் செய்துள்ளார். 

ஆனால் ஏதோ ஒரு நிர்பந்தத்திற்காக இல்லாத பொய் குற்றச்சாட்டுக்களை அள்ளித்தெளித்து வருகிறார்.

திராவிட மாடல் காலாவதியானது என்று ஆளுநர் சொல்லி உள்ளாரே?

காலாவதி ஆகப்போவது ஆளுநர்தானே தவிர திராவிட மாடல் அல்ல. திராவிட மாடல் ஆட்சியை கர்நாடக தேர்தல் களத்தில் கூட பாஜகவே பயன்படுத்தி கொண்டிருக்கிறது. 

இந்தியாவிற்கே வழிகாட்டியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. அவர் எந்த இயக்கத்தை முன்னிலைப்படுத்த நினைக்கிறாரோ அந்த இயக்கமே தமிழ்நாட்டில் காலாவதி ஆகிவிடும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?