கொன்றால் பாவம்...

 தின்றால் போச்சு!

"சங்கிகள் கவனத்திற்கு"

       *தர்ம் அவுர் தந்தா*

*"மதம் என்பது வேறு... வணிகம் என்பது வேறு..!"*

இந்தியாவின் முண்ணனி மாட்டிறைச்சி ஏற்றுமதியாளரான 'சன்னி கட்டர்' உதிர்க்கும் தத்துவம் இது.


எனது வட இந்திய பயணத்தில் எங்குமே மாட்டிறைச்சி உணவு கிடைக்கவே இல்லை. மாடுகளை தெய்வமாகநினைப்பதால் வடமாநிலங்கள் அனைத்திலும் மாட்டிறைச்சிக்கு தடையாம். நல்லது..!

அங்குள்ள விவசாயிகளிடமும், குடியானவர்களிடமும் கேட்டேன் "நீங்கள் வளர்த்தும் மாடுகளை சந்தையில் விற்க முடியாது. வேறு என்னதான் செய்வீர்கள்..?"

"மாடுகளை மொத்தமாக விலைபேசி வாங்கிச் செல்லாவார்கள். எங்கு கொண்டுசெல்வார்கள் என தெரியாது"

இப்போது புரிந்தது.... மாட்டிறைச்சி தடையால் இவர்களால் சந்தையில் மாடுகளை விற்க முடியாது. தரகர்களிடம்தான் விற்றாக வேண்டும். 10 ஆயிரம் மதிப்புள்ள மாடுகளை 2 ஆயிரத்திற்கு தரகர்கள் கேட்டாலும் கொடுத்துதான் ஆகவேண்டும், வேறு வழியில்லை.

தரகர்கள் வாங்ஆஸ்திரேலியாவை

கடவுள்களை (மாடுகளை) எங்கே அழைத்து செல்கிறார்கள்...?

பிரேசில், ஆஸ்திரேலியாவிற்கு அடுத்து மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தது. *ஜீ பிரதமரான பிறகு அதாவது இந்தியாவில் மாட்டிறைச்சி உண்ண தடை செய்யப்பட்ட பிறகு மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா ஆஸ்திரேலியாவைபின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது.*

மாட்டிறைச்சி ஏற்றுமதில் முண்ணிலையில் இருக்கும் மாநிலம் எது தெரியுமா..? 

சாமியார் ஆட்சி செய்யும் உத்திர பிரதேசம்தான். அடுத்ததாக மகாராஷ்டிரா, பீகார், பஞ்சாப், ஆந்திரா இருக்கிறது.

400 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும்இந்தியாவின் மிகப்பெரிய மாட்டிறைச்சி கூடம் உத்திர பிரதேசத்தின் முசாபர்பூரில் அமைந்திருக்கிறது. இதன் உரிமையாளர் *சுனில் சூட்.*

அடுத்ததாக A.O.P Exports எனும் மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம் உ.பியின் உன்னா எனும் நகரத்தில் இருக்கிறது. இதன் உரிமையாளர் *ஓ.பி.அரோரா* என்பவர். வேடிக்கைஎன்னவென்றால், இந்த உன்னா நகரில்தான் மாட்டிறைச்சி வெட்டியதாக இரண்டு தலித் அப்பாவிகள் பசு காவலர்களால் கொல்லப்பட்டனர்.

மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் யார் நடத்தி வருகிறார்கள் என்பதை பார்ப்போம்.

அல் கபீர் எக்ஸ்போர்ட்ஸ்- சதீஷ் சுபர்வால்,

எம்.கே.ஆர் எக்ஸ்போர்ட்- மதன் ஏவட்ஏவட் கோல்ட் ஸ்டோரேஜ்- ஷனி ஏவட்,

அரேபியன் எக்ஸ்போர்ட்- சுனில் கபூர்,

அல் நூர் எக்ஸ்போர்ட்- சுனில் சூட்,

A.O.V Agro food- அபிஷேக் அரோரா,

ஸ்டாண்டர்ட் ஃபுட்- கமல் வர்மா,

பொன்னே ப்ராடக்ட் எக்ஸ்போர்ட்- சாஸ்திரி குமார். அஸ்வினி அக்ரோ எக்போர்ட்- ராஜேந்திரன், மகாராஸ்டிரா ஃபுட்ஸ்பிராசசிங்- சன்னி கட்டார்,

கனக் டிரேட்டர்ஸ் - ராஜேஷ் ஸ்வாமி.

*இதில் எவரும் இஸ்லாமியர்களோ கிறிஸ்தவர்களோ கிடையாது. அத்தனை பேரும் பசுவை தெய்வமாக மதிக்கும் மதத்தை சார்ந்தவர்கள். பெரும்பாலும் பிராமணர்கள்.*

2015-ல் சீனா சென்ற இந்திய பிரதமர் ஜீ அரிசி, மசாலா பொருட்களுடன் பீப்ஏற்றுமதிக்காகவும் தடையில்லா ஒப்பந்தம் ஒன்றை செய்து நாடு திரும்பினார். கம்போடியா வழியாக சீனா சென்ற நம்மூர் மாட்டிறைச்சி தற்போது நேரடியாகவே சீனாவிற்கு ஏற்றுமதி ஆகிறது.

2026-ல் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தை பிடிக்க இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது..!

--------------------------------------------------------------

அரசியல்ன்ன இதுதாங்க....

சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராக (நெய்வேலி) தொடர்ந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டது பாமக...

ஒருமுறை நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சராக பதவி வகுத்தது பாமக...

அப்போதெல்லாம் என்எல்சி நிலம் கையகப்படுத்தினால் தமிழகத்தில் புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க கூடாதென பாமக வலியுறுத்தியதாக வரலாறு இல்லை...

அப்போதெல்லாம் என்எல்சி நிலம் கையகப்படுத்தினால் வீட்டில் ஒருவருக்கு வேலையென சட்டமியற்ற வாய்ப்பிருந்த போது மெளனம் காத்த பாமக...

நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் தற்போது ராஜ்யசபா உறுப்பினராக வலம் வரும் அன்புமணி அவர்கள் நாடாளுமன்றத்தில் என்எல்சி குறித்தும் அதனால் பாதிக்கப்படும் மக்கள் குறித்தும் பேசியதில்லை..,

ஆனால் இன்று அழைக்கபடாத  கூட்டங்களுக்கு கூட வந்து என்எல்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பேசுகிறேன் என்பது நாடகமென எளிய மக்களுக்கும் புரியுமா?  ...!

இதுதான் அரசியல்ன்னும் தெரியுமா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் முதல் தமிழ் பைபிள்

திரிணாமுல் ஊழல்

மாரடைப்பு