வெற்றியாளர்?

 தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியிலிருந்த ஒரே மாநிலம் கர்நாடகா. 

இந்நிலையில் தற்போது ஆட்சியை கைப்பற்ற போவது யார்? 

இன்று பிற்பகலுக்குள் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றிருந்தது.

 இந்த தேர்தலில் ஒட்டு மொத்தமாக 2615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 பா.ஜனதா சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம்ஆத்மி சார்பில் 217 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். ஒட்டு மொத்தமாக 184 பெண்களும், ஒரு திருநங்கையும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டனர்.

 இந்நிலையில் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 

இதில் ஆண் வாக்காளர்கள் 2.67 லட்சம் பேரும், பெண் வாக்காளர்கள் 2.64 லட்சம் பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 5ஆயிரம் பேரும் அடங்குவ‌ர்.

கடந்த 10-ந் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது

கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (சனிக்கிழமை) எண்ணப்படுகிறது. 

காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற உள்ளது.

 பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 4 இடங்களும், மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 30 வாக்கு எண்ணும் மையங்களிலும் நடைபெற உள்ளது. 

ஒட்டு மொத்தமாக மாநிலம் முழுவதும் 34 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குவதால், மதியம் 2 மணிக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகி விடும் என்ற தெரிகிறது.

----------------------------------------------------------

கொசுறு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம். காணொலி வாயிலாக தொகுதி பார்வையாளர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உதகையில் பிரமாண்ட மலர் அலங்காரத்துடன் 18வது ரோஜா கண்காட்சி இன்று துவங்குகிறது. 38 ஆயிரம் ரோஜா செடிகளில் வண்ணமயமாக ரோஜாக்கள் பூத்து குலுங்கிறது.

தமிழ்நாட்டில் மேலும் ஒரு ஆலை அமைக்க ராயல் என்பீஃல்ட் திட்டமிட்டுள்ளது. செய்யாறில் ஆயிரம் கோடியில் ஆலை அமைக்க எலெக்ட்ரிக் வாகன ஆலை அமைக்க முடிவு செய்யபட்டு.

வங்கக் கடலில் உருவான மோக்கா புயல் அதி தீவிர புயலாக மாறியது. நாளை வங்க தேசம் மியான்மரின் சிட்வி நகருக்கு இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. தொங்கு சட்டசபை ஏற்பட்டால் கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தைகள்(?)நடக்கிறது.

ட்விட்டரின் புதிய தலைமை செயல் அதிகாரியாக லிண்டா யாக்காரினோ நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் எலன் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அனைத்து அரசு துறைகளிலும் பாலியல் புகாரை விசாரிக்க குழுவை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் 14 கோடி ரூபாய் மதிப்பிலான 23 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கம் கடத்தி வந்த இலங்கை பயணிகள் இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

----------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?