சூடான செய்தி

 தமிழ்நாட்டில் நேற்று சென்னை உள்பட 18 நகரங்களில் கோடை வெப்பம் 100% ஆக சதம் அடித்தது.

 தமிழ்நாட்டில்  இன்று முதல் அடுத்த சில தினங்களுக்கு வழக்கத்தை விட வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்னும் செய்தி பலருக்கு அச்சம் தரும் சூடான செய்தியாக அமைந்துள்ளது.


தமிழ்நாட்டில்  வெப்பம் வாட்டி வதைக்கிறது. பல ஊர்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னையில் நேற்றைய தினம் கடும் வெயில் சுட்டெரித்து.

சென்னை மீனம்பாக்கத்தில் 108.86 டிகிரி பாரன்ஹீட், வேலூரில் 107.92, புதுச்சேரியில் 106.16, மதுரையில் 105.44, ஈரோட்டில் 105.08, திருச்சியில் 104.54. கடலூரில் 104, காரைக்காலில் 100.94, திருமபுரியில் 100.4 வெயில் கொளுத்தியது..

அதே நேரத்தில் அதிகளவு வெப்பம் தாங்க முடியாத நிலை, மயக்கம் உள்பட பல்வேறு பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துவருகிறது.

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதிதீவிர மோக்கா புயல், நேற்றுமுன்தினம் வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையில் கரையை கடந்தது. 

அப்போது காற்றின் வேகம் மணிக்கு 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 210 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசியது.

இதில் 6 பேர் பலியானார்கள். மேலும் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை கடல்நீர் சூழ்ந்தது. இதனால் அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இதனால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 17 மற்றும் 18ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

18ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். 

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக பாதிப்புகள் ஏற்படலாம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

ரூ360 கோடிகள் வீணா?

கட்டுமானம் ஆரம்பம்?