தேசத் துரோகி

 மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்துக்கு சொந்தமான ஆய்வகத்தில் பிரதீப் குருல்கர் என்பவர் இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். இவரிடம் சில பெண்கள் ஆபாச ரீதியில் பழகி வந்துள்ளனர்.

அவர்கள் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த உளவு அமைப்பினர் இந்திய ராணுவம் குறித்த ரகசிய தகவல்களை பெற்று வந்துள்ளனர். 

மேலும் பிரதீப் குருல்கர் பாகிஸ்தான் உளவு ஏஜெண்ட்டிடம் தொடர்ந்து வாட்ஸ்அப் மூலம் இந்திய ராணுவம் குறித்த தகவல்களை பகிர்ந்து வந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 3-ந் தேதி அதிரடியாக கைது செய்தனர்.

 மேலும், அவரிடம் விசாரணை நடத்தியபோது வெளிநாட்டில் பயணம் செய்தபோது ராணுவ ரகசியங்களை சிலரிடம் பகிர்ந்த தகவலும் வெளியானது. அதனைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பிரதீப் குருல்கர் நீண்ட நாள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உள்ளதால் இந்த விவகாரத்தில் அந்த அமைப்புக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 

முன்னதாக பிரதீப் குருல்கர் ஆர்.எஸ்.எஸ் உடையில் மேடையில் பேசிய புகைப்படங்கள் பரவலானது குறிப்பிடத்தக்கது.

ராணுவ ரகசியங்களை இந்த RSSஐச் சேர்ந்த தேசத்துரோகி பாகிஸ்தான் உட்பட பத நாடுகளுக்கு கொடுத்ததாக கைது செய்யப்பட்டாலும் அந்த செய்தி இந்திய ஊடகங்களில் சரிவர வெளியாகவில்லை.நம் தொலைக்காட்சிகளில். நாலு பேர்கள் உட்காரந்து விவாதமும் நடத்தவில்லை.

கேரளஸ்டோரியை விட ஆபத்தான இந்த நிகழ்வை நம் ஒன்றிய அரசும் ஈடுபாட்டுடன் விசாரித்ததாகத் தெரியவில்லை.

சொல்லப்போனால் இந்த RSSஐச் சேர்ந்த தேசத்துரோகி பிரதீப் குல்கர் சிறையில்தான் இருக்கிறானா,?வெளியே வந்துவிட்டானா என்று கூட தகவல் இல்லை.

அவ்வளவு  கமுக்கம்.காரணம் இவன் நூலிபான்.

---------------------------------------------------------------

ஐல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என பீட்டா அமைப்பு மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருந்தனர். 

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வந்தது.

கடந்த டிசம்பர் 8ம் தேதி இறுதி வாதம் நடைபெற்றது. பிறகு தேதி குறிப்பிடப்பாடல் தீர்ப்பை நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தது. 

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அந்த தீர்ப்பில், தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு இணைந்தது ஜல்லிக்கட்டு. தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். 

கலாச்சார ரீதியா விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. அப்படியே தலையிடுவதாக இருந்தாலும் இதில் சட்டசபை முடிவு எடுத்த நிலையில் நாங்கள் அதில் தலையிட முடியாது. தமிழ்நாடு கொண்டு வந்த சட்டம் செல்லும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

------------------------------------------------------------------







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?