ஜல்லக்கட்டு தீர்ப்பு

 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகின்றன. 11ம் வகுப்பு முடிவுகளை பிற்பகலில் பள்ளிக்கல்வித்துறை வெளியிடுகிறது.

363வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கள்ளச்சாரய மரணங்கள் தொடர்பான விசாரணையை துவக்கியது சிபிசிஐடி. பாதிக்கப்பட்டவர்களிடன் இன்று நேரில் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமநாதபுரத்தில் பருத்தி விலை கடுமையாக சரிந்ததால், விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏக்கருக்கு ரூ.500 ஆயிரம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசாக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. தொ.மு.ச பொன் விழா மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்

.ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுக்கு இடையில் தடை வந்தது. ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் அரசு சிறப்பாக வாதாடி ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்தலாம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்றுள்ளது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கோடை மழை வெளுத்து வாங்கியது. கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 மழைபெறும் இடங்கள்

தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்ச மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் 28ம் தேதி திறக்கப்படுகிறது. பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்ட்ராவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு. கிணற்றில் இருக்கும் சிறிதளவு நீரை எடுக்கவும் அலைமோதும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?