ஐந்தாண்டான சோகம்

 தூத்துக்குடியில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் மக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி ஆலையை உடனே மூடவேண்டும் என வலியுறுத்தி 2018ம் ஆண்டு மிகப்பெரிய போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தை ஒடுக்கும் விதமாக அப்போது ஆட்சியிலிருந்த அ.தி.மு.க அரசு, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது.

 இதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவம் நடந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் ஆகிறது.

இதையடுத்து தூத்துக்குடி முழுவதும் பல்வேறு பகுதிகளில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. 

தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியில் பலியான 13 பேரில் புகைப்படங்களுக்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்து நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பலியானவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் தங்களின் அஞ்சலிகளைச் செலுத்தினார்கள் இதுபோல் தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில்அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.


மலும் தூத்துக்குடி நகர் முழுவதும் ஏராளமான காவல்துறையினர்  பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

-----------------------------------------------------------

இன்று

கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும்  படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் தொடங்குகிறது. இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.சிம்பு நடிக்கிறார்.

அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கின்றனர்.

 தருமபுரி நீதிமன்றத்தில் காலை 10 மணியளவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது.  திமுக ஆட்சி அமைந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் மீது தாக்கல் செய்யப்படும் முதல் குற்றப்பத்திரிகை இதுவாகும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

கிராம ஊராட்சிகளில் ஆன்லைன் மூலமாக வரி செலுத்தும் முறை இன்று முதல் அறிமுகமாகிறது. சொத்து வரி, வீட்டு வரி, தொழில் வரி என அனைத்து வரிகளும் இனி ஆன்லைன் வாயிலாக செலுத்தப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவு.

தஞ்சையில் சயனைடு கலந்த மது குடித்து இருவர் உயிரிழந்த சம்பவத்தில் பார் உரிமையாளர் செந்தில் பழனிவேல், ஊழியர் காமராஜ் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விஷச்சாராய மரணம், போதைப்பொருள் புழக்கம், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஆகியவை குறித்து ஆளுநரிடம் புகார் அளிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையில் சற்று நேரத்தில் பேரணியாக செல்ல அதிமுகவினர் ஆயத்தாகி வருகின்றனர்.

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு குடிநீர், காத்திருப்பு அறை உள்ளிட்ட வசதிகளை செய்து தர வங்கிகளுக்கு ஆர்பிஐ அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

கணவர் மீது கொண்ட அன்பின் காரணமாக அவரது பெயரை தனது நெற்றியில் பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பச்சைக் குத்திக் கொண்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சி அலுவலகம் அருகே சாலையோரம் இருந்த பழமையான மரம் திடீரென விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரத்தை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

-----------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

ரூ360 கோடிகள் வீணா?

கட்டுமானம் ஆரம்பம்?