அடுத்த அபாயம் ?
சில நாட்களுக்கு முன்னர் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், அடுத்த ஒரு பெருந்தொற்றுக்கு உலகம் தயாராக வேண்டும் என்றும், அது கொரோனா தொற்றைவிட ஆபத்தானது என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
தற்போது அதுகுறித்த விவரங்கள் வெளியாகி மக்களை மேலும் பீதியடையச்செய்துள்ளது.இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனம் நோய்கள் பற்றி வெளியிட்ட ஒரு அறிக்கை அதிர்ச்சி கொடுப்பதாக அமைந்துள்ளது.
சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்று கண்டறியப்பட்டது.
சீனாவில் பரவிய இந்த வைரஸ் அடுத்தடுத்த வாரங்களில் உலகநாடுகளில் எல்லாம் வியாபித்தது. காட்டுத்தீ போல பரவிய இந்த வைரஸ் பெருந்தொற்றை கடுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கின.
பொது முடக்கம் ஆகியவற்றை அமல்படுத்தி தொற்று பரவலின் வேகத்தை ஓரளவு உலக நாடுகள் கட்டுப்படுத்தினாலும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பல லட்சம் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டனர்.
அதன் பின்னர் வைரஸ் பரவலின் தீவிரம் ஓரளவு குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாக திஎச்சரித்திருந்தார்.
வைரஸ் பெருந்தொற்று உலகளவில் பெரும்பாலும் கட்டுக்குள் வந்து, மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில், கொரோனா பெருந்தொற்று அவசர நிலையை விலக்கி கொள்வதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.
இதனால், உலக மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
மக்கள் பாதுகாப்புடன் வாழ்கிறோம் என்று எண்ணியிருக்கும் இந்தவேளையில்தான், உலக சுகாதார நிறுவனம் அடுத்த அச்சுறுத்தலை கொடுக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், அடுத்த ஒரு பெருந்தொற்றுக்கு உலகம் தயராக இருக்க வேண்டும் எனவும்இ அது கொரோனா தொற்றை விட ஆபத்தானதாகவும் இருக்கும் எனவும் எச்சரித்திருந்தாஅச்சம்.
உலக சுகாதார அமைப்பு இவ்வாறு கூறிய பின் அதன் இணையதளத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நோய்களின் பட்டியல் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
அடுத்த ஒரு பெருந்தொற்றை ஏற்படுத்தக் கூடிய நோய்கள் என தேர்வு செய்யப்பட்டு வெளியான இந்தப் பட்டியலில் இடம்பெற்று இருந்த நோய்களில் எபோலா, சார்ஸ், ஜிகா வைரஸ் ஆகியவை இடம் பெற்று இருந்தன.
இந்த நோய்கள் பற்றி உலக மக்கள் பரவலாக அறிந்து இருந்தாலும் இறுதியாக பட்டியலில் 'Disease X' என குறிப்பிடபட்டுள்ளது சற்று அச்சம் ஏற்படுத்துவமாக அமைந்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைபின் இணையதளத்தில், தொடர்ச்சியான பெருந்தொற்றுக்கள் pathogen (நோய்க்கிருமிகள்) மூலம் ஏற்படக்கூடும் . இது ஒரு புதுவகையான வைரஸ், பாக்டீரியா அல்லது பூஞ்சை என்பதாகக்கூட இருக்கலாம்.
சிகிச்சை முறைகள் எதுவும் அறிந்திடாத ஒன்றாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு முதல் உலக சுகாதார நிறுவனம் இதுபோன்ற பட்டியலை வெளியிட்டது.
அதற்கு அடுத்த ஆண்டே கொரோனா, உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது கவனிக்க வேண்டியது.
உலக சுகாதார நிறுவனத்தின் மேற்கூறிய பட்டியலில், மார்பர்க் வைரஸ், கிரிமீன் - காங்கோ ஹெமோராஜிக் காய்ச்சல், லஸ்சா காய்ச்சல், நிபா மற்றும் ஹெனிபவிரல் நோய்கள் உள்ளிட்டவையும் பட்டியலிட்டப்பட்டுள்ளது.
காடுகள் அழிப்பதன் மூலம் குறைந்து வருகிறது. அவற்றில் உள்ள கிருமிகள் வாழ வழி தேடி மனித உடல்களில் தஞ்சம் புகும்போது இதுபோன்ற புதிய, புதிய கிருமிகள் புதிய தொற்று நோய்களுக்கு காரணமாகின்றன எனமருத்துவ வல்லுனர் புகழேந்தி தெரிவித்தார்.
மேலும் புவி வெப்பமடைதலும் இதுபோன்ற புதிய நோய்த்தொற்றுக்கு காரணம் என்று அறிவித்துள்ளார்.
-----------------------------------------------------
வருமானவரி சோதனை.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இரண்டு வீடுகளிலும் அதிக அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். மொத்தம் 40 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகிறது.
செந்தில் பாலாஜியின் கரூர் வீடு, சென்னையில் உள்ள கிரீன் வேஸ் வீட்டிலும் இன்று அதிகாலையிலேயே அதிகாரிகள் நுழைந்து அந்த சாலையை மொத்தமாக மூடி ரெய்டு நடத்தி வருகின்றனர். இதனால் அங்கே பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
சென்னை, கரூர், கோவையில் இந்த ரெய்டு அதிக அளவில் ரெய்டு நடத்தி வருகின்றனர். கரூரில் இருக்கும் செந்தில் பாலாஜி வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக அரசு ஒப்பந்ததாரர்கள் மீது வருமானவரித்துறை ரெய்டு நடத்தி வருகின்றனர்.
அரசு ஒப்பந்ததாரர்கள்தான் அதிகமாக ரெய்டில் குறி வைக்கப்பட்டு உள்ளனர். டாஸ்மாக் ஒப்பந்தம், மின்சாரத்துறையில் ஒப்பந்தம் மேற்கொண்ட ஒப்பந்தாரர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
மொத்தம் 40 இடங்களில் ரெய்டு என்று தகவல் வெளியானாலும், உண்மையான எண்ணிக்கைப்படி 200க்கும் அதிகமான அதிகாரிகள் இந்த ரெய்டை நடத்தி வருகின்றனர்.
இந்த ரெய்டு பெரும்பான்மைக்கும் அடுத்த 3 நாட்களுக்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக கொங்கு மண்டலங்களை குறி வைத்து ரெய்டு நடத்தப்படுகிறது.
*ஐடி ரெய்டு: பெண் அதிகாரியிடம் திமுகவினர் வாக்குவாதம்!*
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டிற்கு சோதனைக்கு சென்றபோது பெண் அதிகாரியிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூரில் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்வீட்டில் வருமானவரித் துறை பெண் அதிகாரி ஒருவர் சோதனைக்காக செல்ல முயன்றார். அப்போது அவரது அடையாள அட்டையை காண்பிக்குமாறு அங்கிருந்த திமுகவினர் கேள்வி கேட்டனர். இதனால் திமுகவினருக்கும் பெண் அதிகாரிக்கும் இடையேகடும் வாக்குவாதம் ஏற்பட்டது
அப்போது அந்தப் பெண் அதிகாரி, குமார் என்ற திமுக தொண்டரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த திமுக தொண்டர் குமார் மயக்கம் அடைந்தார்.
பின்னர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திமுகவினர் கருரில் தனியார் மருத்துவமனையில்அனுமதித்தனர்.
இதனிடையே குமாரை தாக்கிய பெண் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறி திமுகவினர் அவரது காரை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த கரூர் நகர காவல் நிலையத்தினர் திமுகவினரை சமாதானம் செய்து அந்தப் பெண் மீது வழக்குப்பதிவு செய்து காருடன் பெண் அதிகாரியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த குழப்பத்தால் அங்கு பரபரப்பு நிலவியது. பெண் அதிகாரி வந்த கார் கண்ணாடி மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
------------------------------------------