விகடானந்தா நிலவரம்

 விகடன் குடும்பத்தில் சொத்துச் சண்டை – சரிக்கட்ட பாஜகவிடம் பேரம் பேசிய சீனிவாசன் .இதுதான் பத்திரிகை உலக இன்றைய கழுகார் பரபரசெய்தி.

விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசனின் குடும்பத்தில் மீண்டும் சொத்துச் சண்டை உச்சத்தை அடைந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

சீனிவாசனின் தந்தை பாலசுப்பிரமணியனுக்கு 5 மகள்களும் உள்ளனர். 

தாத்தாஎஸ்.எஸ்.வாசன் சேர்த்துவைத்தை சொத்துகள் மற்றும் விகடன் குழுமத்தை மொத்தமாக சீனிவாசன் அபகரித்து விட்டதாகவும். கொஞ்ச நஞ்ச சொத்துக்களைக் கொடுத்து பின்னால் செய்கிறேன் பின்னால் செய்கிறேன் என சகோதரிகளை ஏமாற்றிவிட்டதாகவும் குடும்பத்தில் அடிக்கடி குடுமியைப் பிடித்துக் கொள்வது தொடர்ந்துவந்தது.

2001 ஆம் ஆண்டு விகடன் குழுமத்தின் மொத்த அதிகாரத்தையும் கையிலெடுத்த சீனிவாசன், 

தந்தை பாலசுப்பிரமணியத்தை ஒதுக்கி வைத்துவிட்டு சகோதரிகளையும் ஏமாற்றி வந்ததாக அப்போதே பல தகவல்கள் வெளியாகின.

இதனால், மகனோடு கோபித்துக் கொண்டு சென்ற பாலசுப்பிரமணியனை அப்போதைய மூத்த பத்திரிகைகுடும்பத்தைச் சார்ந்த ஒருவர் சமாதானப்படுத்தி அழைத்து வந்துள்ளார்.

அதன் பின்னரும் சீனிவாசனின் ஏமாற்றுப் போக்கை சகித்துக் கொள்ளாத பாலசுப்பிரமணியன் தனது தோட்டத்திலும், மகளின் வீட்டிலும் வாழ்ந்து மறைந்து விட்டார். 

விகடன் குழுமத்தில் லாஸ் என்று இல்லாத பொல்லாத காரணங்களைக் கூறி,சொத்துக்களை வேறு வகையில் தனது பெயருக்கும், மனைவியின் பெயருக்கும் சீனிவாசன் மடைமாற்றும் போதெல்லாம் எதிர்ப்புக் குரல்கள் சகோதரிகளிடமிருந்து எழுந்துள்ளன.

அப்போதெல்லாம், சமாதானம் செய்து வந்த சீனிவாசனின் தாயாரும், சென்ற ஆண்டு நவம்பரில் மறைந்துவிட சொத்துச் சண்டை உச்சத்திற்குப்போயுள்ளதாம்.

இந்த நிலையில், சகோதரிகளைச் சரிக்கட்ட ஒரு பெருந்தொகையைத் திரட்ட சீனிவாசன் திட்டமிட்டதாக விபரமரிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இப்போதைக்கு பெரும் தொகை திரட்ட பாஜகதான் சரியான ஆப்சன் என்று சீனிவாசனுக்கு சிலர் ஆலோசனை கூற, அதன்படி பா.ஜ.க.விடம் பேரம் பேசியதாக கூறப்படுகிறது.

சீனிவாசன் நினைத்த அளவிற்கு ஒரே பேமெண்ட் என்பதாக அந்த பேரம் படியவில்லையாம். 

புராஜெக்டுக்கு இத்தனை கோடி என்கிற அளவில் பேரம் பேசப்பட்டு வேலைகள் ஜரூராக நடந்து வருகிறதாம்.

இந்த நிலையில், ஒரு புறம் சகோதரிகள் நெருக்கடி கொடுக்க, எதற்கு அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என மனைவி சண்டைபிடிக்க,என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பித் திரிகிறாராம் பாரம்பரியமான விகடன் சீனிவாசன்.

இந்த பிரச்சனை  2006 காலகட்டத்தில் கலைஞர் அவர்களிடம் வந்த போது திட்டி அனுப்பினார் என்பது கழக உடன்பிறப்புகள் பரவலாக அறியும் ஒரு செய்தி என்ன சொல்லி அனுப்பினார் தெரியுமா 

ஏன்யா பெண்களுக்கு சொத்து உரிமை கொண்டு வந்த என்னை வைத்தே தவறு செய்ய சொல்கிறாயா என்று திட்டி அனுப்பி வைத்தார்.

ஏற்கனவே சனாதன தர்ம அடிப்படையில் பாஜக விற்கு சார்பாக செயல்படும் விகடன் இனி RSS ,சாவர்கர் பேரன்கள் பத்திரிபையாகவே மாறிவிடும் அபாயம் உள்ளது.

--------------------------------------------------------

அனுதாபங்கள்

தமிழ் திரைப்படம் நகைச்சுவை நடிகரும், இயக்குநருமான  சில காலமாக கல்லீரன் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.  

மனோபாலா சிகிச்சை பலனின்றி இன்று ( மே 3) உயிரிழந்தார்..

---------------------------------------------------------------

சில நாட்களுக்கு முன் இயக்குநர்,நடிகர் மனோபாலா கொடுத்த பேட்டி.

சம்பாதிப்பதும், அதை டாக்டரிடம் கொண்டு போய் கொடுப்பது தான் என்னுடைய வேலையாகிவிட்டது. இயக்குனராக நான் உச்சத்தில் இருந்த சமயம், எனக்கு பயங்கர சிகரெட் பழக்கம் இருந்தது. எப்போது புகை வந்து கொண்டிருப்பதால், என்னை ‘சிம்னி’ என்று தான் அழைப்பார்கள்.

இந்தி நடிகை ரேகா, பான்பராக் பாக்கெட் இரண்டை கட்டி, என் கழுத்தில் மாட்டிவிட்டார். சிகரெட் சாம்பலை அதில் தட்டிக் கொள்ள அந்த ஏற்பாடு. நான் சிகரெட் குடிப்பதால் ஷெட்டில் இருக்கும் அனைவருக்கும் இம்சை தான். நாள் ஒன்றுக்கு, 200 சிகரெட் புகைப்பேன்..

அதனால் தான் என் எலும்புகள் எல்லாம் பலவீனமாகிவிட்டது. ஒரு கட்டத்தில் இன்னொரு சிகரெட் புகைத்தால், நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்று டாக்டர்கள் கூறினார்கள். அப்படியே நிறுத்திவிட்டேன். நிறுத்தி இரண்டரை மாதம் அவ்வளவு அவஸ்தை.

உள்ளே இருந்த புகையெல்லாம் வெளியே போகும் போது, அது அவ்வளவு கொடுமையாக இருந்தது. அன்று செய்தது, இன்றும் பயங்கரமாக பாதிக்கிறது. தெலுங்கு படப்பிடிப்புகளுக்கு போகும் போது, மாடியில் இருப்பவரிடம் கீழே இருந்து ஓடிச் சென்று தகவல் சொல்லும் படியான காட்சிகள் இருக்கும்.

பெரும்பாலும் வில்லன்களுடன் தான் என் கதாபாத்திரம் இருக்கும். அவர்களிடம் ஏதாவது சொல்ல வேண்டுமானால், கீழே இருந்து மேல இருக்கும் அவர்களிடம் ஓடி வர வேண்டும். 

அப்போது தான், சிகரெட் புகைத்தது வேலையை காட்டும். அதுவே பத்து டேக், 11 டேக் ஆகிவிட்டால், அவ்வளவு தான். ஓடி வந்து மூச்சு வாங்கி டயலாக் பேசுவதற்குள், ‘கேப் வந்திருச்சு… ஒன்ஸ்மோர்னு’ சொல்லிடுவாங்க.

அந்த மூச்சை விட்டா தான் நான் உயிரோடேயே இருப்பேன். ஆனால் அது அவர்களுக்கு தெரியாது. அதன் பிறகு தான், என் கண் முன்னால் யாரெல்லாம் சிகரெட் குடிக்கிறாங்களோ, அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக திருத்த ஆரம்பித்தேன்.

‘வேணாங்க… மது கூட குடிங்க… சிகரெட் புகைக்காதீங்க… நான் தான் அதற்கு உதாரணம்’ என கெஞ்சுவேன். சிகரெட் நிறுத்தி மருத்துவமனையில் இருந்து வெளியே வருகிறேன், ஒரு ரிக்‌ஷா கதாபாத்திரம் தந்தார்கள். 

எனக்கு ஓட்டத் தெரியாது. ஒரு உதவி இயக்குனரை அனுப்பி, அவருடன் பழகச் சொன்னார்கள். ரிக்‌ஷாவை இழுத்தால், மூச்சு வாங்கும். அப்போது வந்து, இந்தாங்கண்ணே… என்று கையில் ஒரு பீடியை கொடுப்பாங்க

கேட்டால், ரிக்‌ஷாகாரரிடம் பீடி இருக்க வேண்டும், அதிலும் வாயில் இருக்க வேண்டும் என்பார்கள். காசு வாங்கியாச்சு, என்ன சொல்றுதுனு தெரியாது,’’

என்று தான் முற்காலத்தில் கடைபிடித்த பழக்கத்தையும், அதனால் சந்தித்த வேதனைகளையும் பகிர்ந்திருந்தார் மனோபாலா!.

------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?