படிக்க,குடிக்க...

 என்னை படிக்க வச்சது காமராஜர் குடிக்க வச்சது கலைஞர் - சீமான்.!

சீமாண்டி...  நீ பிறந்தது 1970இல். அப்போ முதல்வராக இருந்தது கலைஞர். அவர் ஆட்சியில் இருந்தப்போ தான் நீ ஒன்னாப்பு சேர்ந்தாய்...  ஆகவே உன்னை படிக்க வச்சது கலைஞர்தான்.

ஆக்சுவலா நீ பொறக்குறதுக்கு ஏழு வருஷம் முன்னாடியே..அதாவது 1963லயே காமராஜர் முதல்வர் பதவியில் இருந்து விலகி விட்டார்.  ஆகவே உனக்கும் காமராஜருக்கும் எந்த ஸ்னான ப்ராப்தியும் கிடையவே கிடையாது. 

நீ குடிக்கிற வயசு வந்தப்ப..அதாவது உனக்கு 21 வயசு வந்தப்ப, அதாவது 1991ல ஜெயலலிதா தான்.

இங்க முதல்வர். அந்தம்மா தான் டாஸ்மாக் கொண்டுட்டு வந்துச்சி...  அதனால நீ குடிகாரனா ஆனதுக்கு ஜெயலலிதா வேணா காரணமா இருக்கலாம்...!

ஸோ... இத மாதிரி பொய் பித்தலாட்டம் எல்லாம் பேசிட்டு திரியாம போய் குடிகாரர்கள் மறுவாழ்வு மையத்துல அட்மிட் ஆகற வழிய பாரு..!

      டுவீட்டரில்                    - பங்கர் மாணிக்கம்

-----------------------------------------------------------

PTR பழனிவேல் தியாகராசன் துறை மாற்றம்.

எதிர்பார்த்தது போலவே பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இலாகா மாற்றம் செய்யப்பட்டு விட்டது. நிதியமைச்சராக இருந்த அவரிடம் தகவல் தொழில்நுட்பத்துறை வழங்கப்பட்டுள்ளது. 

மிகப்பெரிய திறமைசாலியான பிடிஆரிடம் இருந்து நிதித்துறை பறிபோனாலும், ஐடி துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்த அவர் தயாராகி வருவதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக சுற்றி வந்த யூகங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டன. 

தமிழக அமைச்சரவை மாற்றம் நிறைவடைந்துவிட்டது.

 இதில் எதிர்பார்த்தது போலவே, பிடிஆர் பழனிவேல் ராஜனின் நிதித்துறை இலாகா மாற்றப்பட்டு, அவருக்கு தகவல் தொழில்நுட்பத்துறை கொடுக்கப்பட்டுள்ளது.

 தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுக்கு நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பிடிஆரின் துறை பறிக்கப்பட்டதற்கு ஆடியோ விவகாரம் தான் காரணம் என பரவலாக பேசப்பட்டாலும், திமுக வைச்சேர்ந்தவர்களே நம்பினாலும் இது சில மாதங்களுக்கு முன்பே முதல்வர் எடுத்த முடிவு என முக்கிய அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் தகவல் தொழிநுட்பத்துறையை பல மடங்கு மேம்படுத்துவதுதான் முதல்வர் மு.க. ஸ்டாலினின் முதன்மையான குறிக்கோள் எனக் கூறப்படுகிறது.

முதன்முதலாக தகவல் தொழில்நுட்பத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியது மறைந்த முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில்தான். 

அவரது ஆட்சிக்காலத்தில்தான் சென்னையில் டைடல் பார்க் அமைக்கப்பட்டது.

 , அந்த சமயத்தில் இந்தியாவில் அதுபோன்ற பெரிய ஐடி பூங்கா எங்கும் தொடங்கப்படவில்லை. அதன்படி பார்த்திருந்தால், இன்றைக்கு தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே ஐடி துறையில் கோலோச்சி இருக்க வேண்டும்.

ஆனால் அதன் பின் அதிமுக ஆட்சி என மாறி, மாறி ஆட்சிமாற்றம் வந்த்தாலும் திமுக கொண்டு வந்த வளர்ச்சி,தொலைநோக்குத் திட்டங்களை அதிமுக முடக்கி வைத்ததாலும் அந்த நிலை ஏற்படவில்லை.

ஆனால், தற்போது கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் நம்மை விட பல மடங்கு உயரத்தில் உள்ளன.

 இந்நிலையில், ஐடி துறையில் தமிழ்நாடு அப்படியே  தேங்கி விட்டது.பெழிய வளர்ச்சி. இல்லை.

, அதை சரிசெய்யவே தங்கம் தென்னரசிடம் அந்த துறையை முதல்வர் ஒப்படைத்தாராம். ஆனால், முதல்வரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவர் செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ஐடி துறையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல சரியான ஆள் யார் என முதல்வர் தனது நெருங்கிய சகாக்களிடம் ஆலோசனை நடத்திய போது, அனைவரும் ஒரே நேரத்தில் பிடிஆரின் பெயரை தான் கூறி இருக்கிறார்கள்.

 வெளிநாடுகளில் படித்த அனுபவம், நிதி மேலாண்மை, மார்க்கெட்டிங் என பல விஷயங்களில் கரைக்கண்டவர் என்பதால் பிடிஆர் பெயரை அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

 இதன்பேரிலேயே, ஐடி துறைக்கு பிடிஆரை   கடந்த பிப்ரவரி மாதமே முதல்வர் தேர்வு  செய்து.  பிடிஆரிடமும் அதைக் கூறியுள்ளார்.பிடி ஆரும் அதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார். .

இதன் தொடர்ச்சியாகவே, புதிய டைடல் பார்க் குறித்த அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தன. 

மதுரை, விழுப்புரம், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் புதிய டைடல் பார்க்குகள் அமைக்கும் அறிவிப்புகளையும் பிடிஆர் தனது பட்ஜெட் உரையில் வெளியிட்டிருந்தார். 

இந்த பின்னணியில் தான், அவருக்கு தகவல் தொழில்நுட்பத்துறை கொடுக்கப்பட்டுள்ளது. ஐடி துறையில் இந்தியாவிலேயே தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக மாற்றுவதுதான், பிடிஆருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடுத்திருக்கும் டார்கெட் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு பொருளாதாரத்தை உயர்த்தி கடனை குறைத்து தனது பொறுப்பை சரியாக நிறைவேற்றிவிட்டார் பிடிஈர்.

அவர் போட்டு தந்த பாதையில்தான் அடுத்துவரும் எந்த அமைச்சரும் செல்ல வேண்டும்.

அவர்களுக்கிப் பக்கபலமாக ஜெயரஞ்சன் உட்பட்ட ஸ்டாலின் அமைத்த பொருளாதார அறிஞர் குழு இருக்கும்.  ஆலோசனைகள் வழங்கும்.

தற்போது, பிடிஆர் தனது சொந்த மாவட்டமான மதுரையில்  2 புதிய டைடல் பார்ககுகளை அமைப்பதில் அவர் முழுவீச்சில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இன்றைய சூழலில், சென்னை, கோவையை தவிர பிற மாவட்டங்களில் ஐடி நிறுவனங்கள் பெரிய அளவில் இல்லை. 

எனவே, மற்ற மாவட்டங்களில் குறிப்பாக தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை ஆகிய பகுதிகளில் ஐடி நிறுவனங்களை அதிக அளவில் கொண்டு வருவதற்கான நடவடிக்கையிலும் பிடிஆர் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

 இதேபோல, பெங்களூருக்கு இணையாக சென்னையையும் IT HUB ஆக மாற்றும் வேலையில் பிடிஆர் முழு முயற்சியில் இறங்குவார் எனவும் அரசு,ஐடி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆடியோ,ஆர்.என்.ரவி விவகாரங்கள் காரணமில்லை.அப்படி எண்ணுபவர்கள் ஏமாந்து போவார்கள்.


-------_---------------_-------------------------_-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

ரூ360 கோடிகள் வீணா?

கட்டுமானம் ஆரம்பம்?