மணிப்பூர்

 இன்னோரு காஷ்மீராகிறது.

மணிப்பூர் 90% காடுகளும் 10% சமவெளி நிலமும் கொண்டது. 

இதில் மாநில மக்கள் தொகையில் 60% பேர் சமவெளி நிலத்தில் வசிக்கின்றனர்.

அவர்கள் பெரும்பாலும் மேய்ட்டி இனத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் பிராமணர்களில் ஒரு பிரிவினர்.இவர்கள்  OBC & SC (ஆம் இரண்டிலும்) தொகுப்பில் இருப்பவர்கள்.

இப்போது ST தொகுப்பிலும் செல்ல விரும்புகிறார்கள். அதற்கு மணிப்பூர் உயர்நீதி மன்றம் அனுமதியும் அளித்துவிட்டது. இது கூடாது. தவறானது. பல மோசடிகள் நடக்கும் என இன்னொரு தரப்பினர் போராடுகிறார்கள். இரண்டாவது தரப்பு காடுகளில் வாழும் நாகா & குக்கி இன பழங்குடியினர். 

இவர்கள் ST தொகுப்பில் உள்ள பழங்குடியினர். இவர்கள் சொல்லும் காரணம் என்னவெனில்

மேய்ட்டி இன மக்கள் ST என்றானால் அவர்கள் காடுகளை எளிதில் வாங்கி விற்றுவிடுவார்கள். காடுகளை அழித்து இயற்கையை அழித்து பெருமுதலாளிகளுக்கு விற்றுவிடுவார்கள் என்று மறுக்கின்றனர். சில நிகழ்வெடிவைத்து.

இவர்கள் கருத்தை உண்மையாக்கும்படியாக ஒட்டி நடந்திருக்கின்றன. இது பிரச்சினை. 

இதை ஒட்டி இரு சாராரும் சண்டையிடுகின்றனர். 

புதன்கிழமை இரவு பழங்குடிகள் ஆதரவு தரப்பு மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் திறந்துஷைக்க இருந்த GYM மற்றும் அதை சுற்றிய விழா நடக்கும் இடத்தில் வெடிவைத்து.

தீக்கிரையாக்கியதால் வன்முறை தொடர்கிறது. ஆளும் மணிப்பூர் பாஜக அரசு ராணுவத்தையும் அஸ்ஸாம் ரைபில்ஸ் யும் வரவழைத்திருக்கிறது. 

உண்மையான stபழங்குடியினரைத் தவிர மணிப்பூரில் காடுகளை நிலங்களை எளிதில் மற்ற தரப்பு வாங்கமுடியாது. சட்டங்கள் அப்படி. 

இதனால்தான் மேய்டி இனத்தினர் பிராமணர்களாக இருந்தாலும் பிற்பட்டோர்,தாழ்த்தப்பட்டோர என எல்லாபிரிவிலும் வருகிறார்கள் .

அதற்கு பா.ஜ.க வைச் சேர்ந்த முதல்வர்களும்  துணை போகின்றனர்.

கடைசியாக நிலங்களை ,காடுகளை வாங்கி அழித்து பணம் சம்பாதிக்க STபிரிவு பழங்குடியினர் பட்டியலிலும் சேர்க்க ஆளுங்கட்சி ஆதரவுடன் கலவரத்திலும் ஈடுபடுபின்னர்.

காடுகளை அழிக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. 

அதில் சமீபத்தில் காடுகளுக்குள் வாழும் பழங்குடியின கிறிஸ்துவ மக்களின் சர்ச்சுக்கள் 2-3 இடிக்கப்பட்டதை செய்தியில் நீங்கள் பாத்திருக்கலாம் .

மற்ற மாநிலங்களில் வாழும் (முக்கியமாக குஜராத்திகள்) மக்களோ தொழிலதிபர்களோ மணிப்பூர் காடுகளை வாங்க சட்டம் அனுமதிக்காது என்பதால் 

அதே மாநிலத்தில் உள்ள மேய்ட்டி இன மக்களை நீதிமன்றத்தின் மூலம் ST ஆக்கி (ST மட்டுமே காடுகளை வாங்க முடியும் மணிப்பூரில்)அவர்கள் மூலமாக காடுகளை கபளீகரம் செய்ய பா.ஜ.க பிரேன் சிங் அரசு( infamous industrialists) திட்டமிட்டிருக்கிறது.


காஷ்மீரைப் போல் மணிப்பூரும் சீரழிக்கப்படப் போகிறது கார்பரேட்கள்,மதவாத ஆதரவு ஆட்சியாளர்களே அதெச் செய்கிறார்கள்.

-----------------------------------------------------------இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

ரூ360 கோடிகள் வீணா?

கட்டுமானம் ஆரம்பம்?