சரத்பாபு

1977 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகர் சரத்பாபு காலடி எடுத்து வைத்தார்.

இவரும் பாலச்சந்தர் பட்டறையில் இருந்து வெளிவந்தவர் தான்

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்ற பாடலைக் கேட்கும்போது அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது நடிகர் சரத் பாபு தான். 

அந்த பாடலைப் பிடித்தவர்களுக்கு சரத் பாபுவை பிடிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. தமிழ் சினிமாவில் அவர் ஏற்று நடித்த பல படங்கள் முக்கியமான திரைப்படங்களாகும்.

நிழல் நிஜமாகிறது, சலங்கை ஒலி, 47 நாட்கள், வேலைக்காரன், அண்ணாமலை, மெட்டி, பகல் நிலவு, சங்கர் குரு, சிப்பிக்குள் முத்து, முத்து என தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய இயக்குனர்கள் இயக்கிய திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதில் மிகவும் முக்கியமான திரைப்படம் எதுவென்று கேட்டால் முள்ளும் மலரும் மற்றும் சலங்கை ஒலி என கூறலாம்.

முள்ளும் மலரும் திரைப்படத்தில் முதல் பாதியில் கடுமையான அரசு ஊழியராகவும், இரண்டாவது பாதியில் காதல் நாயகனாகவும், அப்பாவி நண்பனாகவும் நடிகர் சரத்பாபு நடித்திருப்பார்.

 இரண்டு கதாபாத்திரங்களையும் நடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால் நடிகர் சரத்பாபு அந்த கதாபாத்திரங்களை சரியான முறையில் கையாண்டு இருப்பார்.

உண்மையில் கூற வேண்டுமென்றால் நடிகர் சரத்பாபு இயக்குனர்களின் நாயகன். ஒரு படத்தில் இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே தன் போக்கில் கச்சிதமாக நடித்துக் கொடுக்கக்கூடிய நபரவியது.

கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது. 

அவருடைய உடல் உறுப்புகள் செயலிழக்க தொடங்கி விட்டதாகவும், எனவே ஆவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாககூறப்பட்டது. சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் அவர் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் சரத்பாபு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

--------------------------+

தற்போது 71 வயதாகும் சரத்பாபு.. 

இவர் தனது 22 ஆவது வயதில் தெலுங்கு நடிகை ராமா பிரபா என்பவரை மணந்தார். சில வருடங்களில் அவரை விவாகரத்துச் செய்த சரத்பாபு பின்னர் மூத்த வில்லன் நடிகரான என்.எம் நம்பியாரின் மகளான சினேகா நம்பியாரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்கள் இருவரையும் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக ஒன்றாக வாழ்ந்த பின்னர் 2011 இல் சட்டபூர்வமாகப் பிரிந்தனர். 

இவ்வாறாக 2திருமணங்களும் தோல்வியில் முடிந்தும் 3ஆவதாக திருமணம் செய்து கொள்ளும் ஆசை அவருக்கு இன்னமும் இருக்கின்றது. அதனால் 61 வயதில் மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளார்.

 இது குறித்த அறிவிப்புக் கூடப் பரபரப்பாக வெளியாகி இருந்தது. 

இதனால் அவர் மீது பல விமர்சனங்களும் எழுந்தன. 

இதற்கு சரத்பாபு "எனக்கு 60 வயது ஆகின்றது, நான் இன்னும் இளமையாகவே இருக்கின்றேன், மனதளவில் மட்டுமல்ல உடலளவிலும் எனக்கு வயசாகவில்லை" எனப் பதிலளித்திருந்தார்.

---------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் முதல் தமிழ் பைபிள்

திரிணாமுல் ஊழல்

மாரடைப்பு