குஜராத் உண்மைக்கதை!
பிரபல இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த படத்தில் கேரளாவைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.இந்த படத்தின் ட்ரைலரிலேயே இது ஒரு உண்மை கதை என்றும், கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு,
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவதாகவும் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதன்பின்னர் இது தவறான தகவல் என்றும் 3 சம்பவங்கள் மட்டுமே இவ்வாறு நடந்துள்ளது என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டது.
இந்த திரைப்படத்துக்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மோடியின் சொந்த ஊரான குஜராத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கடத்தப்பட்டு விபச்சாரத்துக்காக விற்பனை செய்யப்படும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில், குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் காணாமல் போனதாகவும் ,
இதில் 2019 ஆம் ஆண்டு 9,268 பெண்கள் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 2020 ஆம் ஆண்டில் 8,290 பெண்கல் காணாமல் போயுள்ளனர்.
இது தொடர்பாக பேசியுள்ள முன்னாள் காவல்துறை அதிகாரிகள் சிலர், காணாமல்போன சில பெண்கள் மற்றும் சிறுமிகள் வெளி மாநிலங்களுக்கு பாலியல் தொழிலுக்காக கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்றும், பெண்களில் பலர் சட்டவிரோத மனித கடத்தல் கும்பலால் கடத்தி சென்று வெளி மாநிலங்களில் விற்கப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளனர்.
மேலும், இது போன்ற வழக்குகளில் போலிஸார் மெத்தனமாக செயல்படுவதே இதுபோன்ற சம்பவம் அதிகரிக்க காரணம் என்றும் கூறியுள்ளனர்.
இது குறித்து விமர்சித்துல குஜராத் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹிரென் பங்கர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும்அமைச்சர் அமித்ஷா தங்கள் சொந்த மாநிலமான குஜராத்தில் 40,000 பெண்கள் காணாமல்போனதை விட, கேரளாவில் பெண்கள் காணாமல் போனது பற்றி அதிகம் பேசுகிறார்கள் என விமர்சித்துள்ளார்.
-------------------------------------------------------
மணிப்பூர் சம்பவம் நமக்கு பாடம்.*
இப்போது பற்றியெறியும் மணிப்பூர் அரசியலை உற்றுக் கவனித்தால், தமிழகமும் திராவிட மாடலும் அதனின்று நல்லதொரு பாடத்தை கற்றுக் கொள்ள முடியும்.
மணிப்பூர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமாகும். மக்களவைக்கு வெறும் 2 எம்பிக்களை அனுப்பும் சிறிய நிலப்பரப்பு.மாநில சட்டமன்றம் 60 உறுப்பினர்களைக் கொண்டது.
மெய்டெய் மக்கள் பெரும்பான்மையாக சமவெளியில் வசிக்கின்றனர். மெய்டெய் மொழியே மணிப்பூரின் மாநில மொழி ஆகும். மக்கள் தொகையிலும் ஏறத்தாழ அறுபது சதவீதம் இவர்களே. மாநிலத்தின் சட்டமன்றத்தில் அறுபதுக்கு நாற்பது இடங்கள் இவர்கள் வசம்.
ஆனாலும்,மெய்டெய் பழங்குடிகள் தங்களை அரசின் அங்கீகரிக்கப்பட்ட பழங்குடி பட்டியலில் சேர்த்து, எஸ்டி இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது நிச்சயம் எஸ்டி பிரிவினரின் உயர்கல்வி கல்வி வேலைவாய்ப்பு உரிமைகளை மட்டுப் படுத்தும். எனவே, மலையில் வசிக்கும் நாகா, குகி தீர்ப்புபழங்குடி எஸ்டி மக்கள் பேராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்த பிறகு அங்கு சித்து விளையாட்டுகள் துவங்கின.
குறிப்பாக, மெய்டெய் குடிகளை எஸ்டி பட்டியலில் சேர்ப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும் என்று மணிப்பூர் உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்புஒன்று, கங்குகளைக் கிளறி விட்டது.
சமீபத்தில், பாஜக முதல்வர் பைரன்சிங் திறந்து வைத்த ஒரு உடற்பயிற்சிக் கூடம் தாக்குதலுக்கு உள்ளானது. அதைத் தொடர்ந்து, மலைவாழ் குகி மக்கள் வசிக்கும் சில பகுதிகளை ஆக்ரமிப்பு என்று கூறி அப்புறப் படுத்தும் வேலையை மணிப்பூர் பாஜக அரசு துவங்கியது.
அவ்வளவுதான் கலவரம் மூண்டு விட்டது.
சாதாரணமாக இதைக் கவனித்தாலே இதில் செயல்பட்டுள்ள பிரித்தாளும் சூழ்ச்சி நன்கு விளங்கும். சமூகங்களை மோதவிட்டு ஆதாயம் தேடுவது பாஜகவுக்கு கைவந்த கலை.
மணிப்பூரில் 2017 சட்டமன்ற தேர்தலில் 28 இடங்களை காங்கிரஸ் வென்றிருந்தது. ஆட்சி அமைக்க அக்கட்சிக்குமேலும் 3 இடங்கள் தேவைப்பட்டது . ஆனால், 21 இடங்களை மட்டுமே வென்ற பாஜக வுக்கு மணிப்பூரின் தேசிய மக்கள் முன்னணி(NPP), நாகா மக்கள் முன்னணி(NPF)யும் ஆதரவு தந்து முதன்முறையாக பாஜகவை ஆட்சி அமைக்க வைத்தன.
2022 தேர்தலில் பாஜக 32 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
எதிர்க்கட்சிகள் சிதறடிக்கப்பட்டு விட்டன. இப்போது NPPயும் NPF ம் செய்த தவறு அக்கட்சிகளுக்கு விளங்கி இருக்கும். ஆனால் பயனில்லை.
இப்போது மணிப்பூரின் பெரும்பான்மைவாத மெய்டெய் சமூக அரசியலை பாஜக ஊக்குவிக்கிறது. மெய்டெய் வெர்சஸ் நாகா, குகி மலைவாழ் பழங்குடிகள் எனும் இந்த மோஅமைதி
இறுதியில், மலை வளங்கள் யாவும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு சுரண்டப் படுவதுதான் நடக்கும் என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை.
மாநிலத்தில் பாஜகவை நுழைய விட்டதற்கு மிகப்பெரிய விலையை மணிப்பூர் கொடுத்துக் கொண்டுள்ளது. கிளறி விடப்பட்டுள்ள சமூக மோதல்கள் தணிந்து மணிப்பூரில் அமைதிதிரும்புவது அத்தனை எளிமையாய் இருக்கப் போவதில்லை.
தமிழகத்தில்,திராவிடத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்று உழைத்துக் கொண்டுள்ள சக்திகளை பாஜக ஆர்வமாக தூண்டி விடுவது மற்றொரு குஜராத்/உபி/ மணிப்பூர் அரசியல் தான். இதற்கு, திராவிட மாடலின் சறுக்கல்களும் உதவுகின்றன என்பதும் மறுப்பதற்கில்லை.
தமிழகத்தில் பாஜக , பாமக, அதிமுக, நாதக, அமமுக, பிற ஹிந்து அடிப்படைவாத அமைப்புகள் என பலவும் சுறுசுறுப்பாக திராவிட மாடலை அரித்துக் கொண்டுள்ளன. இறுதியில் இவை யாவும் சிதறடிக்கப் பட்டு பாஜக ஒற்றையாய் வலிமை பெறும். அது எத்தனை மெதுவாக நடந்தாலும் அதை நோக்கித்தான் பாஜக உழைக்கிறது.
*மணிப்பூரில் அமைதி திரும்பட்டும்.*
*இங்கு, திராவிட அமைப்பு கூடுதல் வலு பெறட்டும்.*
------------------------------------------------------