மோக்கா புயலறிக்கை.
*தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான மோக்கா தீவிர புயலாக மாறியது. இன்று அதிதீவிர புயலாக மாறி வடகிழக்கு திசையில் நகரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
•மதுரை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்தது. தாராபுரம் அருகே மரம் வேரோடு சாய்ந்ததில் வாகனங்கள் சேதமடைந்தன.
• டெல்லி சேவைகள் துறை செயலாளரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார் முதல்வர் கெஜ்ரிவால். ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் மாநிலங்களுக்கே அதிகாரம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த சில மணி நேரங்களில் அதிரடியான இந்த முடிவு
.• சுற்றுச்சூழல் அனுமதியின்றி சித்தூரில் நீர்த்தேக்கம் அமைக்கும் பணியை தொடங்கிய ஆந்திர நீர்வளத்துறைக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்.
• மராட்டியத்தில் உத்தவ் தாக்ரே அரசு கவிழ காரணமாக இருந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுனர் உத்தரவிட்டது சட்ட விரோதம். ஷிண்டே தரப்பு கொரோடா நியமனமும் தவறு என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
• உச்சநீதிமன்ற தீர்ப்பு பாஜகவுக்கு அரசியல் பாடம் என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. மராட்டிய முதல்வர் ஏக் நாத் ஷிண்டே ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தவ் தாக்ரே வலியுறுத்தியுள்ளார்.
• தன் பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க கோரிய வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.
• டிவிட்டருக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஒரு பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 6 வாரங்களில் பணிகளை துவங்குவார் என எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
• நீலகிரி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்துவது குறித்து எவ்வித இறுதி முடிவுகளும் எடுக்கப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
புயலறிக்கை.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த மோக்கா தீவிர புயல், மிக தீவிர புயலாக மாறியது.
இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று 11-05-2023 காலை வெளிட்டுள்ள அறிவிக்கையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், தீவிர புயலாக மாறி வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் இதற்கு மோக்கா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது மேலும், அதி தீவிர புயலாக உருவெடுத்து மத்திய வங்கக்கடல் பகுதியினை கடந்து 13.05.2023 அன்று சற்று வலுவிழந்து 14.05.2023 அன்று 120 – 145 கி.மீ. / மணி வேகத்துடன் வங்க தேசம் மற்றும் மியான்மர் இவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின் பேரில் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு எச்சரிக்கையின்படி, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மீன்வளத் துறை ஆணையருக்கும், கடலோர மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சென்னை பெருநகர ஆணையருக்கும் விளக்கமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணியர்கள் வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் 14.05.2023 வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள் விரைவாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த புயலுக்கு ஏமன் நாடு மோக்கா எனப் பெயர் கொடுத்துள்ளது. போர்ட் பிளேயருக்கு மேற்கு தென்மேற்கு சுமார் 510 கிலோ மீட்டர், வங்கதேசத்தின் காக்ஸ் பஜாரின் தென் - தென்மேற்கே 1210 கிலோமீட்டர், மியான்மர் சிட்வேவுக்கு தென் - தென்மேற்கில் 1120 கிலோமீட்டர் மோக்கா புயல் நிலை கொண்டிருந்தது.
முன்னதாக வரும் மே 13ம் தேதி அன்று மாலை இந்த புயல் அதன் உச்சக்கட்டத்தை எட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பிறகு 14ஆம் தேதி காலை முதல் சிறிது வலுவிழந்து தென்கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை நோக்கி காக்ஸ் பஜார் மற்றும் கியாக்பியு இடையே அதிகபட்சமாக 120 முதல் 13 கிலோமீட்டர் இடையே 145 கிலோ மீட்டர் வேகத்தில் மே 14ஆம் தேதி முன் பகல் நேரத்தில் கரையைக் கடக்கும்.
மியான்மர் இடையே கடையைக் கடக்கும் பொழுது காற்றின் வேகம் மணிக்கு அதிகபட்சமாக 130 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒரு மே 14ஆம் தேதி அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக நான்கு டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
மேலும் மே 13 மற்றும் 15ஆம் தேதிகளில் ஒரே இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும்போது வெப்ப அழுத்தம் சற்று அதிகமாகலாம் .