மூன்று பொய்கள்.

 நேற்றைய பேட்டியில் ஆளுநர் சொன்ன பல பொய்களில் முக்கியமானவை இந்த மூன்று பொய்கள். 

முதல் பொய் : கள்ளக்குறிச்சி கலவரத்தில் பசுமாடு பால்மடி அறுக்கப்பட்டது. 

உண்மை : அப்படி எந்த ஒரு சம்பமும் நடக்கவில்லை. ஒரு வாட்ஸ்சப் பொய்யை தெரிந்தே ஆளுநர் பரப்பினார். 

இரண்டாவது பொய் : தனது கான்வாய் மீது தாக்குதல் நடைபெற்றது. அதற்கு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. 

அந்தச் சம்பவத்தில் காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து சிலரை சந்தேகத்தின் பேரில் கைதும் செய்தனர். 

மூன்றாவது பொய்தான் அசகாய பொய். அயோக்கியத்தனமான பொய். சிதம்பரத்தில் குழந்தைத் திருமணமே நடக்கவில்லை.

 நடந்ததாகச் சொல்லி தீட்ஷிதர் சிறுமிகளிடம் இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனை நடைபெற்றது என்பது. 

கடலூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 39 குழந்தைத் திருமண குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அதில் 4 வழக்குகள் சிதம்பரம் தீட்ஷிதர்களின் குழந்தைகள். இது தொடர்பாக பல புகார்கள் வரப்பெற்றதின் பேரில் வழக்குப் பதிந்து 9 நபர்கள் கைதும் செய்யப்பட்டனர். இதுகூட தீட்சிதர்கள் சிலர் கூறிய குற்றசாட்டு அடிப்படையில்தான் வழக்கே பதிவு செய்யப் பட்டது.காணொலிகள் கூட கைது தொடர்பாக உள்ளது.

இத்தனை ஆதாரம் இருக்கும்போது குழந்தைத் திருமணமே நடக்கவில்லை என்பது எப்பேற்பட்ட பொய்!

அதிலும் அபாண்டமான பொய், இருவிரல் கன்னித்தன்மைச் சோதனை செய்யப்பட்டதாகச் சொன்னது!

மருத்துவப் பரிசோதனையை காவல்நிலையத்தில் போலீஸ் செய்வதில்லை. அதை செய்வது அரசு மருத்துவமனையில். 

அதிலும் இதுபோன்ற சிறுமிகள் வழக்கில் பெண் மருத்துவர்கள்தான் செய்வார்கள். உடன் பல செவிலியர்களும் இருப்பார்கள். சட்டப்படி தடை செய்யப்பட்ட ஒரு சோதனையை அவர்கள் எப்படி செய்வார்கள்?

 செய்தாலும் அதை மருத்துவ அறிக்கையில் பதிவு செய்ய முடியுமா? ரிகார்டில் சொல்ல முடியாத ஒரு குற்றத்தை மருத்துவர் செய்ய வேண்டிய அவசியம் என்ன?  

போகிற போக்கில் இப்படிப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டை அரசு மருத்துவர்கள் மீது சொல்லிவிட முடியுமா? 

நிரூபிக்கும் பொறுப்பு ஆளுநருக்கு இல்லையா! .இதுவும் அப்போது வாட்ஸ்சப்பில் பரப்பிய வதந்திதான்! 

அதை மீண்டும் ஆளுநர் இப்போது வாந்தியெடுக்கிறார். 

நடக்காத இருவிரல் பரிசோதனைக்கு பல மாதங்கள் கழித்து ஆளுநருக்கு கொந்தளிக்கத் தோன்றுகிறதே! 

நாடெங்கும் எத்தனை தலித் சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்படுகிறார்கள்! தமிழ்நாட்டில் கூட அந்தக் கொடுமை நடந்ததுண்டே! 

அப்போதெல்லாம் வராத கோபம் சிதம்பரம் தீட்ஷிதர் சிறுமிகள் விஷயத்தில் மட்டும் வருகிறதே! இவர் யாருக்கான பிரதிநிதி? 

எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ்நாடு முழுக்க நூற்றுக்கணக்கான குழந்தைத் திருமண வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. 

இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணமே நடக்கவில்லை ஒரு மாநிலத்தின் ஆளுநர் சொன்னால் அந்த வழக்குகளின் விசாரணையின் போக்கு என்னவாகும்? 

இவரும் முன்னாள் காவல் அதிகாரிதானே!

தனது பதவிக்கு இருக்கும் constitutional immunity யை சாதகமாகப் பயன்படுத்தி வேறெந்த ஆளுநரும் இத்தனை தகுதி குறைவாக பேசியதும் இல்லை. செயல்பட்டதும் இல்லை. இந்த ஆளுநர் தான் வகிக்கும் பதவிக்கு மட்டுமல்ல! மனித மாண்புக்கே இழுக்கு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் முதல் தமிழ் பைபிள்

திரிணாமுல் ஊழல்

மாரடைப்பு