அலை வீசுதே?

 *29 மாநிலங்களில் 6 மாநிலங்களில் மட்டுமே பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை உள்ளது. மறுபுறம் பாஜக -*

சிக்கிமில் 0 இடங்கள்*

  *மிசோரமில் 0 இடங்கள்*

  *தமிழ்நாட்டில் 0 இடங்கள் உள்ளன.*

  *ஆந்திராவில் 175க்கு 4 இடங்களை பாஜக பெறுகிறது*

 *கேரளாவில் 140ல் 1*

  *பஞ்சாபில் 117 இல் 3*

வங்காளத்தில் 294 இல் 74.*

  *தெலுங்கானாவில் 119 இல் 5*

 *டெல்லியில் 70க்கு 8*

 *ஒடிசாவில் 147க்கு 10*

  *நாகாலாந்தில் 60க்கு 12* *இருக்கைகள் மட்டுமே*

  *பாஜக கூட்டணி ஆட்சி உள்ள மாநிலங்களில், பாஜக இடங்களின் நிலை* - *மேகாலயாவில் 60ல் 2*

*பீகாரில் 243க்கு 74*

 *J&K இல் 87 இல் 25*

 *கோவாவில் 40 இடங்களில் 13.*

  *நாடு முழுவதும் மொத்தம் 4139 பாஜக 1516 சட்டமன்ற தொகுதிகளில் 950 இடங்களைக் கொண்டுள்ளது*

  *குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, உ.பி., ம.பி., ராஜஸ்தான் போன்ற 6 மாநிலங்களில் இருந்து இடங்கள்.*

 *அர்த்தம் தெளிவாகஉள்ளது..

.பாஜகவிற்கு அலையோ புயலோ இல்லை, இன்றும் பாஜக நாட்டில் 66% இடங்களை இழந்துள்ளது*

அரிதி பெரும்பான்மை கிடையாது.எந்த அலையும் வீசவில்லை.

 *பாஜக பற்றிய உண்மையை  உணர்ந்துகொற்ளுங்கள் ஊடக பொய்ப் பரப்புரையை பிறருக்கும் எடுத்துக்கூறுங்கள்.

 *இந்த உண்மையை எந்த ஒரு பெரிய வணிக ஊடகச் சேனலும் சொல்லாது, 

எனவே இந்த உண்மையை முடிந்தவரை பலஇடங்களுக்கு அனுப்ப முடிவு செய்யுங்கள், இதன் மூலம் மக்கள் உண்மையை அறியலாம்!

-----------------------------------------------------------------

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நாளை நடக்க உள்ளது.  இந்த தேர்தலில் வாக்களிக்க ஒரு புதிய வசதியைத் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.


அதாவது இந்த புதிய வசதியின் மூலம் வாக்காளரின் முகத்தை அடையாளம் கண்டு வாக்களிக்க அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சோதனை முறையில் இந்த புதிய வசதியானது அறிமுகம் செய்யப்படுகிறது.


இந்த தேர்தலில் பெங்களூரு மாவட்டத்தில் மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலகத்திற்கு அருகே உள்ள அரண்மனை சாலையில் அரசு ராம நாராயண செல்லாராம் கல்லூரி வாக்குச்சாவடியில் அறை எண் இரண்டில் இந்த புதிய வசதி அமைக்கப்பட்டுள்ளது.


அந்த வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்கள் தங்களது செல்போனில் சுனாவனா (தேர்தல்) என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் வாக்காளர் அடையாள அட்டை எண், செல்போன் எண் உள்ளிட்டவற்றைப் பதிவு செய்ய வேண்டும்.


அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு ஓடிபி இரகசிய எண் வரும். அந்த எண்ணெய் உள்ளீடு செய்து வாக்காளர் தனது செல்பி புகைப்படத்தை அதில் உள்ளீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்த பிறகு அந்த வாக்காளர் வாக்குச் சாவடி சென்று முகம் அடையாளம் காணும் ஸ்கேனர் கருவி முன்பு நிற்க வேண்டும்.


பின்னர் அந்த ஸ்கேனரில் புகைப்படம் மற்றும் தேர்தல் ஆணைய விவரங்கள் பொருந்தினால் அவர் எந்த ஆவணத்தையும் காட்டாமல் நேரடியாக உள்ளே வாக்களிக்கச் சென்றுவிடலாம்.இந்த வசதியின் மூலம் கள்ள ஓட்டுப் போடுவது தடுக்கப்படுவது மட்டுமல்லாமல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் சூழ்நிலை ஏற்படாமல் இருக்கும் எனத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.


இப்படி கழுத்தைச்சுற்றி மூக்கைத் தொடுவதற்குப் பதில் நேரடியாக ஆதார் அட்டை பதிவு மூலம் வாக்களிப்பது எளிது.கள்ளவாக்குகளும் பதிவாகாது.வாக்காளர்கள் வாக்களிக்க காலதாமதமும் ஆகாது.

----------------------------------------------------------------------

இந்திய ஒன்றிய அரசா?

இந்துவெறி முட்டாள் அரசா??

இந்த உலகத்தில் தீவிரவாதத்தை எதிர்ப்பது,தடுப்பது போன்ற எக்கச்சக்கமான திரைப்படங்கள் பல மொழிகளில் வெளிவந்துள்ளது.

உதாரணத்திற்கு ,அமெரிக்காவின் CIA-வின் சாகசங்கள் தொடர்பான படங்கள் அமெரிக்காவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தீவிரவாத முயற்சிகளை  CIA உளவாளிகள் தடுப்பது போல,அல்லது அமெரிக்காவின் மீது கோபம் கொண்டு எதிரியாக மாறிய அமெரிக்கனின் சதியை தடுத்து உலகை காப்பது போல பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

ஆனால்,இதுவரை எந்த நாட்டிலும் சொந்த நாட்டின் ஒரு மாகாண அரசாங்கமே தீவிரவாதிகளை உருவாக்குவது போலவும்,அந்நாட்டில் வாழும் மக்களையே தீவிரவாதிகளாக காட்டியும் ஒரே ஒரு திரைப்படம் கூட வந்ததில்லை.

அதாவது,இந்தியாவின் ஏஜென்சிகள் ISIS தீவிரவாத இயக்கத்தை வீழ்த்துவது போல "தி கேரளா ஸ்டோரி "திரைப்படம் சித்தரிக்கவில்லை.

அல்லது ISIS அமைப்பினரிடம் மாட்டிக்கொண்டுள்ள இந்தியர்களை புலனாய்வு ஏஜென்சிகள் அதிரடி சாகசம் செய்து காப்பாற்றுவது போலவும் கூறவில்லை 

மாறாக என்ன சொல்கிறதென்றால்..

இந்திய புலனாய்வு ஏஜென்சிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு 32,000 கேரளப்பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ISIS தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கிறது.

இது எவ்வளவு பெரிய மானக்கேடு..

ஆனால் ,

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 

இந்த நாட்டிற்கு அவமானம் என்பதை கொஞ்சமும் உணராமல்,

உச்சநீதிமன்றம்,உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு வழக்கறிஞர்கள் மௌனத்தை கடைபிடித்தனர்.

தப்பித்தவறி கூட ஒரே ஒரு வார்த்தை கூட ஒருவரும் பேசவில்லை 


உலக மொழிகளில்  இதுவரை வெளிவந்த தீவிரவாதம் தொடர்பான திரைப்படங்களில்,தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொண்டிருக்கும் மக்களை ராணுவமும்,புலனாய்வு படையும் மீட்டு காப்பாற்றுவது போல தான் கதை இருக்கும் 

ஆனால், 

32,000 பெண்கள் ISIS இயக்கத்தில் சேர்ந்துள்ளனர்,ஆயிரக்கணக்கான பெண்கள் சிரியா மற்றும் ஏமன் நாட்டு பாலைவனத்தில் உயிரோடு புதைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல்களை கொண்ட ஒரு திரைப்படத்தை உலகத்தில் எந்த நாட்டின் அரசாங்கமும் அனுமதிக்காது.

அதுவும் தீவிரவாத இயக்கத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் அப்பாவி குடிமக்களை அம்போவென ஒரு அரசாங்கம் விடுவது போல காட்சிகளை கொண்ட திரைப்படத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் 

நீங்களே கூறுங்கள்..

மக்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்கத்தை கோமாளியாக காட்டும் திரைப்படத்தை எந்த நாடு தான் அல்ல எந்த அரசு தான்  அனுமதிக்கும்!

ஆனால் இந்தியாவின் காவல்துறை,ராணுவம் மற்றும் உளவு அமைப்புக்கள்  திறமையற்றவை,ஒன்றுக்கும் உதவாதவை என்பது போல சித்தரிக்கும் 

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை 

இந்திய அரசாங்கமே வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிக்கிறது என்பது மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயம்..


இப்படி ஒரு காரியத்தை உலகில் எந்த நாடும் செய்ததில்லை.

இனி செய்யப்போவதும் இல்லை



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?