புதிய CBIஇயக்குநர்.
கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சி மேலிடத்திற்கு வழங்கப்பட்டது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கர்நாடக முதலமைச்சராக அறிவிக்ககோரி, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் மாறிமாறி முழக்கம். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு வெளியே முழக்கமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
மரக்காணம் அருகே விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்வு. உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள 30க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் 26க்கும் மேற்பட்ட இடங்களை 2024ம் ஆண்டு தேர்தலில் பாஜக வெல்லும். இதை குறித்துவைத்துக்கொள்ளுங்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று 25க்கும் கீழ் குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 462 பேர் சிகிச்சைதெரிவித்துள்ளது.
மியான்மர் மற்றும் வங்கசேதத்தை புரட்டிப்போட்டது மோக்க புயல், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
மெரினாவில் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பை தடுக்க ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மீட்பு நிகழ்வுகளை தத்ருபமாக கடலோர காவல் பாதுகாப்பு படை வீரர்கள் செய்து காட்டினர்.
மியான்மரில் மையம் கொண்டிருந்த தீவிர புயலான மோக்கா, புயலாக வலுவிழந்தது. அடுத்த சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
------------------------&---------------------------------
காங்கேயம் நகராட்சி அரசு அலுவலகத்தில் நிர்வாணசாமியார் அகோரியை வைத்து பூஜை நடத்தப்பட்டுள்ளதாக, கூறப்படுவது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திராவிடர் ஙிடுதலைக் கழகத்தினர் அளித்துள்ள மனுவில்,
“பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் பொதுமக்கள் கூடும் இடத்தில்அதுவும் அரசு அலுவலகத்திலேயே இவ்வாறு மதம் சார்ந்த நிர்வாண சாமியார்களை வைத்து பூஜை செய்வது அதிர்ச்சி அளிக்க கூடிய செயலாக உள்ளது,மேலும் சட்ட விரோதமான செயலாகும்.
எனவே அரசு அலுவலகத்திற்குள் அகோரியை வைத்து பூஜை செய்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது உரியசட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்
----------------------------------------------------
CBI புதிய இயக்குநர்.
மத்திய புலனாய்வு அமைப்பான சிபியின் இயக்குனராக தற்போது சுபோத் ஜெய்ஸ்வால் பதவி வகித்து வருகிறார்.
இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது.
இதையடுத்து சிபிஐயின் அடுத்த இயக்குனரை தேர்வு செய்யும் நடைமுறையில் மத்திய அரசு ஈடுபட்டது.
சிபிஐயின் புதிய இயக்குனர் பதவிக்கு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மூன்று பேர் பரிசீலனை செய்யப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில், கர்நாடக மாநில டிஜிபியாக இருக்கும் பிரவீன் சூட்-ஐ சிபிஐயின் அடுத்த இயக்குனாராக தேர்வு செய்யப்பட்டுள்ள்ளார்.
பிரவீன் சூட் |
தற்போதைய சிபிஐ இயக்குனரின் பதவிக்காலம் முடிந்த பிறகு புதிய இயக்குனராக பிரவீன் சூட் பொறுப்பேற்பார்.
சிபிஐயின் தற்போதைய இயக்குனரின் பதவிக்காலம் வரும் மே 25 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. புதிதாக தேர்வு செய்யப்படும் சிபிஐ இயக்குனரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும்.
எனினும் இவரது பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும்.
பிரவீன் சூட்.
1986 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியான பிரவீன் சூட் , கர்நாடக கேடரை சேர்ந்தவர். நாட்டின் மிக மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளில் இவரும் ஒருவர் ஆவார்.
கர்நாடக காவல்துறையில் பல்வேறு உயர் பொறுப்புகளை இவர் வகித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டிஜிபி ரேங்கிற்கு பதவி உயர்வு பெற்றார். இமாசல பிரதேசத்தை சேர்ந்த பிரவீன் சூட், டெல்லி ஐஐடியில் படித்தவர்.
1986 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பணிக்கு தேர்வான பிரவீன் சூட் மைசூருவில் காவல் கண்காணிப்பாளராக தனது பணியை தொடங்கினர்.
கர்நாடக காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்து இருக்கும் பிரவீன் சூட் 1999 முதல் 2002 ஆம் ஆண்டு வரை மொரிசீயஸ் அரசுக்கு காவல் துறை ஆலோசகராகவும் பணியாற்றி இருக்கிறார்
கடந்த 2003 ஆம் ஆண்டு சிறிது ஓய்வு எடுத்துக் கொண்ட பிரவீன் சூட், பெங்களூரில் உள்ள ஐஐடியில் பொதுக் கொள்கை மற்றும் மேலாண்மை துறையில் முதுகலை படிப்பை மேற்கொண்டார்.
அதன்பிறகு 2004 ஆம் ஆண்டு மைசூரு காவல் ஆணையராக பிரவீன் சூட் நியமனம் செய்யப்பட்டார்.
அப்போது அவர் நகரத்தின் போக்குவரத்து நெரிசலை போக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் கவனம் பெற்றது. பிரவீன் சூட் பதவி பெங்களூரு காவல் ஆணையராக இருந்த போது ' நம்ம 100' என்ற அவசர சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் டிகே சிவக்குமார், பிரவீன் சூட் மீது கடுமையான குற்றசாட்டுக்களை முன்வைத்தார். இவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அப்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.,
"காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்வதாகவும் டிஜிபியை கைது செய்ய வேண்டும் "
-என்று டிகேசிவக்குமார் கூறினார். டிகேசிவக்குமாரின் இந்த விமர்சனம் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
-----------------------------------------------------------