கொடநாடு குடைச்சல்

 தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவு விரிவாக்க  திட்டத்தை நாகை மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம் கொசப்பேட்டையில் குடிபோதையில் தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.தந்தை மகன் தகராறின் போது மது போதையில் இருந்த மகன் சரத் குமார் தந்தை தேவராஜை கத்தியால் குத்தினார்.

உலகக் கோப்பை செஸ் தொடரில் 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு வீடியோ கால் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

ஆகஸ்ட் 27ம் தேதி முதல் சென்னை கடற்கரை வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் வழித்தட சேவை மாற்றப்பட உள்ளது. வேளச்சேரி சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில்கள் இயக்கப்படும் என கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு 20 நிமிடத்தில் விடுவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் மோசடி குறித்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றம்த்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

விக்ரம் லேண்டர் தரையிறங்கிய போது எடுத்த நிலவின் புதிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் பிரக்யான் ரோவர் நகரத் துவங்கி கருவிகள் அனைத்து சிறப்பாக செயல்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

------------------------------------------

கொடநாடு குடைச்சல்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை முறையாக விசாரித்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்று வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பணிக்கனூரைச் சேர்ந்தவர் தனபால். இவரது தம்பி கனகராஜ், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்தார்.

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனகராஜ், ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். 

கோடநாடு வழக்கில் ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால் கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இதனிடையே, 2020-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி வழக்கில் கடந்த ஜுலை மாதம் 29-ம் தேதி மேச்சேரி போலீஸாரால் தனபால் கைது செய்யப்பட்டார். 

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட தனபாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் இந்த வழக்கில் ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில், சேலத்தில் நேற்று தனபால் செய்தியாளர்களிடம் கூறியது: ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி வழக்கில் எனக்கு தொடர்பு இல்லை. 

ஆனால், மேச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னிடம் ரூ.10 லட்சம் கேட்டு, நான் கொடுக்காததால் என் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தார்.

 மேலும், தனி அறையில் அடைத்து அடித்து சித்ரவதை செய்ததுடன் பல்லை உடைத்து பிடுங்கினார்.

கோடநாடு கொலை வழக்கில் முக்கிய தடயமாக இருந்த 2 செல்போன்களை போலீஸார் அழித்தனர். 

ஆனால், தடயங்களை நான் அழித்ததாக என் மீது பொய் வழக்கு பதியப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில்தான் கோடநாடு கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக எனது தம்பி ஏற்கெனவே என்னிடம் தெரிவித்திருந்தார்.

 ஆனால், இதுவரை போலீஸார் அது சம்பந்தமாக என்னை அழைத்து விசாரிக்கவில்லை. என்னை விசாரணைக்கு அழைத்தால் உரிய தகவல்களை சிபிசிஐடி போலீஸிடம் அளிப்பேன். முதல்வரை சந்திக்கவும் தயாராக உள்ளேன்.

கோடநாடு கொள்ளை சம்பவம் தொடர்பாக சங்ககிரியில் ஒருவரிடம் 3 பைகளையும், சேலத்தில் உள்ள ஒருவரிடம் 2 பைகளையும் எனது சகோதரர் கொடுத்ததாக என்னிடம் கூறினார்.

அப்போது, சயனும் உடன் இருந்தார். இதற்கிடையே மர்மமான நிலையில் சயனும் இறந்து விட்டார்.

கோடநாடு கொலை வழக்கை முறையாக விசாரித்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரும். இந்த வழக்கில் காலதாமதம் ஏன் என்று தெரியவில்லை. 

எனக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளன. எனவே, எனக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை முறையாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

----------------------------------

சங்கிகளின் குணம்.

சீனா  தான் உலகின் அடுத்த ஒற்றை வல்லரசு என்று ஒருவர் சொன்னால் கேட்கும் அமெரிக்கருக்குக் கோவம் வரலாம். அதுவே, அமெரிக்காவில், கலிபோர்னியாதான் முதன்மை மாநிலம் என்றால், டெக்சாஸ் மாநிலத்துக் காரர் திட்டலாம். 

இஸ்பானிய மொழி தான் இனிமையான மொழி என்றால் ஒரு பிரெஞ்சு மொழி பேசுபவர் உங்களை முட்டாள் எனலாம். மும்பை தான் இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர் என்றால் ஒரு டெல்லிக்காரருக்கு எரிச்சல் வரலாம். 

ஆனால் நீங்கள் சீனாவைப் புகழும் போது சீனர்களும், கலிபோர்னியாவை வியந்தோதும் போது கலிபோர்னியர்களும், இஸ்பானிய மொழியைச் சிலாகிக்கும் போது அந்த மொழி பேசுபவர்களும், மும்பையைப் பற்றிப் பெருமையாக பேசும் போது மும்பைக்கர்களும், நிச்சயமாக உங்கள் மேல் எரிச்சல், கோவம் பட மாட்டார்கள்.

அப்படியே கட் செய்து, தமிழ் நாட்டுக்கு வருவோம்..

நேற்று, இப்போது உலகப் புகழ் பெற்று விட்ட, சந்திராயன்-1, 2, 3 மூன்று திட்டங்களிலும் திட்ட இயக்குநர்கள் மூன்று பேரும், இந்தியாவில் 28 மாநிலங்களும் 8 ஒன்றிய பகுதிகளும் இருக்க, சொல்லி வைத்தாற் போல தமிழ் நாடு என்கிற ஒரே மாநிலத்தில் இருந்து வந்தவர்கள்; 

சாதாரண பின்புலங்களில் இருந்து வந்தவர்கள்; தமிழ் வழிப் பள்ளிக் கல்வியைத் தமிழ் நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள்; இந்தியாவிலேயே அதிக பொறியியலார்களை உருவாக்கும் தமிழ் நாட்டின் பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் கற்றவர்கள் என்றெல்லாம் செய்திகள் தமிழ்  நாட்டில் வலம் வந்தன. தமிழர்கள் பெருமிதத்துடன் மகிழ்ந்தார்கள்; சங்கிகள் என்கிற ஒரே ஒரு சிறு கூட்டத்தைத் தவிர.

இன்னொரு எடுத்துக் காட்டு. ஒரு பான்னாட்டு நிறுவனம் தமிழ் நாட்டில் தொழில் தொடங்கப் போவதாக அறிவிக்கிறது. 

தமிழ் வலையுலகம் கொண்டாடுகிறது. உடனே, தாங்க முடியாத சில தமிழ் நாட்டு கொடூர சங்கிகள் டிவிட்டரில் அந்த நிறுவனத்திடம் தமிழ் நாட்டில் தொழில் தொடங்க வேண்டாம்; பின்தங்கிய மாநிலம் என்றெல்லாம் பொய் விஷம் கக்கும் எல்லை வரைச் செல்கிறார்கள்.

ஏன் தமிழ் நாட்டுச் சங்கிகளுக்குத் தமிழ் நாட்டுக்குப் புகழ், வளர்ச்சி என்றாலே இப்படி பத்திண்டு வர்றது?  

நிற்காமல் போகிறது?

 ஏன் சங்கிகள் வீட்டு மின் விசிறிகள் 12ம் எண்ணில் வைக்கப் படுகின்றன? 

சங்கிகள் இந்திய தேசியவாதிகள் என்று சொல்லிக் கொள்வதால் அவர்களுக்கு மாநில புகழ் ஆகாது என்பதாலா?

இதே பெருமை எல்லாம் வேறு ஒரு மாநிலத்துக்கு உரியது என்றால் அந்த மாநிலத்துக் காரர்களும் கட்டாயம் இதே போல் அதைப் பகிர்ந்து மகிழ்ந்திருப்பார்கள்; அந்த மாநில சங்கிகள் உட்பட. கர்நாடகச்  சங்கிகள் கூட இப்போதெல்லாம் மாநில, மொழி உரிமைகள் சார்ந்து பேசுகிறார்கள்.

 தமிழ் நாட்டை விட பிரிவினைவாதம் பல மடங்கு இருந்த, ஆயுதப் போராட்டம் நடந்த, அசாமில் கூட சங்கிகள் மாநில பெருமை, அடையாளம் எல்லாம் பேசுகிறார்கள்.

 அப்படிப் பேசுவதால் தேச ஒற்றுமைக்கு ஆபத்து வந்து விடும் என்று அவர்கள் கவலைப் படுவதில்லை.

தமிழ் நாட்டில் மட்டும் ஏன் அவர்களுக்குத், தமிழ் நாடு, தமிழ் என்றாலே எட்டிக் காயாகக் கசக்கிறது? 

ஏன் என்றால், இந்திய துணைக் கண்டத்தில் தமிழ் நாடு ஒரே ஒரு தனித்த மாநிலம்! இல்லை, அறிவியல் சார்ந்து, மரபியல் அடிப்படையில், மற்ற எல்லா மாநிலங்களை விட தமிழ் நாட்டில் ஆரிய இனக்கலப்பு (Ancestral North Indians (ANI) ancestry) மிகக் மிகக் குறைவாக நடந்து திராவிட இனம் (Ancestral South Indians (ASI) ancestry) செறிந்து இருப்பதை பற்றி நான் இங்கே குறிப்பிடவில்லை.

 தமிழ் நாடு, தன் மொழி, இனம், கலாசாரம் என்று தன் தனித்துவத்தை எதற்காகவும் வீட்டுக் கொடுக்காத மாநிலமாக இருப்பதைச் சொல்கிறேன்; தன் மாநில நலனைக், கூட்டாட்சியை, இன்று, நேற்றல்ல வெள்ளை காரன் காலம் தொட்டே சண்டை செய்து காத்து வருவதைச் சொல்கிறேன்; அப்படி தனித்து இருந்தும், கல்வி, பொருளாதாம், மனித வளம், சுகாதாரம், தொழில் வளர்ச்சி என எல்லா வளர்ச்சிக் குறியீட்டுகளிலும் இந்திய அளவில் எப்போதும் முதல் மூன்று இடங்களுக்குள் நின்று சாதித்துக் காட்டுவதைச் சொல்கிறேன்; 

எல்லாவற்றையும் விட சங்கிகளின் மனிதகுல விரோத சனாதனத்திற்கு அரசியல் ரீதியாக மட்டும் இல்லை, கருத்தியல் ரீதியான ஒரே ஒரு எதிரியாக நிற்பதைச் சொல்கிறேன்.

மொத்தத்தில், சங்கிகளின் சனாதன பாரதத்திற்கு முரணிசைவாக (antithesis), நல்ல இந்தியாவைக் காப்பாற்றும் எல்லைச் சாமியாகத் தமிழ் நாடு திகழ்கிறது.

அதனால் தான் சங்கிகளுக்குத் தமிழ் நாடென்றாலே எரிகிறது. தொடர்ந்து எரியட்டும்!!

-FB post by Arun Bala

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?