வெடிக்க தயாராகிஉள்ளது?

 கர்நாடகாவின் கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து, தமிழ்நாட்டுக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு.15 நாட்களுக்கு 5,000 கன அடி வீதம் தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம், நேற்று உத்தரவு பிறப்பித்த நிலையில் நீர் வெளியேற்றத்தின் அளவை அதிகரித்தது கர்நாடகா.

மழை இல்லாததால் நடப்பு மாதத்தில் 122 ஆண்டுகளில் இல்லாத வறட்சி.. எல் நினோ பாதிப்பின் தீவிரத்தை இந்தியா உணர்வதாக எச்சரிக்கை!!


சூப்பர் ப்ளூ மூன் எனப்படும் அரிய நிகழ்வு இன்று (30.08.2023) இரவு 8:37 மணிக்கு விண்ணில் நிகழ்கிறது.இதனை நாம் வெறும் கண்களால் பார்க்கலாம் .வழக்கமாக தோன்றும் பவுர்ணமி நிலவை விட கூடுதல் வெளிச்சத்துடன் நிலவு தெரியும்.


பெரியார் சிலை உடைப்பு, திமுக எம்.பி. கனிமொழி மீது விமர்சனம் உள்பட பா.ஜ. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 7 வழக்குகளை ரத்து செய்ய ஐகோர்ட் மறுத்து விட்டது.

ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ரமணா படத்துக்கே சவால் விடும் வகையில் பிணத்துக்கு சிகிச்சை அளித்து பல கோடி மோசடி.
பொருளாதார வளர்ச்சியில் சாதித்த தமிழ்நாடு.தேசிய அளவில் 2 ஆம் இடம்.

ரேந்திர மோடிக்கு எதிரான அனைத்து துப்பாக்கிகளும் தேர்தலில் வெடிக்க தயாராகி உள்ளது - லாலு பிரசாத் !

எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து வணங்கினார் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு.அம்மா காலப் பழக்கம்.விடவில்லை.?
--------------------------------------------------

இன்னும் எத்தனை நாள்?

 தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.

 இந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகியோரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  இந்த வழக்கு விசாரணை மதுரை முதலாவது நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன்.

 தந்தை, மகன் இறப்புக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தற்போது உடல் நலக்குறைவு காரணமாக சிரமப்பட்டு வருகிறேன். 

எனவே எனக்கு பிணை வழங்கி உத்தர விட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.

 இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி கே.முரளிசங்கர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயிரிழந்த ஜெயராஜின் மனைவி, செல்வராணி தரப்பில், உதவி ஆய்வாளர் ரகு கணேசுக்கு ஜாமின் வழங்க கூடாது என இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதால், சிறு கால அவகாசம் வேண்டும் என அவர்கள் தரப்பு வழக்கறிஞர், நீதிபதி முன் முறையிட்டார்.

 இதை தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்திரவிட்டார்.
------------------------------------------------




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?