15 லட்சம் வேண்டாம்.

 15ஆயிரம் மட்டும் போடுங்கள்!

  • லிபியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 3,958 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு.
  • கலைஞர் மகளிர் உரிமை திட்ட #பயனாளிகளிடமிருந்து வங்கிகள் பணத்தை பிடித்தம் செய்யக்கூடாது.ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.ஒப்பந்தத்தை மீறினால் நடவடிக்கை தமிழ்நாடு அரசு எச்சரிக்கை .
  • "தமிழ்நாடு மாநில உரிமைகளை மறுப்பதன் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை அழிக்கிறது பாஜக"
  • -திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .
  • சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ரயில்களில் ரேஷன் அரிசி கடத்த முயற்சி செய்த 6 பேர் கைது.
  • காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரை சந்திக்க திட்டம்.
  • மணிப்பூரில் தொடரும் கொடூரம்: விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த ராணுவ வீரர் கடத்தி கொலை.
  • "கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 100 லட்சம் கோடி ரூபாயை பாஜக அரசு கடன் வாங்கி உள்ளது. இவர்கள் ஆட்சிக்கு வரும்போது 55 லட்சம் கோடி ரூபாயாக இந்தியாவின் கடன் இருந்தது. இது தற்போது 155 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது"         -முதல்வர் மு.க.ஸ்டாலின.

----------------------------------------

"வாழ்க வசவாளர்கள்"

பெரியார் ஒரு கூட்டத்துக்கு வரும் போது வழியெங்கும் கழுதை, அயோக்கியன் என்று அவரைத் திட்டி எழுதி வைத்திருக்கிறார்கள்.

மேலும் அவர் மனைவியை வேசை என்ற பொருள் வருமாறு எழுதி வைத்திருக்கின்றனர். 

அதைப் பார்த்த பிறகு பெரியார் கூட்டத்தில் பேசுகிறார்.அதன் சுருக்கம் இதுதான் 

“வழியெங்கும் வசவு வார்த்தைகளைப் பார்த்தேன். 

உண்மையில் இது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. 

மஸ்தான் சாகிபு என்றொருவர் இருந்தார். 

அவருடைய எச்சிலை இது பிரசாதம், இது  தெய்வீக குணம் கொண்டது என்று வாங்கி உண்ட உயர்த்தப்பட்ட ஜாதி இந்துக்களை எனக்குத் தெரியும். 

தெய்வீக குணம் ஒருவரிடம் இருக்கிறது என்று நினைத்தால் நம்மவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். 

ஒரு மனிதனை தெய்வமாக்கிவிட்டால் அதன் பிறகு அந்த மனிதனை கேள்வி கேட்க முடியுமா? 

அவன் கருத்துக்களில் உள்ள குறைகளை சொல்ல முடியுமா? 

இதை மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். 

காந்தி விஷயத்திலும் இதே தவறைச் செய்கிறார்கள். 

காந்தியை மகாத்மா என்கிறார்கள். அதன் பிறகு அவர் கருத்தை எப்படி விமர்சனம் செய்ய முடியும். 

விமர்சனமில்லாத கருத்து எப்படி வீரியம் பெறும். 

எப்படி திருத்தமாக செம்மையாக்கப்படும். எப்படி மெருகேற்றப்படும். 

அதற்கான வாய்ப்பே இல்லாமல் போகிறதே?

அவ்வகையில் என்னை அயோக்கியன் என்று சொல்வதை வரவேற்கிறேன். 

என்னை தெய்வம் என்று சொன்னால் நான் சொன்ன கருத்தை ஆராயாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளும் நிலைமை மக்களுக்கு ஏற்படும்.

அயோக்கியன் என்று சொல்லிவிட்டால் நான் என்ன சொன்னாலும் அதை கவனமாக ஆராய்ந்து அதிலுள்ள நல்லது கெட்டதைப் புரிந்து நல்லவற்றை எடுத்து கெட்டவற்றை புறந்தள்ளும் பக்குவம் வரும். 

நான் மக்களிடம் எதிர்ப்பார்ப்பதும் அந்த பக்குவத்தையே. 

ஆக இவர்கள் என் வேலையை எளிதாக்கிவிட்டார்கள். 

என்னை அயோக்கியனாக கழுதையாக எழுதி வைத்திருப்பதை வரவேற்கிறேன். 

நண்பர்கள் இதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

என் மனைவியை விபச்சாரி என்று எழுதி வைத்ததற்காக ஏன் வருத்தப்படப் போகிறேன். 

அவரை கற்புக்கரசி என்று யாராவது சொன்னால் அதற்கு நான் மகிழ்ச்சியடைந்தால்தானே, அவரை விபச்சாரி என்று சொல்வதற்கு வருத்தப்படவும் செய்ய வேண்டும். 

தாராளமாக அவர்கள் நினைத்தபடி சொல்லிக் கொள்ளலாம்.”

"வாழ்கபெரியார்."

----------------------------------------------------


15 லட்சம் வேண்டாம்.

15ஆயிரம் மட்டும் போடுங்கள்!

நாகர்கோவிலில்  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன்  பேசினார், 

“பிரதமரின் பிறந்த நாளில் விஸ்வகர்மா என்ற பெயரில் 18 வயதை எட்டியுள்ள இளைஞர்களுக்கு, தந்தைவழி தொழில் செய்வதற்கு கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

ராஜாஜியின் அரை நாள் பள்ளி, பின்னர் தந்தை செய்யும் தொழிலில் பயிற்சி என்ற திட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி அப்போது எதிர்த்தது.

அப்போது, காங்கிரஸ் முதல்வர்  ராஜாஜியின் திட்டத்தை அன்று காமராஜரே எதிர்த்தார்.

 சொந்த கட்சியில் இருந்து எதிர்ப்பு வந்ததால் ராஜாஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

ராஜாஜி கொண்டு வந்த அவரது கல்வி திட்டத்திற்கு எவ்விதமான பெயரும் சூட்டவில்லை. நாங்கள்தான் அதனை குலக்கல்வித் திட்டம் என குறிப்பிட்டோம்.

ராஜாஜியின் அதே குலக் கல்வி திட்டத்தை தான் மோடி கொண்டுவந்துள்ளார். விஸ்வகர்ம இளைஞர்கள் 18 வயதை கடந்த பின்பு சுய தொழில் செய்ய வங்கி கடன் திட்டம் என்பது அந்த சமுக இளைஞர்களின் கல்லூரி மற்றும் உயர் கல்வி திட்டத்தை தடுக்கும்

அந்தச் சமுகம் முன்னேறடைய தந்தை செய்யும் தொழிலுக்கு கடன் உதவி என்பது தான் சரியான திட்டமாக இருந்திருக்கும்.

 சனாதன மாநாட்டை நீதிமன்றம் சென்று தடுக்காது. 

அந்த மாநாட்டில் இளைஞர் நல அமைச்சர் உதயநிதி பேசியதில் எந்த தவறும் இல்லை.

தமிழக அரசு தேர்தல் கால வாக்குறுதியை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வரும் சூழலில் சொல்லாத வாக்குறுதியான காலை நேர உணவு என்பது மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.

தெலங்கானா மாநில அதிகாரிகள் தமிழகத்தில் செயல்படுத்தும் காலை உணவு திட்டத்தை பார்த்து சென்று அவர்கள் மாநிலத்தில் ஆரம்ப பள்ளி முதல் உயர் நிலை வகுப்புகள் வரை உயர்த்தி இருக்கின்றனர்.

தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை பற்றி பேசும் தமிழிசை மோடி சொன்ன ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைப்போம் என்றாரே? அந்தத் திட்டத்தை நிறைவேற்ற சொல்வாரா?

மேலும், மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியதுமே கடந்த 30 மாதங்களுக்கும் சேர்த்து கொடுக்க வேண்டும் என தமிழிசை சொல்கிறார்.

எங்களுக்கு ரூ.15 லட்சம் வேண்டாம், மோடியிடம் சொல்லி வெறும் ரூ.15 ஆயிரம் போட சொல்லுவாரா? என்றார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?