ஊழலே கொள்கையாய்

 குஜராத்த  சூரத் நகரைச் சோ்ந்த ந்த நபர் மிதுல் திரிவேதி. (40 )சந்திரயான்-3 திட்டத்தில் பங்களித்ததாக ஊடகத்தினருக்கு பேட்டியளித்த போலி விஞ்ஞானி கைது செய்யப்பட்டாா்.

'இந்தியாவுக்காக பேசுகிறேன்’ என்ற தலைப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிதாக குரல்பதிவுத் தொடரில் பேசவுள்ளார்.

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்-1 விண்கலத்தை, பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட் டவுன் வெள்ளிக்கிழமை (செப். 1) காலை 11.50 மணிக்கு தொடங்குகிறது.

160 கி.மீ தூக்கத்திலேயே

அமெரிக்காவின் இந்தியானா மாகாணம், பெரு பகுதியைச் சேர்ந்த மைக்கேல் டிக்சன் என்ற நபர் தனது இளம் வயதில் 160 கி.மீ,தொலை தூரம் தூக்கத்திலேயே நடந்து (கடந்து)சென்றுள்ளார். 

வெறுமனே பைஜாமா உடைமட்டும் அணிந்திருந்த இவர், காலில் காலணிகள் கூட இல்லாமல் ரயில் தடத்தில் வெறுமனே நடந்து சென்று இருக்கிறார். 

கடந்த 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி இந்த நிகழ்வு பதிவாகியுள்ளது. அதிகாலை 2.45 மணி அளவில் ரயில் தடத்தின் மீது இளம் வயது சிறுவன் தடுமாறியபடி நடந்து வருவதை பார்த்த ரயில்வே ஊழியர்கள், உடனடியாக அது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதில் குறிப்பிடத்தக்க நிகழ்வு என்னவென்றால் 160 கிலோமீட்டர் தொலைவு சிறுவன் நேரடியாக நடந்து வந்துவிடவில்லை. வீட்டிற்கு அருகாமையில் உள்ள சரக்கு ரயிலில் ஏறி வெகு தொலைவுக்கு அப்பால் இறங்கி ரயில் தடத்தில் நடந்து சென்றுள்ளார்.

 ஆனால் ரயிலில் ஏறியதோ, இறங்கியதோ சிறுவனுக்கு நினைவில் இல்லை. அந்த வகையில் சிறுவனின் மொத்த பயணத்தையும் தூக்கத்தில் நடந்த பயணமாகவே குறிப்பிடுகின்றனர்.

 ரயில் தடத்தில் வெறும் கால்களுடன் நடந்து வந்ததால் சிறுவனின் கால்களில் லேசான காயங்கள் இருந்துள்ளன. ஆனால் அதைக் கடந்து பெரிய அளவுக்கு பாதிப்பு எதுவும் இல்லை.

ஆனால் இந்த நிகழ்வு இன்று, நேற்று நடந்தது அல்ல. 

36 ஆண்டுகளுக்கு முன்னால் 1987ல்நடந்த நிகழ்வு என்பதை கின்னஸ் அமைப்பு பதிவு செய்துள்ளது.

------------------------------------------

ஊழலே கொள்கையாய்-1.

-அதானி்

அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பா்க் நிறுவனம் சுமத்திய குற்றச்சாட்டு தொடா்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஓசிசிஆா்பி என்ற அமைப்பு அதானி மீது புதிய நிதி மோசடி குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

அந்தக் குற்றச்சாட்டை அதானி நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அதானி குழுமமானது .

பங்குச் சந்தையில் தனது நிறுவனங்களுடைய பங்குகளின் விலையை உயா்த்திக் காட்டுவதற்காக மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பா்க் நிறுவனம் குற்றஞ்சாட்டியது. இது தொடா்பாக, உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்திய பங்குப் பரிவா்த்தனை வாரியம் (செபி) விசாரணை நடத்தி வருகிறது.


இந்நிலையில், திட்டமிடப்பட்ட குற்றங்கள்-ஊழல் தடுப்புத் திட்டம் (ஓசிசிஆா்பி) என்ற அமைப்பு அதானி குழுமத்தின் மீது புதிய மோசடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. வரிவிதிப்பு குறைவாக உள்ள நாடான மோரீஷஸில் இருந்து போலி நிறுவனங்கள் மூலம் முறைகேடாக அதானி நிறுவனங்களில் சிலா் முதலீடுகளைச் செய்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


தொழிலதிபா் கௌதம் அதானிக்கு நெருக்கமானவா்களே இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மோரீஷஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற ஆவணங்கள், அதானி குழுமத்தின் மின்னஞ்சல் தகவல்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து இந்த மோசடி கண்டறியப்பட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


அதானி குடும்பத்தினருடன் நீண்ட காலமாகத் தொடா்பில் இருந்து வரும் நாசா் அலி சபான் அலி, சாங் சுங் லிங் ஆகியோா் அதானி பங்குகளை அதிக அளவில் வாங்கி, அவற்றை மோரீஷஸ் நாட்டில் முறைகேடாக விற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் அதானி குழுமத்துக்குப் பெருமளவில் வருவாய் கிடைத்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.


 மோசடி தொடா்பான புதிய குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்துள்ளது. இது தொடா்பாக அக்குழுமம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘உண்மைகள் ஏதுமற்ற ஹிண்டன்பா்க் அறிக்கையைப் போலவே, இந்த அறிக்கையிலும் அதானி குழுமத்தின் மீது வெளிநாட்டு சக்திகள் போலியான குற்றச்சாட்டுகளைப் புனைந்துள்ளன. 

பல ஆண்டுகளுக்கு முன்பே வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் (டிஆா்ஐ) முடித்துவைத்த வழக்குகளின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதானி குழுமத்தின் செயல்பாடுகளில் எந்தவித சந்தேகமும் இல்லை என உச்சநீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது. ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

அந்த விசாரணையை மதித்து நடக்க வேண்டியது அவசியம். நீதித் துறையின் மீது அதானி முழு நம்பிக்கை கொண்டுள்ளது.
அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்புகளைக் குறைத்து, மற்ற நிறுவனங்களின் மதிப்பை உயா்த்தும் நோக்கிலேயே இதுபோன்ற போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்ட புதிய குற்றச்சாட்டுகள் பங்குச் சந்தையில் வியாழக்கிழமை எதிரொலித்தன.

 அக்குழுமத்துக்குச் சொந்தமான நிறுவனங்களின் மதிப்புகள் 40000 கோடிகள் சரிவு கண்டன.


ஹிண்டன்பா்க் தெரிவித்த புகாா் காரணமாக அதானி குழுமம் சுமாா் 15,000 கோடி அமெரிக்க டாலரை பங்குச் சந்தையில் இழந்தது குறிப்பிடத்தக்கது.

------------------------------------

இணைய மோசடிகள்.

எச்சரிக்கை

உங்கள் முதலீட்டுக்கு அதிக வட்டி, குறைந்த வட்டியில் உடனடிக் கடன், குறைந்த கட்டணத்தில் வெளிநாட்டுப் படிப்பு - இப்படிப்பட்ட விளம்பரங்களைக் கண்டு ஒவ்வொரு நாளும் பலர் ஏமாறுகின்றார்கள்.

இவ்வளவு ஏன்? 

எங்கோ ஓர் ஆப்பிரிக்க தேசத்தில் தமக்குத் தங்கச் சுரங்கம் இருப்பதால் தம்மால் அதிக வட்டி தர இயலும் என்று கூறிய ஒருவரின் வார்த்தைகளை நம்பி, பலர் அவரிடம் லட்சக்கணக்கில் முதலீடு செய்த அவலமும் சமீபத்தில் நடந்தேறியுள்ளது.


 நமது முதலீடுகளுக்கு வங்கிகளும் அஞ்சலகமும் தருகின்ற வட்டியைவிட அதிக வட்டி தருவதாக எவர் கூறினாலும் அது ஏமாற்று வேலை என்பது காலங்காலமாக நிரூபிக்கப்பட்டாலும், எங்கோ கண்காணாத இடத்தில் இருக்கும் தங்கச் சுரங்கத்தை நம்பி நம் மக்கள் முதலீடு செய்ததற்குக் காரணம் பேராசைதான்.


 ஆசை காட்டி மோசம் செய்வது என்பது வட்டி விளம்பரங்களில் மட்டுமல்லாது வாழ்க்கைத் துணை தேடுவதற்கான விளம்பரங்களிலும் புகுந்து விட்டது என்பதே நிகழ்கால எதார்த்தமாக உள்ளது.


 தற்காலத்தில் பலரும் தங்களுடைய வாழ்க்கைத் துணையை நவீன திருமணத் தகவல் மையங்களாக இயங்கி வரும் பல்வேறு இணையதளங்களில் தேடுவது வழக்கமாகி வருகிறது. முகம் தெரியாத யாரோ ஒருவர் அத்தகைய இணையதளங்களில் பதிவு செய்திருக்கும் உறுதி செய்யப்படாத தகவல்களை நம்பி அவருடைய பின்புலத்தை ஆராயாமல் அவரைத் தம்முடைய வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்க விரும்புபவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் ஏராளம்.


 அதே சமயம், சரியான தகவல்களைத் திருமணத் தேடல் இணையதளங்களில் பதிவு செய்தவர்களில் சிலர் தங்களைத் தொடர்பு கொள்ளும் ஏமாற்றுப் பேர்வழிகளால் பலவிதங்களில் அலைக்கழிக்கப்படுவதும் உண்டு.


 சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்த வழக்கு ஒன்று இது போன்ற மோசடிகள் அன்றாடம் நடப்பதை உறுதிப்படுத்துகின்றது. 

வெளிநாடு ஒன்றில் மருத்துவராகப் பணிபுரியும் தமக்கு ஏற்ற மணமகள் தேவை என்று திருமணத் தகவல் இணைய தளம் ஒன்றில் விளம்பரம் செய்து, பெண்கள் பலரிடமும் மோசடி செய்த நபர் ஒருவர் முன்ஜாமீன் கோரி விண்ணப்பித்துள்ளார்.


 அதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, இணையதளங்கள் மூலம் முடிவு செய்யப்படுகின்ற திருமணங்களில் நடைபெறுகின்ற தில்லுமுல்லுகளைப் பற்றி எடுத்துக் கூறியதுடன், இத்தகைய இணையதளங்களைக் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் வகுக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
 இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரியிருந்த நபரிடம் படித்த பெண்கள் பலரும் ஏமாந்திருக்கின்றனர். 

அவர்களில் ஒவ்வொருவரையும் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அந்த நபர் பணம் வசூலித்துள்ளார்.


 குறிப்பாக, பெண் மருத்துவர் ஒருவர் அந்த நபர் தன்னைத் திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் அவரிடம் எண்பது பவுன் நகைளுடன், பெருந்தொகையையும் கொடுத்து ஏமாந்திருக்கிறார். 

அந்த நபர் தன்னை ஏமாற்றியதை மிகவும் தாமதமாக உணர்ந்துகொண்ட அப்பெண்மணி கொடுத்த புகாரின் பேரில் இத்தகைய விவரங்களெல்லாம் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
 மேலும் பதினேழு பெண்கள் அவரால் ஏமாற்றப்பட்டுள்ளனராம். 

அவரிடம் ஏமாந்த பெண்கள் அனைவருமே திருமணத்தேடல் இணையதளத்தில் அந்நபர் அளித்திருந்த பொய்யான தகவல்களை உண்மை என்று நம்பியுள்ளனர்.


 இவை போன்ற திருமண விளம்பரங்களால் பெண்கள் மட்டுமே ஏமாற்றப்படுவதில்லை.
 தங்களுடைய உண்மையான வருமானம், சொத்து ஆகியவற்றைப் பற்றிய முழு விவரங்களையும் இத்தகைய இணையதளங்களில் பதிவிட்டு வரன் தேடும் வசதி படைத்த ஆண்களும் இது போன்ற மோசடிகளுக்கு உள்ளாகின்றார்கள்.


 குறிப்பாக, மனைவியின் இறப்பு அல்லது விவாகரத்து காரணமாகத் தங்களின் முதுமைக் காலத்தில் மறுமணத்திற்கு வரன் தேடும் ஆண்களின் விவரங்களை அறிந்து கொள்ளும் சில மோசடியாளர்கள் தங்களுக்குத் தெரிந்த இளம் பெண்ணை திருமணம் செய்வதாகச் சொல்லி அம்முதியவர்களிடம் பணம் பறிப்பதுண்டு.


 இவை போன்ற மோசடிகள் பலவற்றுக்கும் இணையதளங்களில் தங்களின் இணையைத் தேடும் போக்கு அதிகமாகியுள்ளதே காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. சேவைக் கட்டணமாகப் பெருந்தொகையை வசூலிக்கும் இத்தகைய இணையதளங்கள் அவற்றில் பதியப்படும் விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்குப் பொறுப்பேற்பதில்லை.


 நம்பிக்கைக்குரிய உற்றார், உறவினர், உள்ளூர்த் திருமணத் தரகர் ஆகியவர்களைத் தவிர்த்து விட்டு, இணையதளங்களில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே தங்களுடைய இணையரைத் தேடும் போக்கு அதிகரித்து விட்டது. 

இதுவே திருமண இணையதள மோசடிகளுக்கும் வித்திடுகின்றது.
 நமது நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பெல்லாம் குழந்தைத் திருமணம் ஏற்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது.

 பதின்வயதுக் குழந்தைப்பேறு உள்ளிட்ட தீமைகளை மக்கள் உணரத் தொடங்கியதாலும், குழந்தைத் திருமணம் சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டதாலும் அத்தகைய திருமணங்கள் தவிர்க்கப்பட்டன.


 கடந்த நூற்றாண்டின் பிற்பகுதி வரை பொதுவாக பெண்களுக்கு இருபத்தைந்து வயதுக்குள்ளும் ஆண்களுக்கு முப்பது வயதுக்கு முன்பும் திருமணம் நடைபெற்று வந்தது.


 ஆனால், தாராளமயம், நவீனமயம் ஆகியவற்றில் சிக்குண்ட நமது தேசத்தின் குடிமக்களின் வாழ்வியலும் எண்ணற்ற மாற்றங்களை எதிர்கொண்டது.
 தற்காலத்தில் முப்பது வயதுக்குள் திருமணம், குழந்தை பிறப்பு ஆகிய பேறுகளைப் பெறுகின்ற இளைஞர்களும், யுவதிகளும் அருகிவிட்டனர்.

 சுமார் நாற்பது வயதை இவர்கள் நெருங்கும்போதுதான் திருமணப் பேச்சே தொடங்குகிறது.


 இணையதளங்கள் தரும் தகவல்களின் உண்மைத்தன்மை எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, அதே வேகத்தில் தங்களுக்குப் பணமோ, பொருளோ தரவேண்டும் என்று கேட்கும் எந்த ஒரு நபரும் நம்பத்தகுந்தவரல்லர் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்தாலே போதும்.
 திருமணம் தள்ளிப்போனால் கூடப் பரவாயில்லை. ஒருவர், தாம் கஷ்டப்பட்டு ஈட்டிய பணத்தை மோசடிப் பேர்வழிகளிடம் இழக்காமல் இருப்பது மிகவும் முக்கியமல்லவா?
 

 ---------------------------------------

ஊழலே கொள்கையாய்-2.

 குற்றங்கள், ஊழல்களை அம்பலப்படுத்தும் ஒசிசிஆர்பி அமைப்பு புதிய ஆதாரங்கள் வெளியீடு!

தொழிலதிபர் கவுதம் அதானியின் குழும நிறுவனங்களின் முறைகேடுகள் குறித்து புதிய ஆதாரங்கள் வெளியானது. இதுவரை குற்றங்கள், ஊழல்களை அம்பலப்படுத்தும் ஒசிசிஆர்பி (OCCRP) என்ற அமைப்பு புதிய ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.

மொரீஷியஸ், யு.ஏ.இ. போன்ற நாடுகளில் செயல்படும் அதானி குடும்ப முகமூடி நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் அம்பலமானது. பல்வேறு நிறுவனங்கள் மூலம் சிக்கலான வலைப்பின்னல் போன்ற கம்பெனி விவரங்களை ஒசிசிஆர்பி கண்டுபிடித்து வெளியிட்டுள்ளது.

அதானி குடும்ப முறைகேடாக பல்லாயிரம் கோடி ரூபாயை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்றுள்ளது. முறைகேடாக கொண்டு சென்ற பணத்தை முகமூடி நிறுவனங்கள் மூலம் முதலீடு என்ற போர்வையில் இந்தியாவுக்கு கொண்டு சென்றது.

கவுதம்அதானி சகோதரர் வினோத் மேற்பார்வையில் முறைகேடு:

வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை தொடங்கி, இந்தியாவுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடாக கொண்டுவரப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் செயல்பட்ட அதானி குடும்ப முகமூடி நிறுவனங்களை அதானியின் சகோதரர் வினோத் கண்காணித்தார். அதானி குடும்ப நண்பர்கள் சாங் சுங்-லிங், நாசர் அலி ஆகியோர் மூலமாக பல முகமூடி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதானியின் குடும்ப நண்பர்களான சாங் சுங் லிங்க், நாசர் அலி மூலம் மேலும் பல முகமூடி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. மெர்ஜிங் இந்தியா ஃபோக்கஸ் ஃபண்ட்ஸ், இஎம் ரிசர்ஜன்ட் ஃபண்ட் என்ற மேலும் இரு முகமூடி நிறுவனங்கள் உள்ளன.

சாங், நாசர் நடத்தும் குளோபல் ஆபர்ச்சுனிட்டீஸ் நிறுவனத்தால் எமர்ஜிங் இந்தியா, ரிசர்ஜன்ட் பண்டில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மெர்ஜிங் இந்தியா மற்றும் இஎம் ரிசர்ஜன்ட் மூலம் இந்தியாவுக்குள் முதலீடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இரு நிறுவனங்களின் மூலம் கொண்டு வரப்பட்ட பணம் இந்தியாவில் அதானி குழும நிறுவனங்களின் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

2013-லிருந்து பல ஆயிரம் கோடி பணம் அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதால் அவற்றின் விலை. முகமூடி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்யப்பட்ட பணம் அதானி குடும்பத்தின் பணம்தான் என்று நிரூபணமாகி உள்ளது.

2014-ல் முகமூடி நிறுவனங்கள் 26 கோடி டாலரையும் 2017-ல் 43 கோடி டாலரையும் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. அதானி நிறுவனத்தின் முறைகேடுகள் தொடர்பாக 2013-ம் ஆண்டே பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு புகார் அளிக்கப்பட்டது.

800 கோடி டாலரிலிருந்து 28,800 கோடி டாலராக உயர்வு:

2013-ல் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு 800 கோடி டாலராக (ரூ.66,120 கோடி) இருந்தது. முறைகேடான முதலீடுகள் காரணமாக 2022-ல் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 28,800 கோடி டாலராக (ரூ.28,80,334 கோடி) உயர்ந்தது.

முறைகேடு பற்றி 2014 ஜனவரியில் நடவடிக்கை தொடங்கிய செபி, மோடி பிரதமரானதும் அதனை கைவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்த காலத்திலிருந்து கவுதம் அதானியுடன் தொடர்பு இருந்து வருகிறது.

மோடி பிரதமரானதும் அதானி குழுமத்துக்கு விதிகளை மீறி சலுகைகள் காட்டப்பட்டதாக ஆய்வு நிறுவனம் வைத்துள்ளது. மோடி ஆதரவு காரணமாக துறைமுகங்கள், மின் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்டவை அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டன.

நிலக்கரி சுரங்கங்கள், நெடுஞ்சாலை பணிகள், விமான நிலைய ஒப்பந்தங்களை மோடி ஆதரவால் பெற்றது அதானி குழுமம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?