இவர்தான் அவர்?

 தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திருபும் வழியில் பிரதமர் மோதி கிரீஸ் சென்றார். 

ஆனால் இவ்வளவு குறுகிய பயணத்திலும், பிரதமர் மோடியின் பிஸியான அட்டவணையிலும், இந்தியாவிலுள்ள பல நிறுவனங்களின் உயர் அதிகாரிகள்,குறிப்பாக அதானி நிறுவன அதிகாரிகள் கிரீஸை அடைந்து, கிரீஸ் பிரதமரால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதமர் மோடியுடன் மதிய உணவில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், கிரீஸ் நாட்டின் உயர்மட்ட வர்த்தக அதிகாரிகள், அதானி நிறுவன பிரமுகர்கள் சந்தித்தனர்.

பிரதமர் மோடியின் கிரீஸ் வருகை குறித்து, ‘கிரீஸ் நாட்டின் துறைமுகங்களை கையகப்படுத்த பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்ததாக’ கிரேக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

கிரீஸ் நாளிதழான கிரேக்க சிட்டி டைம்ஸ், ‘பிரதமர் மோடியின் இந்த வருகை போது,  முதலீடு மற்றும் சுற்றுலா போன்றவற்றுடன், துறைமுகங்களை நிர்வகிக்கும் தொழில் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது’ என்று கூறியிருந்தது.

மேலும், ‘பிரதமர் மோடி கிரேக்கத்தில் துறைமுகங்களை நிர்வகுக்கும் ஒப்பந்தத்தைஅதானி போர்ட்ஸ் கையகப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதாக ஆதாரங்கள் தெரிவித்துள்ளன. 

இதற்குக் காரணம், கிரீஸின் கவாலா மற்றும் வோலோஸ் ஆகிய இரண்டு துறைமுகங்களில் இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானியின் அதானி குழுமம் ஆர்வமாக உள்ளது,’ என்றது.

கிரீஸின் மற்றொரு ஊடக நிறுவனமான ‘புரோட்டோ தீமா’வும் இதே செய்தியை ஆதாரங்களை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ளது.

கெளதம் அதானியின் செல்வாக்கு, அவரது வர்த்தகம் மற்றும் பிரதமர் மோடியுடனான அவரது நெருங்கிய உறவு குறித்து கிரேக்கத்தின் பிசினஸ் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது .

அதே நேரத்தில், இந்தியாவில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் கிரீஸ் வந்ததாகவும், ஆனால் அந்த கூட்டத்தில்  அதானி நிறுவன அதிகாரிகள் ஆதிக்கம் செலுத்தியதாகவும் ஒரு ஊடக நிறுவனம் எழுதியுள்ளது.

இருப்பினும், கிரீஸில் பிரதமர் மோடியுடன் மதிய உணவில் கலந்து கொண்ட இந்திய தொழிலதிபர்களில் கவுதம் அதானி இல்லை.

அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ லிமிடெட், உலகின் மிகப்பெரிய துறைமுக மேம்பாட்டு நிறுவனமாகக் கருதப்படுகிறது.

இந்த நிறுவனம் இந்தியாவில் மட்டும் 13 துறைமுக டெர்மினல்களை இயக்கி வருகிறது. மேலும் பல துறைமுகங்களை கைபற்றி வருகிறது.இந்தியாவின் கடல்சார் வருமானத்தில் அதானி குழுமம்மட்டும் 40% பங்குகளைக் கொண்டுள்ளது.

அதானி குழுமம் இஸ்ரேலின் இரண்டாவது பெரிய துறைமுகமான ஹைஃபாவை வாங்கி, இந்தியாவிற்கு வெளியே இந்தத் துறையில் தனது கால்தடத்தை பதித்தது. அதானி குழுமம் இந்த துறைமுகத்தை 2054ம் ஆண்டு வரை குத்தகைக்கு எடுத்துள்ளது.

மேலும் இந்த துறைமுகத்தில் அதானி குழுமத்திற்கு 70% பங்குகள் உள்ளன.

இதன் மீதி 30% பங்குகள் இஸ்ரேலிய கெமிக்கல் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான கோடோடிடம் உள்ளது.

இந்த ஒப்பந்தம் முடிவாகும் சமயம் கெளதம் அதானி இப்படி ட்வீட் செய்திருந்தார்: 

இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, ஹைஃபா துறைமுகத்தில் அதானியின் நுழைவு ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான கடல் போக்குவரத்தை அதிகரிக்கும்" என்றார்.

அதானி நிறுவனம் நாங்கள் துறைமுகம் தொடர்பாக பேசவில்லை என்றது.

காங்கிரசோ மோடி துறைமுக ஒப்பந்தகளைப் பற்றி பேசவே கிரீஸ் சென்றார்.மோடி என்றால் அதானி,அதானி என்றால் மோடி இதுதான் உண்மை நிலை என்றது.

------------------------------------.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

விடுதலைப்போர்.முதல் பலி தூத்துக்குடியில்.