போராட்டம்.
மொராக்கோ நாட்டை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 2 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பொறியியல் கல்லூரி அட்மிஷன் சமீபத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், 24 கல்லூரிகளில் 100 சதவீதம் அட்மிஷன் முடிந்துள்ளதாகவும், தமிழகம் முழுவதும்57000 இடங்கள் காலியாக உள்ளதாகவும் தகவல் .
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மெட்ரோ ரயில் பணி காரணமாக சாலையில் சனிக்கிழமை திடீா் பள்ளம் ஏற்பட்டதால், அடையாறு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- திமுகவிற்கு கொள்கையே முக்கியம் - ஆட்சியை பற்றி கவலை இல்லை என அமைச்சர் உதயநிதி பேச்சு
- சென்னையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
- சிறுவனாக இருந்தபோது ஆசிரியர்களுக்கு கால்களை பிடித்துவிட்டதாக ஆளுநர் ரவி பேச்சு - தற்போதைய ஆசிரியர்கள் ஊதியத்திற்காக மட்டுமே வேலை செய்வதாகவும் கடும் விமர்சனம்
- அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு நாளை விசாரணை - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கிறது
- கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி - கிலோ 9 ரூபாய்க்கு விற்பனை
- சந்திரபாபு நாயுடுவின் கைதால் பாதிக்கப்பட்ட ஆந்திராவில் இருந்து சென்னைக்கான பேருந்து போக்குவரத்து சீரானது.
டெல்லியில் குடியரசு தலைவர் அளித்த விருந்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- சூடான் உள்நாட்டுப் போரால் 78 ஆயிரம் பேர் எத்தியோப்பியாவில் தஞ்சம் .
- கிரீஸ் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு - 93 ஆண்டுகளில் இல்லாத அளவிலான கடும் பாதிப்பு
- சீனாவில் அரசு ஊழியர்கள் ஐபோன் பயன்படுத்த தடை.
- -----------------------------------------
- உதயநிதியின் போராட்டம்.
அமைச்சர் உதயநிதியின் சிறந்த ,எளிமையாக மக்களுக்குப் புரியும் வகையில் அரசியல் செயல்பாட்டிற்கு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டாமல் மத்திய அரசு காலம் தாழத்தியதை வெளிக்கொண்டுவந்ததை விளக்க ஒற்றைச் செங்கலைக்காட்டியதன் மூலம் நகைச்சுவையாக கூறியது சிறந்த எடுத்துக் காட்டாக்க் கூறலாம்.
சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில், சனாதனத்தை டெங்கு, மலேரியா, கொரோனா, கொசு உள்ளிட்டவற்றுடன் ஒப்பிட்டு பேசினார்.
தமிழ்நாட்டில் அரசியலுக்கு இணையான சக்தி சினிமாவுக்கு உண்டு. திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்தவர்தான் உதயநிதி ஸ்டாலின்.
இளந்தலைவரான உதயநிதி தற்போது இந்திய அரசியல் கவனத்தை தன்பக்கம் திருப்பியுள்ளார்.
சனாதனம் தொடர்பான அவரது கருத்துகளுக்கு பிரதமர் முதல் உள்துறை அமைச்சர் வரை பதிலளித்துள்ளனர்.
தற்போது அவர் வலுவான பாஜக எதிர்ப்பு குரலாக தலைஎடுத்துள்ளார்.
அந்த வகையில், கருணாநிதி குடும்ப வாரிசின் பெயர் இன்று நாடு முழுக்க கவனம் ஈர்த்துள்ளது.
கலைஞர் கருணாநிதி புகழ்பெற்ற எழுத்தாளராக, கதை ஆசிரியராக திகழ்ந்தார். உதயநிதி படத்தின் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் திகழ்கிறார்.
இந்த நிலையில் மு.க. ஸ்டாலின், கருணாநிதி மறைவுக்கு பின்னர் தி.மு.க. தலைவராகவும், பின்னர் முதல் அமைச்சராகவும் வந்தார்.
ஆனால் அதிகார மையத்தில் இருந்து சற்று விலகியிருந்த உதயநிதி, சினிமாவில் சிறிய சிறிய கதாபாத்திரங்களை தாங்கி நடித்தார்.
நகைச்சுவை நடிகர் சந்தானத்துடன் இணைந்து அழகான நகைச்சுவை காட்சிகளை கொடுத்தார். கருணாநிதி சினிமாவில் தீவிரமான சமூக கருத்துகளை முன்வைத்தார்.
2014ஆம் ஆண்டு உதயநிதி அரசியலுக்கு வந்தபோதும் அவரது படங்கள் மாறாமல் இருந்தன.
அவர் எம்.எல்.ஏ ஆகி அமைச்சராக உயர்ந்த பின்பு அவரது நடிப்பில் மாமன்னன் என்ற படம் வந்தது.
இந்தப் படமும் அவரது சனாதன கருத்துக்கள் போல பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்படத்தில் உதயநிதி, எம்.எல்.ஏ. மகனாக இருந்தாலும் சமூக நீதியைப் பேசும் கட்சிக்குள் உள்ள பாகுபாடுகளை எதிர்கொள்ளுவத போல் நடித்திருப்பார்.
தற்போது திமுக முன் உள்ள சவால்கள் குறித்த உதயநிதி நன்கு அறிவார்.
மேலும் உதயநிதி, மு.க. ஸ்டாலினை விட கருணாநிதிக்கு நெருக்கமானவராக காணப்படுகிறார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் பாஜகவின் வாக்குறுதியை செங்கலை காட்டி அழகாக அம்பலப்படுத்தினார். அப்போது அவரது அவருடைய செயல்திட்டமானது திறம்பட செயல்பட்டது.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பாஜக அழைக்கவில்லை என உதயநிதி பேசியதை திமுகவினர் சிறந்த எடுத்துக்காட்டாக கூறுகின்றனர்.
அங்கு தனித்துவ அடையாளங்கள் நீடித்து நிலைக்க கடினமாக உள்ளன.
உதயநிதி தன்னை நாத்திகராக அடையாளப்படுத்தியதில்லை, உதாரணத்திற்கு, அவர் அமைச்சராகும் வரை அவரது வீட்டில் பூஜை அறை இருந்தது. ஸ்டாலின் அவ்வளவு தூரம் சென்றதில்லை, ஆனால் அவரது மனைவி ,தாயார் மத நம்பிக்கை கொண்டவர்கள்தான்.
உதயநிதியின்தற்போதைய வாசிப்புப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அவரது உதவியாளர்களில் ஒருவர், தினசரி வாசிப்பதற்காக புத்தகங்களிலிருந்து முக்கிய பகுதிகளை பரிந்துரைப்பார். தற்போது அவர் அம்பேத்கரின் எழுத்துக்களைப் படித்து வருகிறார்.
சனாதனம் தொடர்பாக அனைத்துத் தகவல்களையும் அறிந்த பின்பே அதன் மீதான ஒழிப்பை,தாக்குதலை அவர் துவக்கியுள்ளார்.
ஆனால் அவரை எதிர்த்து,தாக்கி செயல்படுபவர்கள் அதைப்பற்றி சரியான புரிதல் இல்லாமலே உள்ளனர்.
இதில் பெரிய நகை முரண் என்னவென்றால் சனாதனத்தால் பாதிக்கப்பட்டவர்களே அதற்கு ஆதரவாக புரிதல் இல்லாமல் அரசியலுக்காக செயல்படுவதுதான்.
---------------------------------------