என்று தணியுமிந்த அதிகார மமதை?

 நியாயவிலைக் கடைகள் மூலம்  மகளிர் உரிமை திட்டம்  தனியாக  ஏடிஎம்.அட்டை.அது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.

இந்திய தனிமனித உரிமைகளை மதிக்க மோடியிடம் பைடன் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தல்.

ஜி20 மாநாட்டை நடத்த ஒன்றிய பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியை விட 300% அதிகமாக மோடி ஒன்றிய அரசு செலவு!

மராட்டிய மாநிலம் தானேவில் 40 மாடி கட்டிடத்தில் லிப்ட் அறுந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 7 பேர் பலி.

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி சண்டியூர் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் 7 பெண்கள் உயிரிழப்பு.

"நாட்டின் பெயரை மாற்றி இந்திய

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ராஜ முந்திரியில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் நடந்த ஜி 20 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் தலைமை பொறுப்பு பிரேசிலிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரதமர் மோடி பிரேசில் அதிபர் லூலாவிடம் வழங்கினார்..

வங்கக்கடல் பகுதியில் இன்று அதிகாலை மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

------------------------------------------------

என்றும் நலமுடன்

ஒவ்வொருமனிதனின ஆசை மட்டுமல்ல கட்டாயமும் நோயின்றி வாழ்வதே .  
 ஒரு மனிதனின் ஆரோக்கியத்தைத் திறந்துப் பார்க்க சில எளிய வழிமுறைகள்.  
தரமான பசி.

உழைப்புக்கேற்ற பசி இருக்க வேண்டும்.  குறைந்தது 2 வேளை பசி இருக்க வேண்டும். உண்ட உணவு சுலபமாகச் செரிக்க வேண்டும். உண்ட பிறகு வயிறு உப்புசம், பாரம், இருக்கக் கூடாது.

தரமான தாகம்.

உழைப்புக்கேற்ற ஊதியம் மட்டுமல்ல தாகமும் இருக்க வேண்டும்.  உதடு காய்வது தாகம் இல்லை. 
 தாகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.  தாகத்துக்கு வெறும் தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும். புட்டியில் அடைத்த, சுவை, மனம், இரசாயனம் கலந்த நீரை அருந்தக் கூடாது. 
புட்டி மினரல் நீர்.எந்தவொரு பயனுமில்லாத நீர்.உடலுக்கு தேவையான கனிமம்,வைட்டமின் உப்புகள்,சத்துகள் அனைத்தும் ரசாயண முறையில் நீக்கப்பட்ட பிளீச் செய்யப்பட்ட வீண்.

தரமான உறக்கம்.

படுத்த 10 நிமிடத்தில் உறக்கம் வர வேண்டும்.  இடையில் காலை வரை எழுந்திருக்கக் கூடாது. 
தூங்கி எழும்பொழுது அசதி இருக்கக் கூடாது. தூங்கி எழுந்ததும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் 

முழுமையான கழிவு நீக்கம்  .
 
காலையில் தினமும் சுலபமாக இயற்கை உபாதையைக் கழிக்க வேண்டும். 
அவை முழுமையாகச் சுலபமாக வெளியேற வேண்டும். சிறுநீரும் சுலபமாக வெளியேற வேண்டும். 

மன நலம்.
உடல் நலமாக இருக்க மனம் அமைதியாக இருத்தல் வேண்டும். 
 எந்தச் சூழ்நிலையிலும் மன பயமோ, சஞ்சலமோ அடையக் கூடாது.  
அளவுக்கு மீறிய மகிழ்ச்சி, கவலை, பயம், துக்கம், கோபம், தாழ்வு மனப்பான்மை, மன உளைச்சல் இருக்கக் கூடாது. 
எப்பொழுதும் சம நிலையிலேயே மனம் இருக்க வேண்டும்.

------------------------------------------ 
பயத்தில் பாஜக.

இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

"ஒரு மாநாட்டைப்போல திருமணம் நடந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் அணி, இ.பி.எஸ் அணி, சசிகலா அணி, தீபா அணி, தீபா டிரைவர் அணி என பல அணிகள் இருக்கின்றன. 

அதுபோல் குடும்ப வாழ்க்கையில் மாமியார் அணி, நாத்தனார் அணி என பல அணிகளாகப் பிரிந்து இருக்கக்கூடிய வாய்ப்புகள் வரும். 
ஆனால் அதையெல்லாம் சமாளித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி போன்று, மணமக்கள் இருவரின ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சுய மரியாதையுடன் வாழ வேண்டும்.

ஆணுக்கு பெண் சமம் என்று சொன்னதுதான் நம் திராவிட இயக்கம். பெண்களுக்கு சொத்தில் சம பங்கு, உள்ளாட்சித் தேர்தலில் 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, பணியில் இட ஒதுக்கீடு என பல திட்டங்களை தந்தது தி.மு.க-தான். சனாதன ஒழிப்பு மாநாட்டில் நான் கலந்துகொண்டு பேசியது ஒருநாள் செய்திதான். 

அதை பொய்யாக திரித்து பிரதமர் மோடியும், ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவும் இந்திய அளவில் பேச வைத்துவிட்டார்கள். 

நூறு ஆண்டுகளுக்கு முன் பெண்கள் யாரும் வெளியில் வர முடியாத சூழ்நிலை இருந்தது. மருத்துவம் படிக்க முடியாத சூழல் நிலவியது. அதனையும் மீறி படிக்க வேண்டும் என்றால் சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும்.

கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறும் பழக்கமும் இருந்தது.  அவற்றையெல்லாம் உடைத்து எறிந்தது தி.மு.க-தான்.

 அதைப்பற்றியெல்லாம் அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய தலைவர்கள் நிறைய கருத்துகளை கூறியுள்ளனர். அவர்கள் பேசாத எதையும் நான் பேசவில்லை. 

ஒன்பது ஆண்டுக்கால பா.ஜ.க ஆட்சியில் இதுவரை என்ன சாதித்தீர்கள் என்று கேட்டதற்கு, இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்றார் பிரதமர் மோடி.  தற்போது இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றியுள்ளார். 

இதைத் தவிர வேறு எந்த திட்டங்களையும் செய்யவில்லை. சனாதனத்தை பற்றி நாங்கள் இப்போது பேசவில்லை. 200 ஆண்டுகளாகப் பேசி வருகிறோம்,
இனியும் தொடர்ந்து பேசுவோம். 

திராவிடர் கழகம் ஆரம்பிக்கப்பட்டதே சனாதனத்தை ஒழித்து சமூகநீதியை நிலை நாட்டத்தான். இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து சனாதனத்தை ஒழிப்பதற்காக குரல் கொடுப்போம்.

 ஜி20  மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்த குடிசைகளை திரைபோட்டு மூடியதுதான் மத்திய அரசின் சாதனை. ஒரு கிலோமீட்டர் சாலை போடுவதற்கு ரூ.250 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 

மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிவித்து, ரமணா திரைப்படத்தில் வருவதைப்போல இறந்தவர்களுக்கு வைத்தியம் பார்த்து பணத்தை பிடுங்கியுள்ளனர்.

 பா.ஜ.க-வின் ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டு வருகின்றன. 2024 மக்களவைத் தேர்தலை சந்திக்க பாஜக பயப்படுகிறது.அன் வெளிப்பாடுதான் இந்தியா,பாரத் ஆக மாறுகிறது.

பயத்தை மறைக்கவே சனாதனம் குறித்து தவறாகப் பேசி வருவதாக என்மீது அவதூறு பரப்புகின்றனர்” என்றார்.

-------------------------------------------------

என்று தணியுமிந்த அதிகார மமதை?

தமிழ் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமனம் செய்ய, 3 பேர் கொண்ட துணை வேந்தர் தேடுதல் குழு அமைக்கப்படுவது வழக்கமான நடைமுறையாக இருந்து வந்த நிலையில், முதல் முறையாக ஆளுநர் ஆர்.என். ரவி யு.ஜி.சி பிரதிநிதியை சேர்த்து 4 பேர் கொண்ட தேர்வுக் குழுவை தன்விருப்பமாக அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி) பிரதிநிதி ஒருவரை சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் நிபந்தனை விதித்துள்ளதாக அண்மையில் உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.

 இதனால், ஆளுநர் விதித்த நிபந்தனை தொடர்பாக, தமிழக உயர் கல்வித் துறை சார்பில் விளக்கக் கடிதம் அனுப்பியது. அதில், “துணைவேந்தர் நியமனத்தில், யு.ஜி.சி-யின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம். தேடுதல் குழுவில் யு.ஜி.சி-யின் பிரதிநிதி ஒருவர் சேர்க்கப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த சூழ்நிலையில்தான், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர்களை தேர்வு செய்ய தன்னிச்சையாக தேடுதல் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். அதில், முதல்முறையாக யு.ஜி.சி பிரதிநிதியை சேர்த்து உத்தரவிட்டிருப்பதற்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

யு.ஜி.சி பிரதிநிதிகளை துணை வேந்தர்கள் தேடல் குழுக்களில் சேர்ப்பதை எதிர்க்கும் வகையில், ஆளுநரால் புதிதாக அமைக்கப்பட்ட 3 துணை வேந்தர்கள் தேடுதல்  குழுக்களை தமிழக அரசு அறிவிக்காததால் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி, இந்த முடிவு நல்ல நோக்கத்துடன் எடுக்கப்பட்டதாகவும், ஆனால் வேந்தர் என்ற முறையில் ஆளுநருக்கு சொந்தமாக தேடுதல் குழுக்களை அமைக்க சிறப்பு அதிகாரமோ விதிகளோ இல்லை என்றும் கூறினார்.

சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர்களை தேர்வு செய்ய தன்னிச்சையாக தேடுதல் குழு அமைத்த ஆளுநர் ஆர்.என். ரவி, அதில் முதல்முறையாக யு.ஜி.சி பிரதிநிதியை சேர்த்து செப்டம்பர் 6-ம் தேதி உத்தரவிட்டார்.

தமிழ்நாட்டில் துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில், பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர் மற்றும் ஆளுநர் தரப்பில் ஒருவர் இடம்பெறுவர். 3 பேர் கொண்ட தேடுதல் குழு விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியான 3 பேரின் பெயர்களை ஆளுநருக்கு பரிந்துரை செய்யும். அதில் ஒருவரை ஆளுநர் நியமிப்பது வழக்கம்.

ஆனால், துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி) பிரதிநிதி ஒருவரை சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் நிபந்தனை விதித்துள்ளதாக அண்மையில் உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். 

இதனால், ஆளுநர் விதித்த நிபந்தனை தொடர்பாக, தமிழக உயர் கல்வித் துறை சார்பில் விளக்கக் கடிதம் அனுப்பியது. 

அதில், “துணைவேந்தர் நியமனத்தில், யு.ஜி.சி-யின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம். தேடுதல் குழுவில் யு.ஜி.சி-யின் பிரதிநிதி ஒருவர் சேர்க்கப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த சூழ்நிலையில்தான், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர்களை தேர்வு செய்ய தன்னிச்சையாக தேடுதல் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். அதில், முதல்முறையாக யு.ஜி.சி பிரதிநிதியை சேர்த்து உத்தரவிட்டிருப்பதற்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

யு.ஜி.சி பிரதிநிதிகளை துணை வேந்தர்கள் தேடல் குழுக்களில் சேர்ப்பதை எதிர்க்கும் வகையில், ஆளுநரால் புதிதாக அமைக்கப்பட்ட 3 துணை வேந்தர்கள் தேடுதல்  குழுக்களை தமிழக அரசு அறிவிக்காததால் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது..

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “துணை வேந்தர் தேடுதல் குழுக்களில் யு.ஜி.சி பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என்ற ஆளுநரின் எண்ணம் நல்லது, வரவேற்கத்தக்கது, 

ஆனால், அதை ஆளுநர் மாளிகையால தன்னிச்சையாக செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட விதிகள், வழிகாட்டுதல்களின்படி தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும், அரசிதழில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட வேண்டும்.” என்று  கூறினார்.

“பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் வகுக்கப்பட்ட விதிகள் மற்றும் துணை வேந்தர் தேடுதல் குழுக்களின் அறிவிப்பில் பின்பற்றப்பட்ட மரபுகளை ஆளுநர் மாளிகை மதிக்க வேண்டும். 

ஆளுநர் வேந்தராக தன்னிச்சையாக தேடுதல் குழுக்களை அமைத்து அவற்றை பத்திரிகைகளுக்கு அறிவிக்க எந்த சிறப்பு அதிகாரமும் விதிகளும் இல்லை. மாநில அரசு உத்தரவு பிறப்பித்த பிறகே துணைவேந்த தேடுதல் குழு செயல்படும்” என்று பாலகுருசாமி கூறினார்.

யு.ஜி.சி-யின் பிரதிநிதியை தேடுதல் குழுவில் சேர்க்க அனைத்து பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று பாலகுருசாமி கூறிதுள்ளார்.

 “ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள மாநிலத்தில் உயர்கல்வியின் தரம், அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான இந்த மோதல் நிலை துணைவேந்தர் நியமனத்தை மேலும் தாமதப்படுத்தும், பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டை மோசமாக பாதிக்கும்.” என்று பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி. தியாகராஜன்,  “பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் ஆளுநர், துணை வேந்தர் தேடுதல் குழுக்களை அமைக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்” என்று கூறினார்.

அதே நேரத்தில், மாநில அரசால் அரசாணை மூலம் அறிவிக்கப்படாத வரை இந்த துணை வேந்தர் தேடுதல் குழுக்கள் செயல்படாது என்று எஸ்.பி. தியாகராஜன் கூறினார். மேலும்,  “துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான ஒட்டுமொத்த நடவடிக்கைகளிலும் இது முட்டுக்கட்டையாக இருக்கும்” என்று அவர் கூறினார்.

இதனிடையே, கல்லூரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை கவுன்சில் (ஜே.ஏ.சி), தமிழ்நாடு ஆளுநரிடம், யு.ஜி.சி பிரதிநிதியைச் சேர்த்து துணை  வேந்தர் தேடுதல் குழுக்களை அமைத்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர் சங்கம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இருந்து ஓய்வு பெற்ற சுமார் 4,000 கல்லூரி ஆசிரியர்களை உள்ளடக்கிய அமைப்பும் இந்த பிரச்சினை குறித்து கவலை தெரிவித்துள்ளது.

 யு.ஜி.சி-யின் 2018-ம் ஆண்டு வழிகாட்டுதல்களை மாநிலம் இன்னும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், யு.ஜி.சி தலைவரின் நியமனத்தை தேடுதல் குழுவில் சேர்ப்பது மாநிலத்தின் அதிகாரங்கள்/சுயாட்சியை மீறுகிறது, உயர்கல்வி பேரத்தில் பலியாகிறது என்று தெரிவித்துள்ளது.

உயர்கல்வியில் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்காக, ஆளுநர் தன்னிச்சையாக மூன்று துணை வேந்தர்கள் தேடுதல் குழுக்கள் அமைத்த, பத்திரிகை அறிவிப்புகளை திரும்பப் பெறுவதன் மூலமும், துணை வேந்தர்களை நியமிக்கும் நடைமுறையைப் பின்பற்றுவதன் மூலமும் மோதலை தவிர்க்குமாறு ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

-----------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?