மீண்டும் ஒரு கோத்ரா போல்கலவரம்?

 "மனித உரிமைகளை ,பத்திரிகை சுதந்திரத்தை மதிப்பதன் முக்கியத்துவம்,அதை கடைபிடிக்க  இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசினேன்." -அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

"ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அரசு பேருந்துகள் மற்றும் லாரிகளில் அதிக அளவில் மக்களை அழைத்துவரவேண்டும் என மோடி,அமித்ஷா கட்டளையிட்டுள்ளனர். இதன் மூலம் அவர்கள்  பயணத்தில் விபத்துகளைஏற்படுத்தலாம். ‘ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு பிறகு கோத்ரா போன்ற சம்பவம் நடக்கலாம்.அதற்கான திட்டமிடல் நடக்கிறது.


  "மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, மோடி அரசு மீது அதிர்ச்சியான குற்றச்சாட்டு
.


``விரைவில்ஒரு காலம் வரும்.போலீஸ் யூனிஃபார்ம் கலரை காவியாக மாற்றுவோம்!” - திருச்சியில் ஹெச்.ராஜா.

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை.கன்னித்தீவு கதையானது.!

‘தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நீரில் பாதியை கூட தரவில்லை’ பாஜக தமிழ்நாடுக்கு காவிரி நீர் தரக்கூடாது என போராட்டம் நடத்துவதற்க்கு சித்தராமையா பதில்!

-------------------------------------------

நீ  சிரைக்க மட்டுமே செய்.

குலத் தொழிலை எவ­ரும் மாற்­றிக் கொள்­ளக் கூடாது என்­ப­து­தான் சனா­த­னம். 

அதற்­கா­கவே ஒரு திட்­டம் போடுகி­றார் பிர­த­மர். குலத்தொழிலை ஒன்றிய அரசு ஊக்குவிப்பதாக முரசொலி நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது.

பிரதமர் மோடி அறிவித்துள்ள விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் உள்ளடக்கம்வே சனாதனம் தான் என்றும் தந்தை தொழிலை மகன் தொடர வேண்டும் என்பதே சனாதனம் என்றும் முரசொலி வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முரசொலி தலையங்கத்தில் வெளியான கட்டுரை:சனா­த­னம் என்­றால் என்ன என்று பரப்­புரை செய்ய ஒன்­றியஅமைச்­சர்­­களுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளார் பிர­த­மர் மோடி. அவர் அறி­வித்­துள்ள ‘விஸ்­வ­கர்மா யோஜனா’ திட்­டத்­தின் உள்­ள­டக்­கமே சனா­த­னம்­தான். 

தந்தை தொழிலை மகன் தொடர வேண்­டும் என்­பதே சனா­த­னம். குலத் தொழிலை எவ­ரும் மாற்­றிக் கொள்­ளக் கூடாது என்­ப­து­தான் சனா­த­னம். 

அதற்­கா­கவே ஒரு திட்­டம் போடு­கி­றார் பிர­த­மர்.ஆகஸ்ட் 15 அன்று கொடி­யேற்­றி­விட்டு பிர­த­மர் பேசும் போது குலத்­தொ­ழி ­லைச் செய்­ப­வர்­கள் தங்­க­ளது குடும்­பத் தொழி­லைத் தொடர்ந்து செய்­தால் நிதி கொடுப்­போம் என்று அறி­வித்­தார். 

இரா­ஜாஜி கொண்டு வந்த குலக்­கல்­வித் திட்­டத்­தின் மறு­ப­திப்­பு­தான் இது.விஸ்­வ­கர்மா யோஜனா -– என்ற திட்­டம் 18 வகை­யான ஜாதி­களை அடை­யா­ளம் காட்­டு­கி­றது. அவர்­க­ளது பரம்­ப­ரைத் தொழி­லுக்கு ஊக்­கம் அளிப்­ப­தன் மூல­மாக குலத் தொழிலை ஊக்­கு­விக்­கி­றது.

 பரம்­ப­ரை­யாக தொழில் செய்­ப­வர்­க­ளுக்கு கட­னு­தவி வழங்­கும் திட்­டம் இது.பரம்­ப­ரைத் தொழில்­க­ளைச் செய்­ப­வர்­கள் என்­றால் அனைத்­துத் தொழில்­­ களை­யும் சொல்­லா­மல் 18 தொழில்­கள் மட்­டும் என வரை­ய­றுத்­தது ஏன்?

இந்­தத் திட்­டத்­தில் சேர்­ப­வர்­கள் பரம்­பரை பரம்­ப­ரை­யாக அந்­தத் தொழிலை செய்­ப­வர்­க­ளாக இருக்க வேண்­டும். செருப்பு தைப்­ப­வர் பரம்­பரை பரம்­ப­ரையாக இந்­தத் தொழிலை செய்து வரு­கி­றேன் என சான்­றி­தழ் வாங்கி வர வேண்­டும். இந்­தத் தொழி­லாளி ஒரு­வர் தனது தொழிலை விரி­வுப்­ப­டுத்தி, வேறு ஒரு பொருளை தயா­ரித்­தால் அவ­ருக்கு நிதி உதவி கிடை­யாது. பி.எம்.விஸ்­வ­கர்மா என்ற திட்­டத்தை 16.8.2023 அன்று அமைச்­ச­ர­வை­யின் பொரு­ளா­தா­ரக் குழு ஏற்று 13 ஆயி­ரம் கோடி பணத்­தை­யும் ஒதுக்கி இருக்­கி­றது. 

2023 முதல் 2028 முதல் குலத் தொழில் செய்ய வாரி­சு­க­ளுக்கு அவர்­க­ளது குடும்­பத்­தி­னர் கற்­றுக் கொடுப்­பார்­க­ளாம்.

பதி­னெட்டு பரம்­ப­ரைத் தொழில்­கள் இதில் இணைக்­கப்­பட்­டுள்­ளது.

1. தச்­சர், 

2. படகு தயா­ரிப்­பா­ளர், 

3. கவ­சம் தயா­ரிப்­ப­வர்

4. கொல்­லர், 

5. சுத்­தி­யல் மற்­றும் கரு­வி­கள் தயா­ரிப்­ப­வர்

6. பூட்டு தயா­ரிப்­ப­வர், 

7. பொற்­கொல்­லர், 8. குய­வர்9. சிற்பி, 

10.காலணி தயா­ரிப்­ப­வர்,

 11. கொத்­த­னார்

12. கூடை, பாய், துடைப்­பம் தயா­ரிப்­ப­வர்

13. பொம்மை தயா­ரிப்­ப­வர், 

14. முடி திருத்­து­ப­வர்

15. பூமாலை தொடுப்­ப­வர், 16. சல­வைத் தொழி­லா­ளர்

17. தைய­லர், 

18. மீன்­பிடி வலை தயா­ரிப்­ப­வர்.

இதனை செய்­யப் பழ­கு­வோ­ருக்கு ஒரு லட்­சம் முதல் 2 லட்­சம் வரை மானி­யத்­தில் கடன் கிடைக்­கும்.தச்­சன் மகன் தச்­சுத் தொழி­லைத்­தான் செய்ய வேண்­டும்.சல­வைத் தொழி­லாளி மகன் சல­வைத் தொழி­லைத்­தான் செய்ய வேண்­டும் .முடிதி­ருத்­ தும் தொழி­லாளி மகன் வாழ்க்கை முழுக்க முடி­வெட்­டத்­தான் வேண்­டும்  என கட்டாயப் படுத்துதலில் மோடி இறங்கியுள்ளார்.

 அதற்­குத்­தான் இந்­தத் திட்­டம். அவ­ர­வர்க்கு விதிக்­கப்­பட்ட தொழிலை மட்­டுமே அவ­ர­வர் செய்ய வேண்­டும் என்­ப­து­தான் மனு­வின் கட்­டளை. 

அது­தான் சனா­தன தர்­மம். அதை மீறக் கூடாது என்­ப­தற்­கா­கவே இப்­படி ஒரு திட்­டத்தை கொண்டு வரு­கி­றார் மோடி.

அனைத்­துக் கட்­சி­க­ளை­யும் கூட்டி ஆலோ­ச­னைக் கூட்­டம் நடத்தி இத­னைக்கண்­டித்து தீர்­மா­னம் நிறை­வேற்­றி­னார் திரா­வி­டர் கழ­கத் தலை­வர் மான­மிகு ஆசி­ரி­யர் கி.வீர­மணி அவர்­கள். இக்­கூட்­டத்­தின் முடி­வுப்­படி மாபெ­ரும் கண்­டன ஆர்ப்­பாட்­டம் சென்­னை­யில் நடந்­துள்­ளது.

குலத் தொழில் கூடாது. ஏழை எளிய –- பிற்­ப­டுத்­தப்­பட்ட – – பட்­டி­ய­லின -– பழங்­குடிமக்­க­ளும் உயர்ந்த பொறுப்­பு­க­ளுக்கு வர வேண்­டும் என்று திரா­விட இயக்­கம் போரா­டி­யது. 

திரா­விட மாடல் ஆட்சி திட்­டங்­கள் தீட்டி வரு­கி­றது. ஆனால் குலத் தொழில் செய், உனக்கு மானி­யம் தரு­கி­றேன் என்­கி­றார் மோடி.

இவர்­க­ளது அனைத்து தர்­மங்­க­ளும் பிறப்பை அடிப்­ப­டை­யா­கக் கொண்­ட­வை­தான். 

இந்­தத் திட்­ட­மும் பிறப்பை அடிப்­ப­டை­யா­கக் கொண்­ட­து­தான்.

இரா­ஜாஜி குலக்­கல்வி திட்­டத்தை கொண்டு வந்­த­போது தந்தை பெரி­யார் அவர்­கள் சொன்­னார்­கள்:“நாம் மேன்­மை­ய­டை­யக் கூடாது என்­ப­தற்­கா­கவே இரா­ஜாஜி இந்த திட்­டத்­தைக் கொண்டு வரு­கி­றார். நம்மை உத்­தி­யோ­கத்­துக்கு லாயக்கு ஆக்­கக் கூடாது என்­ப­தற்­காக கொண்டு வந்த திட்­டம் இது”என்று சொன்­னார் பெரி­யார்.“ஆயி­ரக்­க­ணக்­கான வரு­டங்­க­ளாக கூலிக்­கா­ரன் மகன் கூலிக்­கா­ரன், மேளம் அடிக்­கி­ற­வன் மகன் மேளம் அடிப்­ப­வன், உழு­ப­வன் மகன் உழு­ப­வன் என்றே வைத்­து­விட்­டார்­கள். வெள்­ளைக்­கா­ரன் வந்­து­தான் 200 ஆண்­டுக்கு முன் இதனை மாற்­றி­னான். 

இதெல்­லாம் தலை­யெ­ழுத்து என்று நினைக்க வைத்­து­விட்­டார்­கள். 

இந்­தத் தலை­யெ­ழுத்தை மாற்ற கவ­லைப்­பட்­டது நமது இயக்­கம் மட்­டும்­தான். வண்­ணார் மக­னும், நாவி­தன் மக­னும் படித்­து­விட்­டால்உயர்­ஜா­திக்­கா­ர­னுக்கு மரி­யாதை போய்­வி­டும். அத­னால்­தான் குலத் தொழி­லையே செய்­தால் போதும் என்­கி­றார்­கள்”என்­பதை தெளி­வு­ப­டுத்­தி­னார் பெரி­யார்.

சாதியை தொழி­லா­க­வும் -– தொழி­லா­ளி­களை சாதி ரீதி­யா­க­வும் பிரித்­த­தைப் பற்றி அண்­ணல் அம்­பேத்­கர் விரி­வாக எழுதி இருக்­கி­றார்.‘உன் தொழி­லில் லாப­மில்லை என்­றால் அது உன் கர்மா என்­றும், லாப­மில்­லாத தொழிலை விட்டு இன்­னொரு தொழி­லைச் செய்­யத் தடை செய்­வ­தும்­தான் இதில் உள்ள கொடூ­ரம்’என்­ப­தை­யும் அண்­ணல் அம்­பேத்­கர் சொல்லி இருக்­கி­றார்.‘

தொழி­லைக் கற்­றுத் தரு­கி­றோம் என்­ப­தற்­குள்­ளாக சாதி­யைக் கெட்­டிப்­ப­டுத்­தும் தந்­தி­ரம் இருக்­கி­றது’என்­ப­தை­யும் அண்­ணல் சொன்­னார்.

இந்­தக் காலத்­தில் சமூ­க­நீதி -–- இட­ஒ­துக்­கீடு -– நவீன மயம் –- விழிப்­பு­ணர்வு ஆகி­ய­வற்­றால் பல­ரும் ஜாதி அடை­யா­ளம் கொண்ட தொழி­லில் இருந்து வெளி­யே­று­கி­றார்­கள். இத­னைத் தாங்­கிக் கொள்ள முடி­யா­மல் தடுக்­கவே இத்­த­கைய திட்­டங்­க­ளைக் கொண்டு வரு­கி­றார் பிர­த­மர் மோடி. சனா­த­னக் காப்­புத் திட்­டங்­க­ளைக் கொண்டு வரும் மோடி தான், ‘சனா­த­னத்தை’ விளக்கி பிரச்­சா­ரம் செய்­யச் சொல்­கி­றார்.

இதனை ஏன் ஒன்­றிய அமைச்­ச­ர­வை­யில் சொல்­கி­றார். சனா­த­னம் பா.ஜ.க. ஆட்­சி­யின் கொள்கை -– அத­னால் சொல்­கி­றார்.

சனா­த­னத்தை எதிர்த்த முத­ல­மைச்­ச­ரின் அறிக்­கையை தமிழ்­நாடு அர­சின் செய்­தித்­துறை வெளி­யிட்­ட­தாம்? 

உடனே ‘தின­ம­லர்’ திகில் ஆகி­றது. சனா­த­னத்தை ஆத­ரித்து அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் பிர­த­மர் பேச­லாம் என்­றால், ஒன்­றிய அமைச்­சர்­கள் பிரச்­சா­ரம் செய்­ய­லாம் என்­றால் முத­ல­மைச்­ச­ரின் அறிக்­கையை செய்­தித் துறை வெளி­யிட்­டது என்ன தவறு?

அவர் செய்­ய­லாம்- – இவர் செய்­யக் கூடாது என்­ப­து­தான் சனா­த­னம்!

அதெல்லாம் சரி.

மற்ற சாதியினர் பூஜை செய்யக்கூடாது என கட்டுப்படுத்தும் பிராமணர்களுக்கு பூஜை மட்டும் செய்யுங்கள் என ஏன் மோடி திட்டம் அறிவிக்கவில்லை?

அதுதான் சனாதனம்!

-----------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?