என்றுமே சகாப்தம்

 வேலூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் ‘மக்களுடன் ஸ்டாலின்’ என்ற செயலியை வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பிரேசிலின் பார்செலோஸ் நகரில் நடந்த விமான விபத்தில் 14 பேர் உயிரிழப்பு.

5 கொலை உள்பட 24 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி குள்ள விஷ்வா என்பவன் என்கவுன்டரில் சுட்டு கொலை: தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை; அரிவாளால் வெட்டியதில் 2 போலீஸ்காரர்கள் படுகாயம்.

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டில் 30 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை.

துபாயில் சூதாட்ட கும்பலின் நிர்வாகியின் திருமண விழாவில் பங்கேற்ற பாலிவுட் பிரபலங்களுக்கு ₹200 கோடி ‘ஹவாலா’ முறையில் பணம் வழங்கப் பட்டது. ரூ.417 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை .

------------------------------------------------------

"பெரியார் "

என்றுமே சகாப்தம்

90-வது வயதில்  _  180 கூட்டம்.

91-வது வயதில்  _  150 கூட்டம்.

93-வது வயதில்  _  249 கூட்டம்.

94-வது வயதில்  _  229 கூட்டம்.

வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்)  42 கூட்டம்.

இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன்.

 ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேச சென்றார் சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டை போட்டு குழாய் செருகப்பட்டிருக்கும். 

இதையெல்லாம் எந்த ஆட்சியை பிடிக்க செய்தார்? 

எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்க்க செய்தார் ? 

அவருக்கும் கடவுளுக்கும் வாய்க்கால் தகராறா? 

மதங்களுக்கும் அவருக்கும் முன் விரோதமா ? 

இல்லை இது எல்லாமே தாழ்ந்து கிடந்த தமிழன் தலை நிமிர செய்தார் .

நாம் நிமிர்ந்து உக்காந்தோம் இன்று அவர் தொடுத்த போரட்டத்தின் நற்பலனை அனுபவிக்கிறோம்.

ஆனால் நம்மை கீழ்சாதியாக்கி அடக்கிய சனாதன கூட்டத்திற்கே துதிபாடி தூக்கி நிக்கிறது,மீண்டும் அடிமையாக எண்ணுகிறது தன்னிலை மறந்த ஒரு சூத்திரக்கூட்டம்.

-------------------------------------------------

பெரியார்

சமூகத்தின் சரிபாதியாக உள்ள பெண்களின் கையில் உள்ள கரண்டியை பிடிங்கி விட்டு புத்தகத்தை கொடுங்கள் என பெரியார் தன் காலத்திலேயே உரக்க முழங்கினார். 

இப்படி தன் வாழ்நாள் முழுவதும் பெண்களின் கல்விக்காகவும், சுயமரியாதைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் போராடினார் பெரியார்.

வெங்கட்ட நாயக்கர் சின்னத்தாய் அம்மாள் தம்பதியின் மகனாக பிறந்தார். ஈரோட்டில் 1879ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்த பெரியாருக்கு பெற்றோர் இட்ட பெயர் ராமசாமி. 

இவருக்கு கிருஷ்ணசாமி என்ற சகோதரரும், கண்ணம்மா, பொன்னுத்தாயி, என்ற சகோதரிகளும் இருந்தனர்.

சிறுவயதிலிருந்து ராமசாமி அதிக குறும்பில் ஈடுபட்டார். ஆரம்ப காலத்தில் திண்ணை பள்ளியில் படித்தார். தன்னுடைய 12 ஆவது வயதில் பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு வியாபாரத்தை கவனிக்க தொடங்கினார்.

பெரியாருக்கு 19 வயது நிரம்பியபோது நாகம்மையை திருமணம் செய்து கொண்டார். பெரியார் நாகம்மை தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தை 5 மாதத்தில் இறந்து விட்டது.

அரசியலில் ஆர்வம் கொண்ட பெரியாருக்கு ஆரம்பத்தில் காந்தி கொள்கையில் ஈடுபாடு ஏற்பட்டது. இதையடுத்து 1919ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

காங்கிரஸ் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட பல போராட்டங்களில் கலந்து கொண்ட பெரியார் 1922ல் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் தான் அரசுப்பணி, கல்வியில் இடஒதுக்கீடை ஏற்படுத்த காங்கிரஸ் மறுத்தது.

 இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பெரியார் 1925ல் காங்கிரஸ் இருந்து வெளியேறினார்.

நேர் எதிர்கொள்கை கொண்ட ராஜாஜியுடன் கடைசிவரை தனிப்பட்ட முறையில் நட்பை பேணினார். 

சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு கடவுள் மறுப்பு என தீவிரமாக செயல்பட்டார்.

ராஜாஜி ஆட்சி காலத்தில் இந்தி திணிப்பு எதிராக நீதிக்கட்சி சார்பில் போராடி 1938ல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தன் வாழ்நாள் முழுவதும் தமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சிக்கு உழைத்தார்.

பெண்களின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டார். இப்படி தமிழகத்தின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் பெரியாரின் பங்கு உள்ளது என்றால் மிகையல்ல.

பெரியார் தனக்கு பிறகு கழகத்தின் சொத்துகளுக்கு ஒரு வாரிசு வேண்டும்.பலரும் உரிமை கொண்டாடி கழகத்தை,பணத்துக்காக போராடி சீரழித்து விடக் கூடாது என்று முடிவு செய்தார். 

அப்படிதான் பெரியார் தம் வாரிசாக தனது கொள்கைகள் மீது மிகுந்த பற்று கொண்ட மணியம்மையை தேர்வு செய்தார். 

ஆனால் அப்போதைய இந்திய சிவில் சட்டத்தின் படி ஒரு பெண்ணுக்கு தத்தெடுக்கும் உரிமையும் இல்லை. தத்து போகும் உரிமையும் இல்லை. இதனால் இரத்த உறவுகளுக்கு மட்டுமே வாரிசாக ஏற்கும் வகையில் சட்டம் இருந்தது. 

ஆனால் பெரியாரின் மனைவி நாகம்மை ஏற்கனவே மறைந்திருந்தார். அவர்களுக்கு பிறந்த குழந்தையும் இறந்தே பிறந்திருந்ததால் வேறு வழியின்றி பெரியார் தன்னை விட 40 வயது இளைய மணியம்மையை திருமணம் செய்து கொண்டார். 

இது அன்றைய நாட்களில் தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் அதிருப்தி அடைந்த அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட திராவிடர் கழக தொண்டர்கள் பிரிந்து சென்று திராவிடர் முன்னேற்ற கழகத்தை தொடங்கி தேர்தல் அரசியலில் பங்கேற்றனர் என்பதே வரலாறு. 

அன்று மட்டும் அல்ல இன்றுவரை பெரியாரின் கருத்து எதிரான கருத்துகளை கொண்டவர்கள் முதலில் விமர்சிப்பது அவரது திருமணத்தையே.

ஆனால் இதுபோன்ற எந்த சலசலப்புக்கும் அஞ்சாத பெரியார் இந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்காக 94 வயது வரை தமிழகம் முழுவதும் சுற்றி வந்து தன் கருத்தை முன்வைத்த வண்ணமே இருந்தார்.

இறுதியில் 1973ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி மரணம் அடைந்தார். பெரியார் மறைந்து 50 ஆண்டுகளான நிலையிலும் இந்த சமூகத்தின் ஒவ்வொரு நகர்விலும், அரசியலிலும், பெரியாரின் வார்த்தைகள் கருத்துகள் பேசுபொருளாகிக்கொண்டு தான் இருக்கிறார். 

அந்த வகையில் பெரியார் மறைந்தாலும் இன்றும் தன் தொண்டர்கள் மத்தியில் மட்டுமின்றி ஒடுக்கப்பட்டு அவரால் தலைநிமிர்ந்த மக்கள்,மகளிர் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

-------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக