குப்பையில் ஆதார்?

 சூரியனை ஆய்வு செய்ய தயாராகும் ஆதித்யா எல்-1 - இன்று விண்ணில் பாய்கிறது.ஆதித்யா-L1 விண்ணில் பாயும் நிகழ்வை நேரில் காண சுமார்10,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர் .

ஆகஸ்ட் 29ம் தேதி இணைய முன்பதிவு தொடங்கிய 7 நிமிடங்களில் மொத்த முன்பதிவு முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மோடியின் ஒன்றிய அரசின் அடுத்த ஊழல்? மதுரை எய்ம்ஸ் டெண்டர் ஆலோசனை நிறுவனம் ரூ.1,528 கோடி முறைகேடு: சிபிஐ பிடியிலும் சிக்கியது.

சென்னை துறைமுகம் சாதனை ஒரேநாளில் 19,906 டன் இரும்பு இறக்குமதி செய்தது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வருகை பகுதி குப்பை தொட்டி அருகே ஆதார், பான் கார்டுகள் மற்றும் அடையாள அட்டைகள் குவியலாக கிடந்ததால் பரபரப்பு .

தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு ரூ.2,000 அபராதம்: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

ரூ.23 கோடி சொத்து மறைத்ததால் வெற்றி செல்லாது தேவகவுடா பேரன் ஹாசன் தொகுதி மஜத எம்பி பிரஜ்வல் ரேவண்ணா ம்.பி. பதவி ரத்து: கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி .

மே 19ம் தேதியன்று புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுக்களில் 93 சதவீதம் வங்கிகளுக்கு திரும்பியது” என ரிசர்வ் வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

----------------------------------------------


சிங்கம்பூருக்கு தமிழர் அதிபர்

சிங்கப்பூர் அதிபர் பதவிக்கு நேற்று தேர்தல் நடந்தது.

 இத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி சார்பாக அதிபர் பதவிக்கு முன்னாள் துணை பிரதமரும், பொருளாதார நிபுணருமான தர்மன் சண்முகரத்தம் போட்டியிட்டார்.

 1959-ம் ஆண்டில் இருந்து நீண்ட காலம் ஆட்சியில் இருந்த மக்கள் செயல் கட்சி ஊழல் பிரச்னையில் சிக்கி தவித்தது. 

அதிபர் பதவிக்கான தேர்தலில் தர்மன் சண்முகரத்தினத்தை எதிர்த்து மேலும் இரண்டு பேர் போட்டியிட்டனர்.

இத்தேர்தல் நேற்று நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் உடனுக்குடன் எண்ணப்பட்டன.

இத்தேர்தலில் 66 வயதாகும் தர்மன் சண்முகரத்தினம், 70.4 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

இதனை தேர்தல் அதிகாரி டான் மெங்க் முறைப்படி அறிவித்தார். சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்தினம் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அவர் அறிவித்தார். 

கடந்த ஆறு ஆண்டுகளாக ஹலிமா யாக்கோப் அதிபராக இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் வரும் 13-ம் தேதியோடு முடிவடைகிறது.

அவருக்கு பதில், இனி தர்மன் சண்முகரத்தினம் அதிபராக இருப்பார். தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் முன்பாக தர்மன் சண்முகரத்தினம் அளித்த பேட்டியில், ``சிங்கப்பூரில் இது நம்பிக்கை வாக்கெடுப்பு என்று நான் நம்புகிறேன். 

இது நாம் ஒன்றாக முன்னேறக்கூடிய எதிர்காலத்திற்கான நம்பிக்கையின் வாக்கெடுப்பு” என்று குறிப்பிட்டார்.

இலங்கைத்தமிழரான தர்மன் சண்முகரத்தினம் லண்டனில் பொருளாதாரம் படித்தவர் .

சிங்கப்பூரில் இது வரை சீனாவை சேர்ந்தவர்களே அதிக அளவில் அதிபர்களாக தேர்வு செய்யப்பட்டு வந்தனர். 

இதற்கு முன்பு சிங்கப்பூரில் நிதியமைச்சர் உட்பட பல்வேறு துறை அமைச்சராக தர்மன் சண்முகரத்தினம் இருந்துள்ளார். 

தேர்தல் வெற்றிக்கு பிறகு அவர் அளித்த பேட்டியில், ``சிங்கப்பூர் மக்கள் தனக்கு அளித்துள்ள ஆதரவுக்கு உண்மையிலேயே மதிப்பளித்து அதனை காப்பாற்றுவேன்.

எனக்கு அளிக்கப்பட்ட வாக்கு சிங்கப்பூருக்கு அளிக்கப்பட்ட வாக்காகும்” என்று தெரிவித்துள்ளார். 

இதற்கு முன்பு சிங்கப்பூரில் செல்லப்பன் ராமநாதன் மற்றும் தேவன் நாயர் ஆகியோர் தமிழர் வம்சாவளி அதிபர்களாக இருந்துள்ளனர். 

---------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக