சீரற்ற சீரமைப்பு.
தமிழ்நாட்டின் பிரதிநித்துவத்தை மக்களவையில் குறைக்க தொகுதி மறுசீரமைப்பு ஒன்றிய அரசு கொண்டுவருகிறது.என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் பேசியுள்ளார்.
என்ன விளைவுகள் மறுசீரமைப்பால் உண்டாகும்.?தமிழ்நாடு,கேரளா,தெலுங்கானா என தென்னிந்தியாவின் மொத்த பிரதிநிதித்துவம் குறைந்து,வட இந்தியா தொகுதிகள் கூடவே இந்த மறுசீரமைப்பு உதவும்.
வட மாநிலங்களில் மக்கள்தொகை வளர்ச்சி தென்னிந்தியாவை விட வேகமாக உள்ளது.
ஒப்பீட்டளவில் குறைவான மக்கள்தொகை வளர்ச்சியின் விளைவாக, தொகுதி மறுவரையறை நிர்ணயத்திற்குப் பிறகு, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளாவில் சில மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுதி மறுவரையறை நிர்ணயம் என்பது மக்கள்தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை நிர்ணயம் செய்யும் செயலாகும்.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் சரியான பிரதிநிதித்துவத்திற்காக ஒவ்வொரு தொகுதியிலும் தோராயமாக ஒரே எண்ணிக்கையிலான வாக்காளர்கள் இருப்பதை உறுதி செய்வதே இந்த நடைமுறையின் முதன்மை நோக்கம் ஆகும்.
உத்தரப் பிரதேசத்தில் தற்போது 80 இடங்கள் உள்ளன. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை நிர்ணயத்திற்குப் பிறகு 11 இடங்கள் அதிகரித்து 91 இடங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், தமிழ்நாட்டின் எண்ணிக்கை தற்போது 39-ல் இருந்து 31 ஆகக் குறையக்கூடும்.
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டும் சேர்ந்து 42 இடங்களைக் கொண்டுள்ளன. அவை 34 ஆக குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 20ல் இருந்து 8 இடங்கள் குறைந்து 12 இடங்களைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
கர்நாடகாவும் தற்போது உள்ள 28 இடங்களில் 26 இடங்களாகக் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
-----------------------------------
-------------------------------------
அதே நேரத்தில், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 11 நாடாளுமன்ற தொகுதிகளும், பீகாரில் 10 தொகுதிகளும், ராஜஸ்தானில் 6 தொகுதிகளும், மத்தியப் பிரதேசத்தில் 4 தொகுதிகளும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், டெல்லி மற்றும் சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் 2026-க்குப் பிறகு, தொகுதி மறுவரையறை நிர்ணயத்திற்குப் பிறகு தலா 1 இடம் கூடுவதற்கு வாய்ப்புள்ளது.
அறிக்கையின்படி, உத்தரப்பிரதேசம் அனைத்து மாநிலங்களிலும் மிகக் குறைவான பிரதிநிதித்துவம் கொண்ட மாநிலமாகும்.
அதே நேரத்தில் ஒரு எம்.பி.க்கு மக்கள்தொகை அடிப்படையில் தமிழ்நாடு மிக அதிகமாக உள்ளது. இருப்பினும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள எம்.பி.க்கள் சராசரியாக கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்களுக்கு பணியாற்றுகிறார்கள்.
தமிழ்நாட்டில் 1.8 மில்லியன் மக்களுடன் ஒப்பிடுகையில், ஒரு தொகுதிக்கு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரே மாதிரியாக உள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
நம்பமுடியாத வகையில், 2014-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தை விட, ஒரு தொகுதிக்கு சற்றே அதிகமான வாக்காளர்கள் தமிழகத்தில் வாக்குப்பதிவுக்குச் சென்றுள்ளனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
நாடாளுமன்றத்துக்கு குறைவான பிரதிநிதித்துவம் உள்ள மாநிலங்களில் மக்கள் அதிகமாக இருக்கலாம். ஆனால், இது உண்மையான வாக்களர்களின் எண்ணிக்கையாக இருக்காது என்று இந்த கண்டுபிடிப்பு தெரிவிக்கிறது.தற்போது, லோக்சபா தொகுதிகளின் மறுவரையறை நிர்ணயம் முடக்கப்பட்டுள்ளது, அதன் அதிகபட்ச பலம் 545 ஆகும். 1976-ல், தொகுதி மறுவரையறை நிர்ணய நடவடிக்கையை 2000 வரை அரசாங்கம் நிறுத்தி வைத்தது.
ஆனால், 2001-ல், அந்த தடை 2026-வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது, மறுவரையறை நிர்ணயம் 2026-க்குப் பிறகு முதல் பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு நடைபெறும்.
தொகுதி மறுவரையறை நிர்ணயம் முடக்கம் நாடாளுமன்றத்தில் சமத்துவமற்ற பிரதிநிதித்துவத்தை உருவாக்கியுள்ளது. அரசியல் விஞ்ஞானி ஆலிஸ்டர் மெக்மில்லன், 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 7 மக்களவைத் தொகுதிகள் குறைவாக இருந்திருக்க வேண்டும் என்றும், உத்தரப் பிரதேசம் 7 இடங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் கணக்கிட்டார்.
கார்னகி அறிக்கையின்படி, தொகுதி மறுவரையறை நிர்ணயத்திற்குப் பிறகு, பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய நான்கு வட மாநிலங்கள் கூட்டாக 22 இடங்களைப் பெறும். அதே நேரத்தில், ஆந்திரப் பிரதேசம், கேரளா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு தென் மாநிலங்கள் 17 இடங்களை இழக்கும் என்று தெரிய வந்துள்ளது.
“நம்முடைய மக்கள்தொகை கணக்கெடுப்புகளின் அடிப்படையில், இந்த போக்குகள் காலப்போக்கில் தீவிரமடையும். உதாரணமாக, 2026-ம் ஆண்டில், பீகார் மற்றும் உத்தரபிரதேசம் மட்டும் 21 இடங்களைக் கூடுதலாகப் பெறும், கேரளா மற்றும் தமிழ்நாடு 16 இடங்களை இழக்கும்” என்று இந்த அறிக்கை கூறுகிறது.
----------------------------------------------