பேருதாங்க பம்பர் பரிசு!

 சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து தீ பிடித்தது.

கிருஷ்ணகிரி கேஆர்பி அணை நிரம்பியது...#தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

அரசின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா பருவத்தில் ஏற்பட்ட மகசூல் இழப்புக்கு ₹560 கோடி இழப்பீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

"இந்தியா நிலவை அடைந்தபோது உலக நாடுகளிடம் நிதிக்காக பாகிஸ்தான் கையேந்துகிறது"-முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வேதனை.

சேலம் மாவட்டத்தில் செப்டம்பர் 28, அக்டோபர் 2ல் டாஸ்மாக் கடைகள், பார்களை மூட உத்தரவு.

பாப்பாரப்பட்டி அருகே பனைகுளம் அரசு பள்ளியில் குடிநீர் தொட்டியில் துர்நாற்றம்.மலம் கலக்கப்பட்டதா?-கல்வி அதிகாரிகள் விசாரணை.

கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனையை நுகா்வோா் விரும்பவில்லை-ஆவின்

புதிய நாடாளுமன்றத்துக்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது ஏன்? -பா.ஜ.க விற்கு காங்கிரஸ் கேள்வி?

பேருதாங்க 25 கோடி பம்பர் .

தமிழகத்தில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை தடை செய்யப்பட்டிருந்தாலும் அண்டை மாநிலமான கேரளாவில் அவ்வப்போது லாட்டரி டிக்கெட்டுகளில் தமிழர்கள் வெற்றி பெற்று பரிசுத்தொகையை அள்ளி வருகின்றனர். அந்த வகையில் தற்போது திருப்பூரை சேர்ந்த சேர்ந்தவர்களுக்கு ஓணம் பண்டிகையின் பம்பர் பரிசாக ரூ25 கோடி வழங்கப்பட்டுள்ளது

திருப்பூரை சேர்ந்த பாண்டியராஜ்நடராஜன்குப்புசாமி மற்றும் ராமசாமி ஆகிய நான்கு சொந்தக்காரர்கள் சேகரித்த டிக்கெட்டுக்கு முதல் பரிசு ரூ25 கோடி கிடைத்துள்ளது. 

இந்த பரிசை வென்ற நடராஜன் பாலக்காடு வாளையாரில் குருசுவாமிபாவா ஏஜென்சிமூலம் விற்பனை செய்துஷீஜா என்ற ஏஜென்ட் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.

இதன் மூலம் கடந்த ஓராண்டில் நடத்தப்பட்ட 7 பம்பர் டிக்கெட்டுகளில் மான்சூன்கிறிஸ்துமஸ் மற்றும் நேற்றைய திருவோணம் உள்ளிட்ட 3 பம்பர் முதல் பரிசுகளை பாலக்காடு வென்றது. தற்போது ஓணம் பண்டிகை பம்பர் பரிசாக 25 கோடி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த 25 கோடியில் பரிசு விழுந்தவர் கையில் கிடைக்கும் மொத்த தொகை எவ்வளவு தெரியுமா?

ஏஜென்சிகமிஷன்(10%)2.5 கோடியும், மீதமுள்ள 22.5 கோடி பரிசு வரி (30%)- 6.75 கோடியும். பம்பர் ஹிட்மேன் கணக்கிற்கு 15.75 கோடியும் (37%*) வரித் தொகையில் செலுத்தப்படுகிறது.

இதில் சுகாதாரக் கல்வி வரி (4%) மற்றும் கூடுதல் கட்டணம் உட்பட 36,99,000 செலுத்தப்படும். 

கணக்கில் உள்ள தொகையின் மொத்த வரி -2.85 கோடிகள். அனைத்து வரிகளுக்கும் பிறகு மீதி இருப்பு - ரூ.12,88,26,000 பரிசுபெற்றவர்களுக்கு வழங்கப்படும். 

அத்துடன் முடியவில்லை.

வருமானவரி1 கோடியிலிருந்து 2 கோடி வரை 15%5 கோடிவரை 25%அதன்பிறகு பிறகு 37% வரி செலுத்த வேண்டும். 

இந்தத் தொகை லாட்டரித் துறையால் வசூலிக்கப்படுவதில்லை. தனியே வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக 25 கோடியில் 10 கோடிதான் எஞ்சும்.

--------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?