உறுப்பு தானம்: உரிய மரியாதை

 சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 35 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.

"ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளடக்கிய 4 வேட்பாளர்களை பாஜக களமிறக்குகிறது"-மல்லிகார்ஜுன கார்கே.

சீனாவின் ஹாங்சோவ் நகரில் கோலாகலமாக தொடங்கிய 19 வது ஆசிய விளையாட்டுப்போட்டி. சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடுமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின் "உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்." எனத் தெரிவித்துள்ளார். 

----------------------------------------
தானத்தில் பெருந் தானம்!

மூளைச் சாவு அடைந்தவர்களின் இயங்கக்கூடிய  உடல் உறுப்புகளை அதை தேவைப்படும் பிணியாளர்களுக்கு வழங்கி அவர்களைக் காப்பாற்றுவதே உறுப்புதானம்.

உறுப்பு தானம் பெறும் நடைமுறை 2008- ஆம் ஆண்டு தொடங்கியது. 
அப்போது முதல் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம் என முக்கிய உறுப்புகள் தானம் பெறப்பட்டு பலர் மரணத்தின் விளிம்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். 
கடந்த 15 ஆண்டுகளில் ஆயிரத்து 726 உறுப்பு கொடையாளர்கள் மூலம் 6 ஆயிரத்து 327 உறுப்புகள் பெறப்பட்டுள்ளன. கடந்த இரண்டரை ஆண்டில் மட்டும் 313 கொடையாளர் மூலம் ஆயிரத்து 242 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு 663 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

உறுப்பு தானத்தில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த தமிழ்நாட்டை தற்போது தெலங்கானா பின்னுக்கு தள்ளியுள்ளது.
 இதற்கு அரசு மருத்துவமனைகள் உறுப்பு தானத்தை பற்றி விழிப்புணர்ச்சி செயல்பாடுகளை அதிகம் மேற்கொள்ளாததே காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

குஜராத், கர்நாடகம், மகாராஷ்டிரா மாநிலங்களிலும் உடல் உறுப்பு தானங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன.

தமிழ்நாட்டில் உறுப்பு தானம் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், இதயம் , கல்லீரல் , சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உடலுறுப்புகளை தானம் பெறுவதற்காக 6,811 நபர்கள் பதிவு செய்து காத்திருக்கின்றனர். 

இதில் அதிகபட்சமாக 6 ஆயிரத்து 179 பேர் சிறுநீரகம் வேண்டியும் , 449 பேர் கல்லீரல் வேண்டியும் விண்ணப்பித்துள்ளனர். 72 பேர் இதயத்திற்காகவும் , 60 பேர் நுரையீரலுக்காகவும் காத்திருக்கின்றனர். 
24 பேர் இதயம் , நுரையீரல் இரண்டும் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கைகள் வேண்டி 26 பேரும் கணையம் வேண்டி ஒருவரும் காத்திருக்கின்றனர்.

உறுப்புதானம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும்,தானம் செய்தோரை பெருமைப் படுத்தும் விதமாகவும்,நன்றி தெரிவிக்கும்விதமாகவும்  இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்


மோதலின் மூலம்.

கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நபர் ஆவர். 

அவர் 1980களில் இருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும் சிறுவயதிலிருந்தே உள்ளூர் ரவுடிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 
இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு போலி பாஸ்போர்ட் மூலம் கனடாவுக்குத் தப்பிச் சென்றுள்ளார்.
அங்கு டிரக் ஒட்டுநராக பணிபுரிந்த இவர், பாகிஸ்தானுக்கு வந்து வெடிபொருட்கள் மற்றும் பயிற்சிகளையும் பெற்றதாகக் கூறப்படுகிறது. 
குறிப்பாகக் கனடா மண்ணில் தஞ்சம் புகுந்த அவர், அங்கிருந்தபடியே பஞ்சாபில் பல கொலைகள் மற்றும் தாக்குதல்களை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. 
இந்தியாவில் 1980கள் மற்றும் 90களில், அவர் காலிஸ்தான் கமாண்டோ படை பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். 

அதன் பின்னர் 2012க்கு பிறகு காலிஸ்தான் டைகர் போர்ஸ் அமைப்புடனும் தொடர்பில் இருந்துள்ளார். இந்தியாவில் பல பயங்கரவாத வழக்கில் அவருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்த நிலையில் தான் 1996 இல் அவர் கனடாவுக்குத் தப்பிச் சென்றார்.

அங்கிருந்த போது தான் பாகிஸ்தானைச் சேர்ந்த காலிஸ்தான் டைகர் போர்ஸ் தலைவர் ஜக்தர் சிங் தாராவுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

தொடர்ந்து ஏப்ரல் 2012 இல் பாகிஸ்தான் சென்று சுமார் 15 நாட்கள் தங்கிய அவர் ஆயுதங்கள் மற்றும் வெடி பயிற்சியைப் பெற்றதும் தெரிய வந்துள்ளது.

 பாகிஸ்தானில் இருந்து வந்தவுடன் இந்தியாவில் தாக்குதல்களை நடத்த நிதி திரட்டி வந்துள்ளார்.
 இதற்காகவே பஞ்சாபில் தனியாக ஒரு கேங்கையும் அவர் உருவாக்கியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டில், ஹரியானாவின் சிர்சாவில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த நிஜ்ஜார் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் அவரால் கடைசி நேரத்தில் அவரது குழுவால் இந்தத் தாக்குதலை நடத்த முடியவில்லை. 
இதையடுத்து பஞ்சாபைச் சேர்ந்த சிவசேனா தலைவர் நிஷாந்த் சர்மா என்பவரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.

மேலும், 2020இல் தந்தை-மகனான இரட்டையர்களான மனோகர் லால் அரோரா மற்றும் ஜதிந்தர்பீர் சிங் அரோரா ஆகியோரின் கொல்ல திட்டமிட்டுள்ளனர். இதில் தந்தை மனோகர் லால் கொல்லப்பட்ட நிலையில், மகன் தப்பிவிட்டார்.
 பஞ்சாபில் நடந்த இந்த கொலையைக் கனடாவில் இருந்து ஹர்தீப் சிங் தான் ஸ்கெட்ச் போட்டுள்ளார். 
இதற்கும் பெருந்தொகையை அவர் கனடாவில் இருந்து அனுப்பியதும் தெரிய வருகிறது.

ஹர்தீப் சிங் கனடாவில் இருந்தபடியே பஞ்சாபில் ஒரு பயங்கரவாத டீமை உருவாக்கியுள்ளார். 
இதைக் கொண்டு பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்தவும் ஹர்தீப் சிங் திட்டமிட்டுள்ளார். 

கனடா இந்திய தூதரகக் கட்டிடத்தில் பறந்த இந்தியக் கொடியை இறக்கியுள்ளார்.
இந்தச் சூழலில் தான் கடந்த ஜூன் மாதம் அவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இவரது கொலையை நடத்தியது இந்திய "ரா" அதைப்பு என கனட காலிஸ்தான் அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
அதை ஆதாரம் இருப்பதாக கனடா அரசும் எண்ணுகிறது.

இதனால்தான் ரா,இந்திய தூதர்களை கனடாவை விட்டு வெறியேற்றியது.

தற்போதைக்கு இந்தியா-கனடா மோதலுக்கு இதுதான் மூலம்.
 .----------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?