மூடநம்பிக்கை உருவம்.

  இந்தியா.  2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச்சுடுதலில் முதல் தங்கம் வென்றது .

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.

மகளிருக்கு 33 % இடஒதுக்கீடு வரும், ஆனா வராது.மோடி அரசு வைத்த 3  தடைகள். நாடாளுமன்றத்தின் இருஅவைகளில் நிறைவேறினாலும் உடனடி பலன் இல்லை.

அதிமுகவை தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதால் பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறுமா ?அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இன்று  முடிவு.

கிருஷ்ணகிரி ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியில் முறைபேடுகள் செய்த வார்டனை பணி இடை நீக்கம் செய்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் ஏஜென்டாக செயல்படுகிறார் ஆளுநர் ரவி.

------------------------------------

மூடநம்பிக்கை உருவம்.

புது நாடாளுமன்றக் கட்டிடம்!

சிவசேனா  கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், “டெல்லி அரசாங்கம் மூடநம்பிக்கைகளாலும், குருட்டுப் பின்பற்றுபவர்களாலும் சூழப்பட்டுள்ளது.

நாட்டை நடத்துபவர்களின் மனதில் மூடநம்பிக்கை, கிரகங்கள் மற்றும் ஜாதகங்களின் தாக்கம் உள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடம் உங்களுக்கு மங்களகரமானதாக இருக்காது.

எனவே, 10 ஆண்டுகளுக்குப் பிறகு யாரும் அங்கு ஆட்சியில் இருக்க முடியாது, ஆகவே புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்டது. இது ஜோதிடரின் ஆலோசனையாகும்..

புதிய கட்டிடம் கோமுகி (பசு முகம்) இருக்க வேண்டும் என்றும் ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

அதன்படி வடிவமைப்பில்தான் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

ஒரு பக்கம் நமது விஞ்ஞானிகள் நிலாவை அடைந்து விட்டார்கள்; அதே நாட்டின் தலைவர்கள் அதிகாரத்தை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டுகிறார்கள். 

டெல்லியில் ஜோதிடர்களும் பாபாக்களும் ஆட்சி செய்கிறார்கள்.

எனக் கட்டுரை வெளியிட்டுள்ளது

இதற்கிடையில், இந்த வார தொடக்கத்தில் கூட்டப்பட்ட சிறப்பு அமர்வில் கலந்துகொண்ட புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் தனது அனுபவத்தை ராவத் பகிர்ந்துகொண்டார்.

அதில், “நான் அங்கு சென்றபோது, ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டது. புதிய பார்லிமென்ட் மாளிகையில் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவிற்கு ஒரே ஒரு கதவு மட்டுமே உள்ளது.

அது ஒரு மல்டிபிளக்ஸ் போல இருந்தது. பழைய கட்டிடத்தில் இருக்கும் வசதிகள் புதிய பார்லிமென்ட் கட்டிடத்தில் இல்லை.

பழைய கட்டடம் நல்ல நிலைமையில் இருக்கும்போது புதிய கட்டடம் ரூ.20 ஆயிரம் கோடியில் கட்டப்பட்டது. தேவையற்றது.மூடநம்மிக்கையின் விளைவு.

இது அன்னையை வயதானவள் எனக் கூறி முதியோர் இல்லத்துக்கு அனுப்புவது போன்றது” எனத் தெரிவித்தார்.

-----------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?