எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்?
போதை வரும் பாதை
குஜராத்தில் 800 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது
கட்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு
சிற்றோடையின் கரையில் கொட்டப்பட்ட சுமார் ₹800 கோடி மதிப்பிலான 80 கிலோ கோகோயின் போதைப்பொருளை குஜராத் போலீஸார் வியாழக்கிழமை மீட்டனர். மாநில காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள்களில் இதுவும் ஒன்றாகும்.கட்ச் மாவட்டத்தில் உள்ள காந்திதாம் நகருக்கு அருகில் உள்ள மிதி ரோஹர் கிராமத்தில் உள்ள ஒரு சிற்றோடையின் கரையில் போதைப்பொருள் அடங்கிய பொட்டலங்கள் கைவிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவிற்குள் போதைபொருட்கள் வழி குஜராத்,முந்த்ரா அதனை துறைமகம்தான்.
--------------------------------
31 ஆண்டுகள் அலைக்கழிப்பு
வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீது 1992ல் நிகழ்த்தப்பட்ட வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில், 215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
90 களில் ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அரசு அதிகரிகள்,காவல்துறையினர் ஈடுபட்டதால் அவர்கள் மீது ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை பாதுகாத்தார்.
ஆனால் கம்யூனிஸ்ட் கட்சினர் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு ஆதராவாக வழக்கு தொடுத்தனர்.அதற்குத்தான் 31 ஆண்டுகள் கடந்த பின்னர் தீர்ப்பு வெளியாகியுள்ளது.தாமதிக்கப்பட்ட தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனைதான்.இவ்வழக்கில் தொடர்புடைய பாதிக்கப்பட்டவர்களும்,புற்றவாளிகளும் பலர் இறந்து விட்டனர்.
அதைவிடக் கொடுமை குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து வழக்கு நடந்தால்..?
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு உடனடியாக ₹10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு.
"பாதிக்கப்பட்டவர்கள் இறந்து விட்டால் அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.. குற்றம் புரிந்தவர்களிடம் ₹5 லட்சம் வசூலிக்க வேண்டும்" - நீதிபதி வேல்முருகன்
"அப்போதைய எஸ்.பி, மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - நீதிபதி வேல்முருகன்
“பாதிக்கப்பட்ட அல்லது அவர்களது குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” - நீதிபதி வேல்முருகன்
269 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்கள். தீர்ப்பு வரும் போது 54 பேர் உயிருடன் இல்லாததால் மீதி இருக்கும் 215 பேருக்கும் தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை .
---------------------------------------------
கைக்கு எட்டியது?
கேரள அரசு லாட்டரி ஓணம் பண்டிகை பம்பர் பரிசாக, 25 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. டிக்கெட் விலை 500 ரூபாய். சில நாட்களுக்கு முன் நடைபெற்ற குலுக்கலில், கோவை மாவட்ட எல்லையான கேரளா, வாளையாரில் ஒரு கடையில் விற்பனையான டிக்கெட்டுக்கு 25 கோடி ரூபாய் கிடைத்தது.
திருப்பூரைச் சேர்ந்த பாண்டியராஜன் உட்பட நான்கு பேர் எடுத்த டிக்கெட்டிற்கு இந்த பரிசு விழுந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி துறை அலுவலகத்தில் பரிசுக்குரிய டிக்கெட்டை ஒப்படைத்தனர்.
பொதுவாக கேரள லாட்டரியில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு பரிசு கிடைத்தால், லாட்டரி எப்படி கிடைத்தது; கேரளா வந்தபோது வாங்கினரா; எதற்காக வந்தனர் என்பதற்கு உரிய ஆவணங்களுடன் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவை பரிசோதித்து உறுதி செய்யப்பட்ட பின்னரே, பரிசு வழங்கப்படும்.
இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த அம்புரோஸ் என்ற பெயரில் முதல்வர் பினராய் விஜயனுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், 'பிளாக்கில் விற்பனை செய்த டிக்கெட்டிற்கு, 25 கோடி ரூபாய் கிடைத்துள்ளதால் அந்த பணத்தை அவர்களுக்கு வழங்கக் கூடாது.
அதை சமூக சேவைக்கு பயன்படுத்த வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், பரிசுக்குரிய டிக்கெட்டை வாங்கிய நான்கு பேரும், கேரளாவில் உடல்நலக் குறைவு ஏற்பட்ட ஒருவரை சந்திக்க வந்தபோது, டிக்கெட் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளனர்.
கேரள லாட்டரி துறை அதிகாரிகள் கூறுகையில் 'பரிசுக்குரியவர்கள் எதற்காக கேரளா வந்தனர் என்பதை விசாரித்து உண்மையை உறுதி செய்த பின்னரே பரிசு தொகை வழங்கப்படும்' என, தெரிவித்தனர்.
----------------------------------------
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்?
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிக்கான முன் டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளது ஒன்றிய அரசு.
ஒன்றிய அரசு ஒற்றை செங்கலை வைத்து நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும் கட்டுமானப் பணிக்காக முன் டெண்டருக்கே இத்தனை கால தாமதம் ஆகிறது என்றால் மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்?
எய்ம்ஸ் கட்டுமானப் பணியை தாமதப்படுத்தி தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
----------------------------------------