ஒரே நாடு,ஒரே அதிபர்

ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் மோடி நாட்டின் அதிபராக நினைக்கிறாரா என தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்விஎழுப்பியுள்ளார். 

கொசு, டெங்கு, மலேரியா, கரோனா இதையெல்லாம் ஒழித்துக்கட்டுவது போன்று சனாதனத்தை ஒழித்துக் கட்டவேண்டும் என  பேசியதில் தான் உறுதியாக இருப்பதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.


  • தமிழ்நாட்டில் நீலகிரி, மதுரை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளதாகவும், குமரி, நெல்லை,தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியாகியுள்ளது.

  • கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் அண்ணாமலைக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  தாக்கிப்பேசியுள்ளார்.

  • காஞ்சிபுரத்தில்  நடைபெற இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் புரட்சிப்பயண தொடக்கவிழா பொதுக்கூட்டம் கனமழையின் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

  • ஜி-20 மாநாடு நடைபெற உள்ளதால், டெல்லியில் தடுப்புகள் காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

தமிழகம்குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு : பொதுமக்கள் குளிக்க தடை.

குஜராத் மாடல் என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தார் மோடி: முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஜீ குழுமத்தின் ரூ.5,000 கோடி கடனை தள்ளுபடி செய்தது யெஸ் வங்கி.ஜீ குழுமத்தலைவர் பாஜக தலைவர்களில் ஒருவர்.

ரக்‌ஷா பந்தன் நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய 2 சகோதரிகளை 10 பேர் கும்பல் கூட்டு பலாத்காரம்: பாஜக நிர்வாகியின் மகன் உள்ளிட்டோர் கைது.

-----------------------------------------
தகுதியான பாஜக நிர்வாகி

"‘பல்பு’ ஹோல்டரில் ரகசிய கேமராவை பொருத்தி தொழிலதிபர்களை வலையில் சிக்கவைத்து ஆபாச வீடியோ எடுத்து மோசடி. பெண்பாஜக நிர்வாகி, "

பல்பு’ ஹோல்டரில் ரகசிய கேமாரவை பொருத்தி தொழிலதிபர்களை வலையில் சிக்கவைத்து ஆபாச வீடியோ எடுத்த பெண், பாஜக நிர்வாகி, அந்தப் பெண்ணின் கணவர் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது.
 செய்தனர். 
மத்திய பிரதேச மாநிலம் குணா நகரில் வசிக்கும் ஜவுளி தொழிலதிபரான தீபக் ஜெயின் என்பவரிடம் சமூக ஊடகம் மூலம் ெபண் ஒருவர் அறிமுகமானார். 
தனது சகோதரனை போல் அந்தப் பெண் தீபக் ஜெயினிடம் பழகி வந்தார்.சில நாட்களுக்கு பின் அவசர தேவைக்காக தீபக் ஜெயினிடம் ரூ.5500 கடன் வாங்கினார். 
ஆனால் குறிப்பிட்ட காலத்தில் வாங்கிய கடனை திருப்பி தரவில்லை. 

அந்தப் பெண்ணை போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, தனது வீட்டிற்கு வந்து வாங்கிச் செல்லுமாறு கூறினார். 
அதனை நம்பிய தீபக் ஜெயின், அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றார்.
 அப்போது தீபக் ஜெயினுக்கு வழங்கிய டீ-யில் போதைப்பொருளை கலந்து அந்தப் பெண் கொடுத்தார். அதனை வாங்கிக் குடித்த தீபக் ஜெயின், அடுத்த சில நிமிடங்களில் மயங்கினார். சுயநினைவற்ற நிலையில் கிடந்த அவரை வைத்து, அவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோவை எடுத்தார்.

மயக்க நிலையில் இருந்த தீபக் ஜெயின், சுயநினைவு திரும்பியவுடன் தனது வீட்டிற்கு திரும்பினார். 
அடுத்த சில நாட்களில் அந்தப் பெண்ணுடன் இருக்கும் ஆபாச வீடியோவை, தீபக் ஜெயினுக்கு அவரது நண்பர் ஒருவர் அனுப்பியுள்ளார். அதிர்ச்சியடைந்த தீபக் ஜெயின், இவ்விவகாரம் குறித்து போலீசில் புகார் அளித்தார். 

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘வாங்கிய கடனை திருப்பி தருவதாக கூறி, அந்தப் பெண் அவரது வீட்டிற்கு அழைத்தார். டீயில் போதை மருத்தை கலந்து கொடுத்து ஆபாச வீடியோ எடுத்துள்ளார். 
இதுகுறித்து கேட்டதற்கு, 3 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினார். மேலும், பணம் தராவிட்டால் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் கூறினார். 
அவமானமாக இருக்கும் என்பதால், இதுகுறித்து வெளியே சொல்லவில்லை. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளதால் போலீசில் புகார் அளித்தேன்’ என்றார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ராகேஷ் குமார் சாகர் கூறுகையில்:
குற்றம் சாட்டப்பட்ட பெண்ணும், அவரது கணவர் தேவேந்திர ஜடானும் சேர்ந்த இந்த பாலியல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
 இந்த பாலியல் மோசடியின் தலைவனாக உள்ளூர் பாஜக தலைவர் ராம் சோனி என்பவர் இருப்பதும் தெரியவந்தது. அந்த பெண்ணை பயன்படுத்தி, பல தொழிலதிபர்களை பாலியல் வலையில் சிக்க வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

 தற்போது இவ்வழக்கில் தொடர்புடை பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். வீட்டு பல்பின் ஹோல்டரில் மறைத்து வைக்கப்பட்ட கேமராவை ெகாண்டு, ஆபாச வீடியோக்களை பதிவு செய்துள்ளனர். 

அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்து ஆபாசமான டிவிடிகள், கேமராக்கள், மடிக்கணினிகள், பிற உபகரணங்கள் மீட்கப்பட்டன’ 
-----------------------------------------

காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வடக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

வட தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.


 இந்நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி வடக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 அதனை தொடர்ந்து அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 

நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகப்பட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 3 நாட்களுக்கு தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

 இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

-------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?