வரலாற்று சோகம்.

 மணிப்பூரில் வன்முறையை ஒடுக்க மூத்த காவல் கண்காணிப்பாளராக ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி  நெக்டர் சஞ்சென்பம்   நியமனம்.

ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் தொடர்ச்சியாக 11 இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றி-அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 எம்எல்ஏ தொகுதியில் இன்று இடைத்தேர்தல்.

சனாதனம் குறித்து பேசிய விவகாரம் என் தலை சீவ ரூ.10 கோடி எதற்கு? பத்து ரூபாய் சீப்பு போதும்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி.

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!!

2021-22ம் நிதியாண்டில் பாஜ சொத்து மதிப்பு ரூ.6,047 கோடி: ஒரே ஆண்டில் ரூ.1,057 கோடி அதிகரிப்பு.





-----------------------------------

விடுதலைப் போராட்ட வீர்ர் 

வ. உ. சிதம்பரம்பரனார்  பிறந்ததினம் இன்று.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரத்தில் 1872 செப்டம்பர் 6 ஆம் நாள் உலகநாதம்-பரமாயி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் சிதம்பரனார்.

இளமையில், பாளையங்கோட்டையிலுள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் படித்து, பிறகு சட்டப் படிப்பிலும் தேர்ச்சி பெற்று, ஓட்டப்பிடாரத்தில் வழக்கறிஞராக ஆனார்.

 அப்போது அவருடைய தந்தையும் வழக்கறிஞராக இருந்தார். சில வழக்குகளில் தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் எதிர்த்து வழக்காடியுள்ளனர்.

வள்ளியம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்தார், சிதம்பரனார். ஆனால், மணமான ஐந்து ஆண்டுகளிலேயே வள்ளியம்மாள் மரணம் அடைந்தார். 

பிறகு மீனாட்சி என்ற பெண்ணை, சிதம்பரனாருக்குத் திருமணம் செய்து வைத்தனர்.

பாண்டிய, சோழ மன்னர்கள் காலத்தில் தமிழர்கள், ஏழு கடலிலும் கப்பல்களைச் செலுத்தும் உரிமை கொண்டிருந்தனர். பிறகு, ஆங்கிலேயர் அந்த உரிமையைப் பறித்துக் கொண்டனர்.

அந்த எண்ணம் சிதம்பரனார் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது அதனால் விடுதலைப் போரில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். 

அவரது வீர முழக்கம் நாடு முழுவதும் பரவி, மக்கள் உள்ளங்களில் சுதந்திரக் கனலை மூட்டியது! திரள் திரளாக மக்கள் அவரைப் பின்பற்றத் தொடங்கினர். 

வெள்ளையர் ஆளுமையின் ஆணிவேர், வெள்ளை இன வியாபாரிகளே என்பதை உணர்ந்த சிதம்பரனார், அவர்களுக்குப் போட்டியாக தானும் வணிவு கப்பல் கம்பெனியைத் துவங்க எண்ணினார். 

அப்போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்தை 'பிரிட்டிஷ் இந்தியா நாவிகேஷன் கம்பெனி என்ற ஆங்கிலேய நிறுவனம் தடத்திக் கொண்டிருந்தது வஉசி 1906-ஆம் ஆண்டு சுதேசிக் கப்பல் நிறுவனம்' என்ற பெயரி தூத்துக்குடியில் தொடங்கினார்.

துவக்கத்தில் உள்ளூர் வர்த்தகர்கள் சிவர் அவருக்குப் பண உதவி செய்தனர். 

பின்னர், இந்தியா முழுவதிலும் உள்ள வர்த்தகர்களின் ஆதரவும் அவருக்கும் கிடைத்தது.

எஸ்.எஸ். வாவோ, எஸ்.எஸ். காலியோ என்னும் இரண்டு கப்பல்களை வாங்கினார் சிதம்பரனார். 

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் சப்பல் போக்குவரத்தைத் தொடங்கினார்.

வ.உ.சி.யின் சுதேசி நிறுவனத்தால் வெள்ளையரின் கப்பல் வர்த்தகம் இழப்புக்குள்ளாகியது. 

இதனால் கப்பல் கட்டணங்களைப் பற முற்பட்டனர். இறுதியில், பயணிகளை கட்டணமின்றி இலவசமாக ஏற்றிச் செல்லுவதாகவும் அறிவித்தனர். ஆனால், எவ்வனவு நாளைக்குத்தான் இலவச மாக அழைத்துச் செல்ல முடியும்? அதனால் சிதம்பரனாரைத் தங்கள் பக்கம் இழுக்க அவருக்குப் பெருந்தொகை அளிக்கக்கூட முயன்று பார்த்தனர். வடீசி அவர்களிடம் விலை போகவில்லை.

சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் தொடக்கம். பொருளாதாரத் துறையில் சுதந்திரம் பெற இந்தியா எடுக்கும் முதல் முயற்சி என்று வெள்ளை அதிகாரிகள் அச்சம் கொண்டனர். 

ஆகவே இதற்கு மூல காரணமாக இருக்கும் சிதம்பரனான சிறையில் அடைத்தனர்.

அவர் மீது ராஜ துரோகக் குற்றம் சுமத் தப்பட்டு வழக்கின் இறுதியில் (1908) சிதம் பரனாருக்கு ராஜ துரோகக் குற்றத்திற்காகவும் துணையாக இருந்ததற்காக சுப்பிரமணிய சிவாவுக்கும் இரட்டை ஆயுள் தண்டனை இருபதும் இருபதும் நாற்பது ஆண்டுகள்) ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

 சிவாவுக்குப் பத்து ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது.

சிதம்பரனாருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பைக் கேட்டதும் மக்கள் கதறி அழுதனர். அப்போது, இந்தியாவுக்கு அமைச்சராக இருந்த மர்லி என்பவர். 'இந்தக் தண்டனை நியாயமற்றது' என சொல்லி வாதமிட்டார்.

அப்போது, இந்தியாவுக்கு அமைச்சராக இருந்த மர்லி என்பவர். 'இந்தக் தண்டனை நியாயமற்றது' என்று குறிப்பிட்டார். பின்னர் சென்னை உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்ததன் பயனாக தண்டனை பத்து ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. 

பின்னர், லண்டன் பிரிவு கவுன்சிலில் மேல் முறையீடு செய்ததால் ஆறு ஆண்டுகளாகத் தீர்ப்பானது. 

சிறையில் இருந்து வெளியே வந்து சிதம்பரனார் மீண்டும் வழக்கறி தொழிலையே மேற்கொண்டார். 

இலக்கியப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். அவரது மறைவுக்கு பிறகு தூத்துக்குடியில் அவர் பெயரில் வ.உ.சி. கல்லூரி திறக்கப்பட்டது.

ஆனால் வ.உ.சி,யின் விடுமலைக்கானப் போரின் செயல்பாடுகளும்,அளப்பரிய தியாகமும் வட இந்திய காங்கிரஸ் தலைவர்களால்,மோ.க.காந்தி,வுசி தனது ஙழிகாட்டியாக எண்ணிய திலகர் போன்றவர்களால் திட்டமிட்டே புறந்தள்ளப்பட்டு மறைக்கப் பட்டது பெரும் வரலாற்று சோகம்.

வெள்ளையனுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி விடுதலைநாகி அவர்களிடமிருந்தே ஓய்வூதியம் பெற்ற சவார்க்காரையே விடுதலை வீர்ராக மாற்ற சிலர் முயற்சியில் உண்மை தியாகங்கள் மறக்கப்படுவது வேதனை.

--------------------------------------

தலையை சீவ 10 கோடியா?

 செப்டம்பர் 3ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது “இந்த மாநாட்டின் தலைப்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள். 

சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும்; எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதைஎல்லாம் நாம் எதிர்க்க கூடாது ஒழித்துக் கட்ட வேண்டும்..

அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்பது சமத்துவத்திற்கு சமூகநீதிக்கும் எதிரானது” என கூறி இருந்தார்.

சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு எதிராக பாஜகவினர் தேசிய அளவில் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்

உதயநிதி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி.நட்டா ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

பாஜகவினரின் கண்டனத்திற்கு பதில் அளித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், ”ஒட்டுமொத்த இந்தியாவும் சனாதனம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறது. இன்னமும் பேச வேண்டும்.

நான் முன்பே சொன்னது போல் நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது. Genocide (இன அழிப்பு) என நான் சொன்னதாக சிலர் கூறுகிறார்கள்.

 சனாதனம் என்ற கோட்பாட்டை ஒழிக்க வேண்டும் என்றுதான் பேசினேன். இனிமேலும் அப்படிதான் பேசுவேன். எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக உள்ளேன்.

திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள் சிலர். அதற்கு திமுகவினரை கொலை செய்வதாக அர்த்தமா? பிரதமர் மோடி, ‘காங்கிரஸ் முக்த் பாரத் (காங்கிரஸ் இல்லாத இந்தியா)’ என்கிறார். 

அப்படி என்றால் காங்கிரஸ்காரர்களை பிடித்து கொல்லப்போகிறீர்களா?

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே திராவிடக் கொள்கை. முன்பு பெண்கள் படிக்க கூடாது. பல ஆண்டுகளுக்கு முன்பு மேலாடை அணியக் கூடாது. கோயிலுக்கு செல்லக்கூடாது என்கிறார்கள். இதையெல்லாம் மாற்றியதே திராவிட மாடல். இந்தியா கூட்டணி கூட்டம் வெற்றி அடைந்தது அவர்களை ரொம்ப தடுமாற்றம் அடைய வைத்துள்ளது.

இந்தியா கூட்டணி வலுப்பெற்றுள்ளதை திசைத்திருப்பவே பாஜகவினர் வேண்டுமென்றே போலிச் செய்தி பரப்புகின்றனர் என்றார்.

அயோத்தியில் உள்ள மடத்தில் உதயநிதி ஸ்டாலினின் படத்தை கத்தியால் குத்தியும், தீயால் எரித்தும் ஆச்சார்யா சாமியார் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை கொண்டு வந்தால் 10 கோடி வழங்கப்படும் என அயோத்தி சாமியார் பரஹம்ச ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் ஒழிப்பு குறித்து மீண்டும் மீண்டும் பேசுவேன். நான் இது பற்றி பேசினால் பலர் வயிறு எரிவார்கள் என்பதை நான் ஏற்கெனவே பேசி இருந்தேன். பெண்கள் படிக்க கூடாது என சொன்னார்கள், ஆனால் பெண்களை படிக்க பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

என்தலையை சீவ 10 ரூபாய் சீப்பே போதும்.10 கோடி ரூபாய் தேவையில்லை” எனக்  கூறினார்.

---------------------------------

குடும்ப அரசியல்,ஊழல்ன்னா என்னங்க?


மோடி ஜி - யின், குடும்பத்தைப் பற்றி தேடி கண்டடைந்த சில சுவாரஸ்யமான தகவல்கள்..!!

1.சோமாபாய் மோடி (75 வயது) ஓய்வு பெற்றமாநில சுகாதார துறை அதிகாரி - தற்போது குஜராத்தில் மாநில பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர்.!.

2.அமிர்தபாய் மோடி (72 வயது) முன்பு ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர், தற்போது அகமதாபாத் மற்றும் காந்திநகரில், மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர்.!.

3.பிரஹ்லாத் மோடி (64 வயது) ஒரு ரேஷன் கடை வைத்திருந்தவர், தற்போது இவர் வசம் ஹூண்டாய், மாருதி மற்றும் ஹோண்டா ஃபோர் வீலர், ஷோ ரூம்கள் வதோதரா மற்றும் அகமதாபாத்தில் உள்ளன.!.

4.பங்கஜ் மோடி (58 வயது) முன்னதாக மாநில தகவல் துறையில் வேலை செய்தவர். இன்று சோமா பாய் உடன் மாநில பணியாளர் தேர்வாணையத்திற்கு, துணைத் தலைவராக உள்ளார்.!

_மேலே உள்ள, நால்வரும் மோடியின் உடன் பிறந்த சகோதரர்கள்.!._

5.போகிலால் மோடி (67 வயது) முன்னாள் மளிகைக் கடையின் உரிமையாளர். இன்று அகமதாபாத், சூரத் மற்றும் வதோதராவில் உள்ள... ரிலையன்ஸ் மாலின் உரிமையாளர்.!.

6.அரவிந்த் மோடி (64 வயது) முன்பு ஒரு காயலான் கடை உரிமையாளர். இப்போது ரியல் எஸ்டேட் மற்றும் பெரிய கட்டுமான நிறுவனங்களுக்கு எஃகு சப்ளை செய்யும் ஒப்பந்தக்காரர்.!.

7.பாரத் மோடி (55 வயது) ஒரு பெட்ரோல் பம்பில் வேலை செய்து கொண்டிருந்தார். இன்று அகமதாபாத்தில் அகியராஸ் பெட்ரோல் பம்ப்பின் ஓனர்.!.

8.அசோக் மோடி (51 வயது) மளிகை கடை வைத்திருந்தவர். இன்று அவர் ரிலையன்ஸ் நிறுவனத்தில், போகிலால் மோடியுடன் பங்குதாரராக உள்ளார்.!.

9.சந்திரகாந்த் மோடி (48 வயது) ஒரு கௌசாலாவில் மாடு போடும் சாணி பொறுக்கும் பணிபுரிந்து வந்தார். இன்று அவருக்கு சொந்தமாக காந்திநகர் மற்றும் அகமதாபாத்தில் ஒன்பது பெரிய பால் உற்பத்தி மையங்கள் உள்ளன.!.

_மேலே குறிப்பிட்டுள்ள, ஐந்து பேரும், மோடியின் பங்காளிகள்.!.._

10.ஆசிரியராகப் பணிபுரிந்த ரமேஷ் மோடி (57 வயது), இன்று ஐந்து பள்ளிகள், 3 பொறியியல் கல்லூரிகள், ஆயுர்வேதம், ஹோமியோபதி, பிசியோதெரபி கல்லூரிகள்... மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஏக போக முதலாளி.!.இவர், மோடியின் மாமா மகன்.!._

11.மாநில கல்வி மையத்தில் பணிபுரிந்த பார்கவா மோடி (44 வயது) மேலே குறிப்பிட்ட ரமேஷ் மோடியின் நிறுவனங்களில் முக்கியமான பங்குதாரர்.!.சொந்த இளைய மாமா, ஜயந்திலால் மோடியின் பிள்ளைகள்.!._

12.பிபின் மோடி (42 வயது) அகமதாபாத் நூலகத்தில் பணிபுரிந்தவர். இன்று எல்.கே.ஜி முதல் பன்னிரண்டு வகுப்பு வரையிலான பள்ளி புத்தகங்களை வழங்கும் புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் முக்கிய பங்குதாரர்.!.

_மேலே உள்ள இருவரும், பிரதமர் மோடியின் நெருங்கிய உறவினர்கள்.

இந்திய நடுநிலை நக்கி மீடியாக்களின், ஆக பச்சையான அயோக்கியத்தனம்,புரோக்கர்தனம் இதுதான். 

மோடியின் உறவினர்கள், பற்றி இது வரை அவர்கள் வாய் திறந்தது கிடையாது. கேவலத்திலும் கேவலமாக, ஆட்டோவில் செல்லும் மோடியின் சகோதரர் என்று செய்தி வெளியிட்டு மக்களை ஏமாற்றி சுய இன்பம் அடைவார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் மில்லியனர்கள் மற்றும் சிலர் பில்லியனர்கள்.

காலம் மாறி விட்டது. அவர்கள் மறைக்க நினைத்ததை சோசியல் மீடியா நிச்சயம் ஒரு நாள் வெளிக்கொண்டு வரும்.!


------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?