பாரத் ஆகும் இந்தியா!

 சங்ககிரி அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் 1 வயது குழந்தை உட்பட, 6 பேர் பலி.

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.

எண்ணெய் உற்பத்திக்கு கட்டுப்பாடு: ரஷியா - சவூதி அரேபியா அறிவிப்பு.

இந்தியா என்ற சொல்லே பாஜகவை மிரட்டுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம் - 9 ஆண்டுகளில் நாட்டின் பெயரை மட்டுமே மாற்ற முடிந்ததாகவும் விமர்சனம்

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்த்த வழக்கு.முதலமைச்சர்தான் முடிவு செய்ய வேண்டும்முடித்து வைத்த சென்னை உயர்நீதிமன்றம் -  .

மத்திய அமைச்சர் எல். முருகன்  மீதான முரசொலி அவதூறு வழக்கை கைவிட  முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் .

பரப்பன அக்ராஹா சிறையில் இருந்தபோதுமுறைகேடாக சலுகைகளை பெற காவல்துறையினருக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு - சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் .

ஜி20 உச்சி மாநாட்டிற்கான குடியரசு தலைவர் மாளிகை அழைப்பிதழில் இந்தியாவிற்கு பதிலாக பாரத் என அச்சிடப்பட்டதால் சர்ச்சை . ஏசியன் மாநாட்டிலும் பாரத பிரதமர் என அழைப்பிதழ்

இந்தியா என்பது பாஜகவின் தனிப்பட்ட சொத்து அல்ல என எதிர்க்கட்சிகள் ஆவேசம் . எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு பாரத் என பெயர் வைத்தால் நாட்டின் பெயரை பாஜக என மாற்றுவீர்களா என்றும் கேள்வி

பிரக்யான் ரோவர் எடுத்த 3டி புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ.

உத்தரபிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக தலைவர் - சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுமி.

பாட்னா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கல்வெட்டு ஒன்றை திறக்கும்போது நிலை தடுமாறி கீழே விழுந்த முதலமைச்சர் நிதிஷ் குமார்.

-----------------------------------------

"இந்தியா" கூட்டணியால் பயம்?

பாரத் ஆகும் இந்தியா!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக கட்சிகளை கூட்டணைகளை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கின. 

இதற்காக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் முதல் ஆலோசனைக் கூட்டம் ஜூன்-23இல் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஜூலை 17,18லும், மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1-ஆம் தேதியிலும் நடைபெற்றது.

இதில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில் நடந்த இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி (I.N.D.I.A) என பெயர் சூட்டப்பட்டது. 

எதிர்கட்சிகள் கூட்டணிக்கு I.N.D.I.A என பெயர் வைக்கப்பட்டதற்கு பலதரப்பில் இருந்து பாஜக எதிர்ப்பு தெரிவித்ததுடன், 26 கட்சிகள் மீது புகாரும் அளிக்கப்பட்டிருந்தது.

மேலும் எதிர்கட்சிகள் கூட்டணியை பாஜகவினரும் கடுமையாக விமர்ச்சித்தனர். பிரதமர் மோயும் பல மேடைகளில் பேசும் போது எதிர்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணியை கடுமையாக விமர்சித்து வந்தார். 

குறிப்பாக அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள, ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கெடுத்த திமுகவை குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்தார்.ஆனால் அக்கூட்டணியினர் பெயர் மாற்றவில்லை

இதனால்  இந்தியா என இருக்கும் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என பாஜக முடிவெடுத்தது.

இந்நிலையில் இந்தியா பெயர் சர்ச்சை ஓய்வதற்குள் தற்போது பாரத் (BHARAT) பெயர் சர்ச்சை துவங்கி உள்ளது. 

வருகின்ற 9ஆம் தேதி டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. 

அதில் பங்கேற்க வரும் சிறப்பு விருந்தினர்களுக்கு விருந்து அளிப்பதற்காக குடியரசுத் தலைவர் மாளிகை தரப்பில் தயார் செய்யப்பட்டுள்ள அழைப்பிதலால் தான் இந்த சர்ச்சை கிளம்பியுள்ளது.

வழக்கமாக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியாகும் அறிவிப்புகளில், இந்திய குடியரசுத் தலைவர் (President of India) என்று தான் குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால் ஜி20 மாநாடு சிறப்பு விருந்தினர்களுக்கான விருந்து அழைப்பிதழில் பாரத குடியரசுத் தலைவர் (President of Bharat) என குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது. 

இந்தியாவிற்கு பெயர் மாற்ற வேண்டும் என்ற பேச்சு எழுந்த போதே எதிர்ப்புகள் வலுத்த நிலையில், தற்போது குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியான அழைப்பிதழில் இந்தியாவிற்கு பதில் பாரத் என இடம் பெற்றிருந்ததுஇந்நிய அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது X சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். 

அவரது பதிவில், “பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு #INDIA என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது.

இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது. 

அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்!” என பதிவிட்டு உள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில், IPC, CPC மற்றும் இந்திய ஆதார சட்டம் இவைகளை பாரதிய நியாய சங்ஹித், பாரதிய சக்‌ஷியா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா என பெயர் மாற்றம் செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 

இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி இருந்தது.

இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்தியா என்னும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு பாரத் என அறிவிக்கப்படும் எனவும், அதனால் தான் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் கேள்வி நேரம் இன்றி நடைபெற உள்ளதாகவும் பல்வேறு எதிர்கட்சிகள் தெரிவித்து வருகின்றனர்.

--------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?