அதானியைக் காப்பாற்ற பாடுபடும் "செபி"

 அதானி குழுமத்திற்கு எதிரான வழக்கில், பல்வேறு ஆதாரங்களை, ஆவணங்களை உச்சநீதிமன்றத்தின் கண்களிலிருந்து, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் ‘செபி’ (SEBI) மறைப்பதாக பரபரப்புக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

அடுக்கடுக்கான குற்றச்சாட்டு அதானி குழும மோசடிகளை விசாரிக்கக் கோரி ஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ள  மனுதாரர்களில் ஒருவ ரான அனாமிகா ஜெய்ஸ்வால், உச்சநீதி மன்றத்தில் புதிதாக பிரமாணப் பத்திரம் ஒன்றைத்தாக்கல் செய்துள்ளார்.  

அதில், இதுதொடர்பான குற்றச்சாட்டுக்களை, ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளார். ஊடகங்களில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு அனாமிகா ஜெய்ஸ்வால் உச்சநீதிமன்றத்தில் புதிதாக பிரமாணப்  பத்திரம் ஒன்றை தாக்கல்செய்துள்ளார்.

வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அனுப்பிய கடிதம்'

அதில், அதானி குழுமத்தின் நிதி கையாளுதல்கள் குறித்து, 2014-ஆம் ஆண்டில் வருவாய் புலனாய்வு இயக்கு நரகம் (Directorate of Revenue Intelligence - DRI) விடுத்திருந்த எச்சரிக்கை உள்ளிட்ட பல தகவல்களை ‘செபி’ மறைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். 

கடந்த 2014-ஆம் ஆண்டு அப்போ தைய ‘செபி’ தலைவருக்கு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) கடிதம் ஒன்றை அனுப்பியது.  அந்தக்கடிதத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த துணை நிறுவனத்தில் இருந்து அதானி  குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள், ‘உண்மையான சந்தை விலைக்கு மாறாக, மின் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை அதிக விலைக்கு வாங்கியதாக கணக்கு காட்டியுள்ளது.

 இவ்வாறு மோசடியாக ஈட்டப்பட்ட பணம் மூலம் அதானி குழுமம் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம்’ என்று தெரிவித்திருந்தது.

ரூ.2,323 கோடி மோசடிக்கு ஆதாரம்

சந்தை விலைக்கு மாறாக, கருவி களை அதிக விலைக்கு வாங்கியதாக அதானி குழுமம் கணக்குக் காட்டிய குற்றச்சாட்டு குறித்த விசாரணை நடை பெற்றுக் கொண்டிருந்தபோது, இந்தக் கடிதம் அனுப்பியது. அதானி குழுமம், ரூ. 2 ஆயிரத்து  323 கோடி ரூபாய் மோசடி செய்ததற் கான ஆதாரங்கள் மற்றும் டிஆர்ஐ  விசாரித்து வரும் வழக்கு  குறித்த குறிப்புகள் அடங்கிய  சிடி-யையும் கடிதத்துடன் இணைத்திருந்தது.

 ஆனால், ‘செபி’ இந்த தகவலை கமுக்க மாக மறைத்துவிட்டது. டிஆர்ஐ எச்சரிக் கையின் அடிப்படையில் விசாரணை யையும் நடத்தவில்லை.

உச்சநீதிமன்றத்தின் பார்வையிலிருந்து மறைப்பு

தற்போது, மதிப்புமிக்க உச்ச  நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கை யிலும், வருவாய் புலனாய்வு இயக்கு நரகத்தின் (DRI) கடிதம், ரசீது ஆகி யவை குறித்த ஆவணங்களை மறைத் துள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது. இது உண்மைகளை நசுக்குகிறது. 

பொய் யான தகவல்களை வழங்குகிறது. பொய் சாட்சியம் அளிக்கிறது.

என்டிடிவி இயக்குநரான ‘செபி’ இயக்குநர்

2014-ஆம் ஆண்டு ‘செபி’ இயக்குந ராக இருந்த யு.கே. சின்ஹா, 2022-ஆம் ஆண்டு அதானி குழுமத்தால் கையகப் படுத்தப்பட்ட ‘என்டிடிவி’-யின் செயல் அல்லாத இயக்குநராக உள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

அதானி குழுமத்திற்கு எதிரான ‘ஹிண்டன்பர்க்’ அறிக்கையின் அடிப்படையில் எழும் 24 விசாரணை களில், 22 இறுதியானவை மற்றும் இரண்டு இடைக்காலத் தன்மை கொண்டவை என்று தனது நிலை  அறிக்கையை ‘செபி’ சமர்ப்பித்துள் ளது. 

எவ்வாறாயினும், இந்த விசார ணைகள் எதிலும் ‘செபி’ கண்டு பிடிப்புகளை வெளியிடவில்லை.

ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை மூடிமறைக்க முயற்சி

பத்திர ஒப்பந்தங்கள் (ஒழுங்கு முறை) விதிகள் 1957-இன் விதி 19ஏ  மீறல் தொடர்பான முதல் விசாரணை யின் காலம் 2016 முதல் 2020 வரை  என்று  குறிப்பிடப்பட்டு உள்ளது. இது அக்டோபர் 2020 முதல் வெளியீடு வரையிலான முழு காலப்பகுதியையும் குறிக்கிறது. 

அதாவது, 2023 ஜன வரியில் வெளியான ‘ஹிண்டன்பர்க்’ அறிக்கையை, ‘செபி’ அமைப்பானது, விசாரணையின் எல்லைக்கு வெளியே வைக்கிறது.  ‘செபி’ விசாரணையானது 13  வெளிநாட்டு நிறுவனங்களை உள்ள டக்கியதாகக் குறிப்பிடப்பட்டு உள் ளது. 

இதில் 12 வெளிநாட்டு போர்ட் போலியோ முதலீட்டு நிறுவனங்கள், குறைவாக வரி விதிக்கும் நாடு களின் அதிகார வரம்புகளில் அமைந்து ள்ளதால், அதன் மூலம் பங்குதாரர்கள் அடைந்த பொருளாதார நலன்களை ‘செபி’யால் நிறுவ முடியவில்லை. 

அதானிக்கு சாதகமாக விதிமுறைகளை மாற்றிய ‘செபி’

மேலும், அதானி குழுமத்திற்கு பலன் அளிக்கும் வகையில், பங்குச் சந்தை சார்ந்த ஒழுங்குமுறை விதி களை ‘செபி’ தொடர்ந்து மாற்றியமை த்துள்ளது. 

இந்தத் திருத்தங்கள் அதானி குழுமத்தை முறைகேடு குற்றச்சாட்டி லிருந்து பாதுகாக்கும் கவசங்களாக இருந்துள்ளன.  1. பங்குச் சந்தையில் நியமிக்கப் பட்ட முதலீட்டு பங்கேற்பாளர்கள், வெளிநாட்டு போர்ட்போலியோ முத லீட்டாளர்கள் ரகசிய கட்டமைப்பு களைக் கொண்டிருக்கவில்லை என் பதை உறுதிப்படுத்தக் கடமைப்பட்டு ள்ளனர் என்பது விதிமுறையாகும். 

இது 2018-இல் ‘செபி’யால் திருத்தப்பட்டது. ரகசிய அமைப்பை கொண்டிருக்கக் கூடாது என்ற நிபந்தனை முற்றிலுமாக நீக்கப்பட்டது. பின்னர், 2002-இல் கொண்டுவரப்பட்ட பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act) அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று மட்டும் குறிப்பிடப்பட்டது. 2

. அதேபோல பட்டியலிடும் கடமை கள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைக் கான (Listing Obligations and  Disclosure Requirement) நிறுவனச் சட்டத்தின் பிரிவு 2(76) இன் கீழ் குறிப்பிடப் பட்ட அதே அர்த்தத்தை ‘தொடர்பு டைய தரப்பு’ என்று வரையறுத்துள் ளது. ஆனால், ‘தொடர்புடைய தரப்பு’ என்பதன் வரையறை 2018-இல் செபி- யால் திருத்தப்பட்டது.

 பட்டியலிடப் பட்ட நிறுவனத்தின் விளம்பரதாரர், குழு வின் உறுப்பினர் அல்லது நிறுவனத்தில் அந்த நபரின் பங்கு குறைந்தது 20 சத விகிதமாக இருந்தால் மட்டுமே, அந்த  நபர் தொடர்புடைய தரப்பாக கருதப்படு வார் என்று மாற்றியது.

 இதன்மூலம் அதானி குழுமத்தின் ஒழுங்குமுறை மீறல்கள் மற்றும் மோசடிகள் வெளிச்சத்திற்கு வராமல் பார்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. 

இவ்வாறு மோடி அரசின் கட்டுப் பாட்டிலுள்ள ‘செபி’ அமைப்பானது, அதானியை காப்பாற்ற செய்துவரும் பகீரத பிரயத்னங்களை, அனாமிகா ஜெய்ஸ்வால் விலாவாரியாக குறிப்பி ட்டு அம்பலப்படுத்தியுள்ளார்.

------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?