குஜராத் ரெயில் எரிப்பு போல
ராமர் கோவில் திறப்பு விழாவிலும் கலவரம்.
உத்தவ் தாக்கரே தகவல்
2002ஆம் ஆண்டில் பிப்ரவரி 27ஆம் தேதி அயோத்தியிலிருந்து கர சேவகர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் தீவைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து குஜராத் முழுக்க மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டது.
இதில் மாநிலம் முழுக்க பல நூறு பேர் உயிரிழந்தனர்.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் கட்டுக்குள் வர சில வாரங்கள் வரை ஆனது. இந்தியாவில் ஏற்பட்ட மிக மோசமான வன்முறைச் சம்பவங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்க வாய்ப்புள்ளதாக உத்தவ் தாக்ரே கூறியுள்ளது. முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் இது குறித்து மேலும் கூறுகையில், "ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து பேருந்துகள் மற்றும் லாரிகளில் ஏராளமான மக்களை அரசை அழைத்து வர வாய்ப்பு உள்ளது.
அப்போது அவர்கள் திரும்பச் செல்லும் போது கோத்ராவில் நடந்ததைப் போன்ற ஒரு சம்பவம் நிகழலாம்.அதற்கான திட்டங்கள் தீட்டப் படுவதாகத் தெரிகிறது. என்று என்று அவர் தெரிவித்தார்.
அடுத்தாண்டு மே மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக 2024 ஜனவரியில் ராமர் கோயில் திறக்க திட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு மக்களை கவர்ந்திழுக்கும் தலைவர்கள் அவர்களிடம் இல்லை.
இதன் காரணமாகவே சர்தார் படேல் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்ற ஜாம்பவான்களை அவர்கள் விழுங்கினார்கள்.
அப்படித்தான் இப்போது அவர்கள் பால்தாக்கரேவுக்கும் உரிமை கோர முயல்கின்றனர்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸுக்கு சொந்தமாக எந்தவொரு சாதனையும் இல்லை.
சர்தார் படேலுக்கு அவ்வளவு பெரிய சிலை வைப்பது முக்கியம் அவசியமே இல்லை.
அவர் செய்தது போலச் சாதனைகளைச் செய்வது தான் முக்கியம்.
. சர்தார் படேல் செய்த சாதனைகள் அருகில் கூட ஆர்எஸ்எஸ்- பாஜகவால் வர முடியாது" என்று அவர் கடுமையாகச் சாடினார்.
பாஜகவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் தாங்கள் தான் பால்தாக்கரேவின் இந்துத்துவாவை பின்பற்றுவதாகத் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே நேற்று நடந்த கூட்டத்தில் உத்தவ் தாக்கரே இந்த கருத்துகளைத் தெரிவித்தார்.
--------------------------------------------