அரசியலமைப்புச்சட்டம்- மனுநீதிச் சட்டம்.

 முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை  இன்று மாநிலக்கல்லூரி வளாகத்தில் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.'சமூகநீதி காவலர்'வி.பி.சிங் மனைவி சீதா குமாரி,உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ்  கலந்துகொள்கிறார்கள்.

இலங்கை தமிழர்கள் 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வருகை .

ஒரு பாடப்பிரிவில் 240 மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும் என தற்போதுள்ள #நிபந்தனையை தளர்த்த முடிவு .

டிஎன்பிஎஸ்சி சார்பில் 15,000 காலிப் பணியிடங்கள் நிரப்ப ஓராண்டு கால தேர்வு அட்டவணை. டிசம்பர் 2வது வாரம் வெளியீடு.

தமிழகத்தில் நாளை நடக்க இருந்த பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு கைவிடல்.

ஆண்டு வருமானம் ரூ.1.8 லட்சம் உள்ளகுடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இலவசக் கல்வி. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

Google Pay, Paytm இந்த இலவச சேவையை நிறுத்திவிட்டது. இனிமேல் கட்டணம் செலுத்த வேண்டும்.

“மாவட்ட எல்லையை காரணம் காட்டி இறப்புச் சான்றிதழ் விண்ணப்பத்தை நிராகரிக்கக் கூடாது” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அறிவிப்பு.


அமைச்சர்"உதயநிதி ஸ்டாலின்" பிறந்தநாள் இன்று.


அரசியலமைப்புச்சட்டம்- மனுநீதிச் சட்டம்.

இந்திய அரசமைப்பு தின நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமை பெறவில்லை என்று கூறியுள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் காலத்திற்கேற்ப திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 


ஜனநா யகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், அதிகாரத்தை கடைகோடி மக்கள் கொண்டு  செல்லும் வரையிலும் இன்னும் தேவையானால் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். 

ஆளுநர் ரவி விரும்புகிற திருத்தம் அதுவல்ல. ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்திய அர சமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது இதில் மனுநீதி முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. 

எனவே இது முழுமையானதல்ல என்று விமர்சித்தது. அதே கருத்தைத்தான் ஆளுநர் ரவி சற்று மாற்றி இப்போது கூறியுள்ளார். 

நிலம், மொழி என்று பிரிந்துள்ளோம். நம்மிடையே பல்வேறு பிரிவினைகள் உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

மொழிவழி மாநிலங்கள் என்ற கருத்தியலை ஆர்எஸ்எஸ் அமைப்பு ஏற்கவில்லை.

 அதிகாரங்கள் அனைத்தும் குவிக்கப்பட்ட ஒன்றிய அரசு என்பதுதான் அவர்களது விருப்பம். 

ஆனால் விடுதலைப் போராட்டத்தின் விளைச்சலாக மொழிவழி மாநிலங்கள் என்ற முழக்கம் முன்வந்து நாடு விடுதலைப்பெற்ற போது, மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 

அதைத்தான் இப்போது பிரிவினை என்கிறார் ஆளுநர். மக்களால் தேர்வு செய்யப் பட்ட மாநில அரசுகளுக்கு அதிகபட்ச தொல்லை தருவது என்பதே பாஜக ஆட்சியால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் குறைந்தபட்ச செயல்திட்டமாக உள்ளது. 

இதனால்  கூட்டாட்சி தத்துவத்திற்கு குழிதோண்டப்படு கிறது. அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப் பட்ட நீதித்துறையின் உச்சபட்ச அமைப்பான உச்சநீதிமன்றம் பலமுறை ஆளுநர்களின் அத்து மீறல்களை  கண்டித்துள்ளது.

 ஆனாலும் கூட ஆர்.என்.ரவி உள்ளிட்டவர்கள் அரசமைப்புச் சட்டத்தையோ, உச்சநீதிமன்றத்தின் அறி வுறுத்தல்களையோ மதிப்பதாக இல்லை. 

அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசிடம் குவிக்க வேண்டும். மொழி, இனம் என்ற அடையாளங்களை அழிக்க வேண்டும் என்ற கருத்திலேதான் ஆளுநர் ரவி இப்போது அரசமைப்புச் சட்டம் முழுமைபெறவில்லை என முனங்குகிறார். 

மறுபுறத்தில் பாஜக தலைவர் அண்ணா மலை மொழி எனும் பூட்டை உடைத்து வெளியே வாருங்கள் என்று கூவுகிறார். பல்வேறு மொழி கள் பேசப்படும் இந்தியாவில் சமஸ்கிருதம், இந்தி என்ற இருமொழிகளை மட்டும் திணிப்பதன் மூலம் இந்திய மக்களை கூண்டுக்குள் அடைக்க முயல்வது ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம்தான். கூட்டை இழந்து கூண்டுக்குள் வாருங்கள் என்று  இவர் அழைப்பது கேலிக்கூத்தானது. ஆர்யன் ரவி, அண்ணாமலை போன்றவர்களிடம் தமிழ் நாடு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

---------------------------------------- 


முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் முழு உருவச் சிலையை இன்று நவ. 27 அவருடைய நினைவு நாளில் சென்னையில் மாநிலக் கல்லூரி வளாகத்தில் திறந்துவைக்கிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதிக்கும், முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கும் இடையே இருந்த நட்பைப் போற்றும் விதமாகவும் இவ்விழா நடைபெறுகிறது.

தமிழர்களை தனது ரத்த சொந்தங்களாக கருதியவர், பெரியாரைத் தன் தலைவர் என்று சூளுரைத்தவர், காவிரி நதிநீர் ஆணையம், மண்டல் கமிஷன் என மறக்க முடியாத நிகழ்வுகளுக்குரிய மாமனிதர், கருணாநிதியால் மண்டல் கமிஷன் நாயகன் என்று புகழப்பட்டவர் மறைந்த முன்னாள் பிரதமர் விசுவநாத் பிரதாப் சிங்.

அவர், பிரதமராக பதவி வகித்த காலத்தில் கட்சி பேதமின்றி அனைத்து மாநில அரசியல் கட்சிகளாலும் விரும்பப்பட்டவர். 


1980ல் உத்தரப் பிரதேச மாநில முதல்வர்,  1984ல் மத்தியில் வர்த்தகம், வெளியுறவு, நிதி, பாதுகாப்பு என முக்கிய துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்தவர் வி.பி.சிங். நிதித் துறையில் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வந்த இவரை அப்பதவியில் இருந்து அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி நீக்கி விட்டு பாதுகாப்பு துறையை வழங்கினார்.


 அதிலும் தடம் பதித்த நிலையில் அப்பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிய அவர் ஜனமோர்ச்சா என்ற கட்சியைத் தொடங்கி மாநில கட்சிகளான திமுக, அசாம் கண பரிஷத், தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை இணைத்து தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி 1989-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மை இடங்களைப் பெற்று இந்தியாவின் 8-வது பிரதமராக ஆனார். அவர் பிரதமராக இருந்தது 11 மாதங்கள்தான் என்றபோதிலும், அக்காலகட்டத்தில் அவர் செய்த சாதனைகள் மெச்சத்தக்கவை.

10 வருடங்களுக்கு பிறகு ஜனதா கட்சியின் நீட்சியாக மாறிய ஜனதா தள மத்திய ஆட்சியில் வி.பி.சிங் தலைமையில் 1990ல் மண்டல் கமிஷன் பரிந்துரை உயிர்பெற்றது. 


தேசிய அளவில் சமூக நீதி தொடர்புடைய கருத்துகளையும், பிரச்னைகளையும் முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்து மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்தார்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பொதுத் துறை அமைப்புகள், மத்திய அரசு சார்ந்த வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட சதவிகித இடங்களை ஒதுக்கீடு செய்ய மண்டல் கமிஷன் பரிந்துரைத்தது.

இந்த மண்டல் கமிஷன் இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பு திட்டம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சலுகையாகவும் சாதகமாகவும் இருந்தாலும் உயர் சாதியினருக்கு இந்த இட ஒதுக்கீட்டில் எந்த பலனும் இல்லை என்ற நிலையில் எதிர்ப்பு கிளம்பியது. வட இந்தியாவில் நகர்ப்புறங்களில் போராட்டங்களும் கலவரங்களும் நடைபெற்றன.

மேலும், மண்டல் கமிஷன் இட ஒதுக்கீடு திட்டத்தை வி. பி. சிங் அமல்படுத்த முற்பட்டால் ஆதரவு விலக்கிக் கொள்ளப்படும் என்று கூட்டணியில் இருந்து ஆதரவு கொடுத்து வந்த அன்றைய பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான அத்வானி எச்சரிக்கை விடுத்தார்.


மேலும், இத் திட்டத்தை அமல்படுத்த கூடாது என்று வட இந்தியாவில் பல கலவரங்களும், தீக்குளிப்பு உயிர்ப் பலி போராட்டங்களும் நடந்தேறின. இதனால், வி.பி.சிங் ஆட்சியைப் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்தனர். இது பெரும் சிக்கலை அவருக்கு உருவாக்கியது.

அதோடு மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தியதாலும், 

அப்போது வட இந்தியாவில் நடந்த ராமர் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தி அத்வானி கைது செய்யப்பட்டதாலும் ஜனதா தளம் ஆட்சிக்கு பாஜக அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டதால் வி.பி.சிங் பிரதமர் பதவியை இழந்து ஜனதா தளம் ஆட்சி கவிழ்ந்தது.


தொடர்ந்து இட ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் 1992-ம் ஆண்டு நவம்பர் மாதம் மண்டல் கமிஷன் உத்தரவு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கிரீமி லேயர் முறையில் தீர்ப்பு வழங்கியபோது, இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது, பல்லாண்டுகளாக ஒன்றிய அரசாங்கம் தொடர்புடைய வேலைகளை சுரண்டி வந்தவர்களுக்கு இந்த தீர்ப்பு பெரும் சவுக்கடி என்று கூறிய அவர், தனது முயற்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டார்.

ஆனால் இன்று விபி.சிங்,கலைஞர் செய்த பணிகளால்,தியாகத்தால் பலன் பெரும் பிற்பட்ட மக்களுக்கே தாங்கள் இன்று யாரால் அரசுப்பணிகள்,உரிதைகளைப் பெற்றோம்.யார் நமக்கு எதிராகப் போராடினார்கள் என்ற அறிவே கொஞ்சமும் இல்லாமல் தங்களுக்கு எதிரானகப் போராடியவர்களுக்கே பல்லக்கு தூக்கி அலைவது நகைமுரண்.


மண்டல் கமிஷன் நாயகன் வி.பி.சிங் என கலைஞரால் அப்போது புகழப்பட்டார். 


இந்த நிலையில் ரத்த புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு ஆகியவற்றால் 17 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த வி.பி.சிங், கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று தில்லியில் காலமானார்.


சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் அச்சமூகத்துக்கு அரசு பணியிடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தியவர்.


மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியைத் தனது சொந்த சகோதரர் போல மதித்த வி.பி. சிங்கின் புகழைப் போற்றும் வகையில் மகன் முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் சிலை திறப்பது பொருத்தமான ஒன்றே.


பிரதமர் என்ற பதவிக்கு பொருத்தமானவராக விளங்கிய வி.பி. சிங்கிற்குத் தமிழ் சமுதாயத்தின் நன்றியை தெரிவிக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முழு உருவச் சிலை திறப்பு விழா நாளை நடைபெறுகிறது.


தமிழ் நாட்டிலும் ஏன் இந்தியாவிலும் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் பிற்படுத்தப் பட்ட மக்கள் தங்கள் பழைய நிலையை மறந்து திரிந்து தங்கள் விரோதிகளுக்கே ஆரவாகச் செயல்படும் காலத்தில்  இச்சிலை திறப்பு விழா என்பது பொருத்தமான ஒன்று ,சமூகநீதி போராட்டம் ஏன் நடந்த்து,எப்படிபட்ட இன்னல்களை நம் சமூகநீதிக்காகப் போடியதலைவர்கள் எதிர் கொள்ள  வேண்டியதிருந்தது என்பது விபி.சிங் சிலை நினைவூட்டும் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?