நாங்கள் காரணம் இல்லை
கனமழை பொழிவதால் டெல்லிக்கு வந்த 16 விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
உத்தரப்பிரதேச மௌதாஹா கோட்வாலி நகரைச் சேர்ந்தவர் முஹம்மது ஷாஹித். எல்லைப் பாதுகாப்பு படை(பிஎஸ்எஃப்) வீரரான இவர் வீட்டில் முன் பட்டாசு வெடித்தவர்களை கண்டித்ததால் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 22 பேர் மீது வழக்குப் பதிவு. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.
சீனாவில் பரவும் சுவாச நோய்கள் இன்னொரு கொரோனா பாதிப்பாக உருவாக வாய்ப்பில்லை.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம்.மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு
உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தில், மிகப்பெரிய ஜமீன்தாரரான ராஜா தயா பகவதி பிரதாப் சிங் அவர்களுக்கு மகனாகப் பிறந்தவர் விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற வி.பி. சிங் அவர்கள்.
கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டார்; சர்வோதய சமாஜில் இணைந்தார், பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்தார், தனது நிலங்களையே தானமாக வழங்கினார்.
1969-ஆம் ஆண்டு உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். பின்னர் உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராகவும், ஒன்றிய வர்த்தக அமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
தேசிய முன்னணியை உருவாக்கி 1989-ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது பட்டியலின, பழங்குடியினருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தனி இடஒதுக்கீடு தரப்பட்டது.
ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தரப்படவில்லை.
இதனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப் பட்டோர் ஆணையம்தான் B.P. மண்டல் தலைமை யிலான ஆணையம். சமூகரீதியாகவும், கல்வியிலும் பின்தங் கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்துக்கு, B.P. மண்டல் பரிந்துரையின் ஒன்றிய அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற உத்தரவை அமல்படுத்தியவர் வி.பி. சிங் அவர்கள்.
வி.பி.சிங் அவர்கள் பதவியிலிருந்த 11 மாத காலத்தில், பிற்படுத்தப்பட்ட
மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான தொடக்கப் புள்ளி, வேலை உரிமையை அரசியல் சாசன உரிமை ஆக்கியது, தேர்தல் சீர்திருத்தங்கள், மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில், தேசியப் பாதுகாப்புக் குழு, உழவர்கள் பிரச்சினையைத் தீர்க்க மூன்று குழுக்கள், டெல்லி குடிசைப் பகுதி மக்களுக்கு வாழ்விடங்கள், அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (MRP) அச்சிடுதல் போன்றவற்றை செயல்படுத்திய மாபெரும் சாதனையாளர் ஆவார்.
தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப் பிரச்சினையான காவிரி நீருக்காக நடுவர் மன்ற ஆணையத்தை அமைத்துத் தந்ததோடு, சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத் திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத் திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டிய பெருமைக்குரியவர் வி.பி.சிங் அவர்கள்.
உயர்வர்க்கத்தில் பிறந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் சிந்தித்தவர், எத்தனை உயர் பதவி வகித்தாலும் கொள்கையை விட்டுத் தராதவர் வி.பி. சிங் அவர்கள்.
இத்தகைய ஒப்பற்ற தலைவரான வி.பி.சிங் அவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், அவருக்குத் தமிழ்ச் சமுதாயத்தின் நன்றியைத் தெரிவிக்கும் வகையிலும் முதலமைச்சர் அவர்கள் 20.4.2023 அன்று சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், சமூகநீதிக் காவலர், மேனாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், சென்னையில் அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் 52 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் முழு திருவுருவச் சிலையை சிறப்பு விருந்தினரான உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் அவர்களின் துணைவியார் திருமதி சீதா குமாரி, மகன் அஜயா சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மருத்துவர் இரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
--------------------------